28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
26 1
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய கல்வி-சாராத செயல்பாடுகள்!!!

குழந்தைகள் என்றாலே குதூகலமானவர்கள் மற்றும் சுறுசுறுப்பானவர்கள் என்பது நினைவுக்கு வரும். எதைப் பார்த்தாலும் அது என்ன, இது என்ன, இது என்ன செய்யும், ஏன் செய்யும் என்று கேள்விகளாலும் நம்மைத் துளைத்து விடுவார்கள். அவர்கள் பள்ளிக்கு சென்று வந்ததும் பையை கீழே போட்டு விட்டு, நண்பர்களுடன் பட்டம் விடச் செல்வதும், கபடி, கில்லி விளையாடச் செல்வதும் அவர்களுடைய பொழுதுபோக்குகளாக இருக்கும்.

ஆனால், இந்த விளையாட்டுக்களை பழங்கதைகளாக்கி விட்டு, பள்ளி நேரத்திற்குப் பின்னர், வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு, கம்ப்யூட்டர் கேம்களை விளையாடுபவர்களையே நாம் இன்று காண முடிகிறது. பொதுவாகவே இதனை நல்ல பழக்கம் என்று சொல்ல முடியாது. எனவே, உங்களுடைய குழந்தைகள் தங்களுடைய ஓய்வு நேரங்களை பயனுள்ள வகையில் கழிக்க ஏற்ற பல்வேறு கல்வி-சாராத விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டியது பொறுப்புள்ள பெற்றோரான உங்களுடைய தலையாய கடமையாகும்.

இதோ உங்களுடைய லிட்டில் சாம்பியனுக்கான சில கல்வி-சாராத விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

மதிப்புமிக்க வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொள்ளுதல்

வெளிப்புற செயல்பாடுகளின் போது குழந்தைகள் தங்களை பல்வேறு விதமான விருப்ப செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்வதால், அவர்களுடைய எதிர்கால வளர்ச்சிக்கு அது உதவுகிறது. விளையாட்டு மற்றும் விளையாட்டு உணர்வு ஆகியவற்றால் போட்டிகளின் போது உன்னதமான குழு உணர்வை குழந்தைகள் பெறுவார்கள்.

சமூக வளர்ச்சி

ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் திறன்களே மிகவும் முக்கியமான சமூக திறன்களாக கருதப்படுகின்றன. இது போன்ற கல்வி-சாராத செயல்பாடுகளின் மூலம், குழந்தைகள் புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்ளவும் மற்றும் அவர்களுடன் தொடர்பு கொள்ளவும் செய்கின்றனர். குழுவாக செயல்படுவதற்கும், குழுவில் ஏதாவதொரு வழியில் பங்களிப்பை அளிக்கவும் இந்த செயல்பாடுகள் குழந்தைகளுக்கு உதவுகின்றன. பொது இடங்களில் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் மற்றும் செயல்பட வேண்டும் என்பதை பயிற்றுவிக்கும் திறன்களாக இந்த சமூக வளர்ச்சி திறமைகள் உள்ளன.

கூச்சத்தை விரட்டுதல்

வகுப்பிலுள்ளவர்களின் முன் நின்று கொண்டு பேசவோ அல்லது ஒரு பாடலை பாடுவதையோ உங்களுடைய குழந்தை கடினமான விஷயமாக நினைக்கிறாளா? ஆமாம் என்றால், கலை, பாட்டு பாடுதல் மற்றும் நடனம் ஆடுதல் போன்ற கல்வி சாராத செயல்பாடுகளை உங்களுடைய குழந்தைக்கு பிறரின் முன் நின்று பேசும் தைரியத்தையும், கவனத்தையும் கொடுக்கும். உடனடியாக இதனை தொடருங்கள்.

உடல் வளர்ச்சி

காலை நேரங்களில், உடற்பயிற்சி செய்ய ஊக்கமில்லாதவனாக உங்களுடைய குழந்தை இருக்கிறானா? அவனுடைய ஒட்டுமொத்த உடல் வளர்ச்சி பற்றி நீங்கள் கவலை கொண்டிருக்கிறீர்களா? அவனை விளையாட்டுகளில் ஈடுபடுத்துவதே இதற்கான சரியான தீர்வாக இருக்கும். இதன் மூலம் உங்களுடைய குழந்தை அதிகமான உடற்பயிற்சிகள் செய்வதால், உடல் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் பராமரித்திடச் செய்ய முடியும்.

கல்வி செயல்பாட்டை மேம்படுத்துதல்

குழந்தைகளை கல்வி-சாராத செயல்பாடுகளில் ஈடுபடுத்தினால் அவர்களுடைய வகுப்பறைக் கல்வியில் தொய்வு ஏற்படும் என்று சில பெற்றோர்கள் கருதுகிறார்கள். ஆனால், பள்ளி நேரத்திற்குப் பின்னர், கல்வி-சாராத செயல்பாடுகளில் ஈடுபடும் குழந்தைகள், மற்ற குழந்தைகளை விட சிறப்பான தேர்ச்சியை வகுப்பறை பாடங்களில் பெறுகிறார்கள் என்பது தான் உண்மையாகும். கல்வி-சாராத செயல்பாடுகள் குழந்தைகளுடன் கற்றல் திறனை மேம்படுத்துவதால், அவர்கள் அதிகமான தேர்ச்சி விகிதங்களைப் பெற முடிகிறது.

நேர மேலாண்மையை கற்றுக் கொடுத்தல்

குழந்தைகளுக்கு கல்வி-சாராத செயல்பாடுகளை கற்றுக் கொடுப்பதால், அவர்களிடம் நேர மேலாண்மை திறன் மற்றும் எதை முன்னால் செய்வது, எதை பின்னால் செய்வது என்று நிர்ணயித்துக் கொள்ளும் திறனும் வளரும். குழந்தைப் பருவத்தில் பள்ளி-சாராத செயல்பாடுகளில் ஈடுபட்டவர்களில் பல பேர், பெரியவர்கள் ஆனதும் தங்களுடைய வாழ்வில் பல்வேறு விஷயங்களைத் திறமையுடன் கையாளுவார்கள்.

மன அழுத்தத்தைக் குறைத்தல்

வீட்டுப்பாடங்கள், வகுப்பறைத் தேர்வுகள் மற்றும் பரீட்சைகள் ஆகியவற்றால் குழந்தைகள் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இதனால் அழுத்தமுற்றிருக்கும் குழந்தைகளால் படிப்பிலோ அல்லது தங்களுடைய தொடர்ச்சியான வேலைகளிலோ கவனம் செலுத்த முடியாது. இந்நேரங்களில் அவர்கள் செய்யும் கல்வி-சாராத பணிகள் அவர்களுடைய மனதிற்கு ஓய்வையும், புத்துணர்வையும் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

Related posts

பீர் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

nathan

தெரிஞ்சிக்கங்க…யார் யாரெல்லாம் வெந்தயத்தை முளைகட்ட வைத்து சாப்பிட வேண்டும்?

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தைகளின் நியாபக சக்தி அதிகரிக்க, தினமும் இதை 2 முறை செய்தாலே போதும்!

nathan

உங்கள் குணநலன்களுக்கு பொருத்தமான ஆத்ம துணை யார்?

nathan

உங்களுக்கு தெரியுமா முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?தெரிந்துகொள்வோமா?

nathan

கைரேகையை வைத்து எத்தனை குழந்தைகள் என கண்டுபிடிக்கலாம் என தெரியுமா..?

nathan

தினந்தோறும் திராட்சை பழம் சாப்பிடுங்கள்! கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் போது பெற்றோர்கள் செய்யும் முக்கிய தவறுகள்!

nathan

இந்த 5 ராசிக்காரங்க தன்னம்பிக்கை இல்லாதவங்களா இருப்பாங்களாம்…தெரிந்துகொள்வோமா?

nathan