26.7 C
Chennai
Saturday, Feb 22, 2025
jamun
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

மார்கெட் சென்றால் நாவல் பழங்கள் அதிகம் விலை குறைவில் கிடைக்கிறதா? அப்படியானால் உடனே அதனை தவறாமல் வாங்கி வந்து சாப்பிடுங்கள். ஏனெனில் நாவல் பழத்தில் எண்ணற்ற நன்மைகளானது நிறைந்துள்ளது. மேலும் ஆயுர்வேதம் மற்றும் யுனானி போன்ற மருத்துவங்களில் இந்த பழங்களும், இதன் விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

பொதுவாக நெல்லிக்காய், கொடுக்காபுளி மற்றும் நாவல் பழத்தைப் பார்த்தால், அனைவருக்கும் பள்ளிப் பருவக் காலமும், சிறு வயது ஞாபகங்களும் வந்து, மனதில் சந்தோஷத்தைக் கொடுக்கும். ஏனெனில் சிறு வயதில் அதிலும் கிராமப்புறத்தில் வாழ்ந்தவர்கள், நிச்சயம் நெல்லிக்காய், கொடுக்காபுளி மற்றும் நாவல் பழத்தின் மரத்திலிருந்து, கல்லால் பழங்களை அடித்து சாப்பிட்டிருப்பார்கள். எனவே இவைகளைப் பார்க்கும் போது, கல்லால் அடித்து சாப்பிட்ட அனுபவம் கிராமப்புறத்தில் வாழ்ந்த ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு இனிமையான நினைவுகளாக இருக்கும்.

தற்போது அந்த பழத்தின் மரங்களை அதிகம் காண முடியாவிட்டாலும், மார்கெட் சென்றால் நிச்சயம் அப்பழங்களை அதிகம் காணலாம். எனவே தவறாமல் அந்த பழங்களை வாங்கி சாப்பிடுங்கள். இங்கு அந்த நாவல் பழத்தினால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

கல்லீரல் பிரச்சனைகள்

நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல் பிரச்சனையா? அப்படியானால் நாவல் பழத்தினால் செய்யப்பட்ட வினிகரை சரிசமமான நீரில் கலந்து கொண்டு, தினமும் இரண்டு முறை குடியுங்கள். இல்லாவிட்டால் நாவல் பழத்தினை உட்கொள்ளுங்கள்.

வாய் பிரச்சனைகள்

ஈறுகள் மற்றும் பற்களில் பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தினை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் நாவல் பழத்தின் இலையை பொடி செய்து, அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

அசிடிட்டி

அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தில் ப்ளாக் சால்ட் மற்றும் சீரகப் பொடி சேர்த்து சாப்பிடுவது நல்லது.

இரத்த அழுத்தம்

நாவல் பழத்தின் இலைகள் மற்றும் மரப்பட்டைகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும். அதற்கு அவற்றை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை பருக வேண்டும்.

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள், நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்துவிடும்.

வெண் புள்ளி நோய்

நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், அவை சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளி நோய்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும். எப்படியெனில் நாவல் பழங்களானது மெலனினை செல்களாக செய்யத் தூண்டுகிறது.

இரவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பது

உங்கள் குழந்தை இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்கிறார்களா? அப்படியானால் குழந்தைகளுக்கு நாவல் பழத்தின் விதைகளால் செய்யப்பட்ட பொடியை நீரில் கலந்து குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுங்கள். இதனால் அந்த பழக்கமானது நின்றுவிடும்.

மாரடைப்பு

நாவல் பழத்தினை அளவாக சாப்பிட்டு வந்தால், இவை தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, மாரடைப்பு வருவதைக் குறைக்கும்.

நீரிழிவு

நாவல் பழம் மற்றும் அதன் விதைகளானது ஸ்டார்ச் சர்க்கரையாக மாறுவதைக் கட்டுப்படுத்தும். மேலும் யுனானி மருத்து முறையில் நீரிழிவிற்கு இந்த பழத்தின் விதையைத் தான் முதன்மையாக பயன்படுத்துகின்றனர். எனவே இதன் விதையை பொடி செய்து, அதனை நீரில் கலந்து குடிக்கலாம். இல்லாவிட்டால், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு குடித்து வரலாம்.

குறிப்பு:

* நாவல் பழங்களை வெறும் வயிற்றில் எடுத்து வர வேண்டாம்.

* நாவல் பழங்களை சாப்பிட்ட உடனே பால் குடிக்க வேண்டாம்.

* முக்கியமாக நாவல் பழங்களை அளவுக்கு அதிகமாக எடுக்க வேண்டாம். இல்லாவிட்டால், அவை உடல் வலி மற்றும் காய்ச்சலுக்கு வழிவகுக்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா உள்ளாடை அணியும்போது நீங்க செய்யும் இந்த தவறுகள்?

nathan

கர்ப்பமாவதற்கு முன் அவசியம் செய்ய வேண்டிய 5 பரிசோதனைகள்

nathan

தாய்ப்பாலின் மகத்துவம்

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! இரத்த அழுத்தத்தை பராமரிக்க 5 சிறந்த வீட்டு வைத்தியம்..!!!

nathan

பரிசுப்பொருளை தேர்ந்து எடுப்பது எப்படி?

nathan

காணாமல் போகும் மொபைல் டேட்டா… என்ன செய்ய வேண்டும்?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தினமும் இஞ்சி சாப்பிடுவது பெண்களை எப்படி ‘அந்த’ பிரச்சினையில் இருந்து பாதுகாக்கும் தெரியுமா?

nathan

இந்த ஆபத்து வரலாம்!அடிக்கடி பட்ஸ் யூஸ் பண்றிங்களா?

nathan

உங்களுக்கு ஆண்குழந்தை பிறப்பதற்கான பத்து அறிகுறிகள் தெரியுமா.!

nathan