23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
plums
ஆரோக்கிய உணவு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் ப்ளம்ஸ் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

கர்ப்ப காலத்தில் பெண்கள் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் அந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் போதும் கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில் கர்ப்பிணிகள் சாப்பிடும் பழங்களில் ஒன்று தான் ப்ளம்ஸ். இந்த பழம் சிறியதாக இருந்தாலும், இப்பழத்தில் எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

தற்போது மார்கெட்டுகளில் ப்ளம்ஸ்களில் பல வெரைட்டிகள் விற்கப்படுகின்றன. அதில் சில ப்ளம்ஸ்களில் சர்க்கரையானது அதிகம் இருக்கும். இவை கர்ப்பிணிகளுக்கு உகந்தது அல்ல. எனவே ப்ளம்ஸ் சாப்பிடும் முன் மருத்துவரிடம் சென்று எந்த ப்ளம்ஸ் சாப்பிடுவது நல்லது என்று கேட்டு தெரிந்து கொண்டு வாங்கி சாப்பிடுங்கள்.

இப்போது அந்த ப்ளம்ஸ் பழத்தை சாப்பிடுவதாலோ அல்லது ஜூஸ் போட்டு குடிப்பதாலோ கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

நீர்ச்சத்து அதிகரிக்கும்

கர்ப்பிணிகள் தங்களது உடலில் நீர்ச்சத்தின் அளவை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தண்ணீர் குடிப்பதுடன், அவ்வப்போது ப்ளம்ஸ் ஜூஸ் குடித்து வந்தால், உடலில் நீர்ச்சத்தின் அளவானது அதிகரிக்கும்.

ஆரோக்கியமான செரிமானம்

ப்ளம்ஸ் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை எடுத்துக் கொண்டால், இது செரிமான பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் மலச்சிக்கலால் அவஸ்தைப்படும் கர்ப்பிணிகள் ப்ளம்ஸ் ஜூஸ் குடிப்பது நல்ல நிவாரணத்தைத் தரும்.

வைட்டமின்கள்

ப்ளம்ஸ் பழ ஜூஸில் வைட்டமின்கள் எண்ணற்ற அளவில் உள்ளன. அதிலும் வைட்டமின் ஏ, சி மற்றும் கே அதிகம் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ பார்வைக்கும், வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றம் வைட்டமின் கே இரத்த உறைவு ஏற்படாமல் இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

கர்ப்ப காலத்தில் நோய்த்தொற்றுகளின் தாக்கத்தை தடுக்க வேண்டுமானால், ப்ளம்ஸ் ஜூஸ் குடியுங்கள். இது தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்ல பாதுகாப்பைக் கொடுக்கும். மேலும் இதில் இரும்புச்சத்து இருப்பதால், உடலில் இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்கும்.

மலச்சிக்கலைத் தடுக்கும்

நிறைய மக்கள் மலச்சிக்கல் இருக்கும் போது ப்ளம்ஸ் ஜூஸ் குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும் என்று சொல்வார்கள். அது கர்ப்பிணிகளுக்கும் பொருந்தும் என்பதால், இதனை கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லது.

ஆரோக்கியமான எலும்புகள்

குழந்தைக்கு நல்ல ஆரோக்கியமான எலும்புகளின் வளர்ச்சி வேண்டுமானால், கால்சியம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கால்சியம் பாலில் மட்டுமின்றி, ப்ளம்ஸ் பழத்திலும் உள்ளது.

ஃபோலிக் ஆசிட்

குழந்தையின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு ஃபோலிக் ஆசிட் மிகவும் இன்றியமையாதது. எனவே கர்ப்பிணிகள் ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இந்த ஃபோலிக் ஆசிட் ப்ளம்ஸ் பழத்திலும் உள்ளது.

நச்சுக்களை வெளியேற்றும்

உடலில் தங்கியுள்ள நச்சுக்களை ப்ளம்ஸ் ஜூஸ் குடிப்பதன் மூலம் வெளியேற்றலாம்.

அதிகம் வேண்டாம்

ப்ளம்ஸ் எவ்வளவு தான் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டாம். இல்லாவிட்டால், அது பிறப்புக் குறைபாட்டினை ஏற்படுத்திவிடும். எனவே அளவோடு சாப்பிட்டு அலாதியான நன்மைகளைப் பெறுங்கள்.

Related posts

நீரில் இதை 2 சொட்டு கலந்து பாதங்களை ஊற வையுங்கள்….சூப்பர் டிப்ஸ்

nathan

நீரிழிவு நோயாளிகள் வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிடலாமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

மொறுமொறுப்பான மீன் மிளகு வறுவல்!

nathan

இவை இரண்டையும் சூப் செய்து குடித்தால் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகள் ஏற்படுமாம்…..

sangika

இவ்வளவு நன்மைகளா தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் !

nathan

சர்க்கரை நோயாளி வெறும் வயிற்றில் காபி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?

nathan

சூப்பரான புத்துணர்ச்சியூட்டும் ஆப்பிள் டீ

nathan

சிறுநீரக கோளாறு, உடல் சூட்டை குறைக்கும் சுரைக்காய்

nathan

சிறந்த மருந்து மாஇஞ்சி தெரியுமா?

nathan