பெண்கள் கவலைக் கொள்ளும் விஷயங்களில் ஒன்று அவர்களது மார்பகங்கள். சில பெண்களுக்கு மார்பகங்கள் சிறியதாகவும், இன்னும் சிலருக்கு மிகவும் பெரியதாகவும் இருக்கும். இதில் சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள், தாங்கள் அழகாக, கவர்ச்சியாக இல்லை என்று தங்களைத் தாங்களே தாழ்த்தி நினைப்பதோடு, மார்பகங்களை பெரியதாக்க அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.
ஆனால் உண்மையில் பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களை விட சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் தான் அதிர்ஷ்டசாலி. ஏனெனில் சிறிய மார்பகங்களைக் கொண்டிருப்பதால், எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். இதை பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் புரிந்து நடந்து கொண்டால், உங்கள் அன்புக் காதலி/மனைவி தன்னைத் தானே தாழ்வாக நினைக்கமாட்டார்.
சரி, இப்போது பெண்களுக்கு ஏன் சிறிய மார்பகங்கள் தான் சிறந்தது என்பதற்கான காரணங்களைப் பார்ப்போமா!!!
படுக்கையில் திருப்தி
ஆய்வு ஒன்றில், பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களை படுக்கையில் திருப்திப்படுத்துவது கடினம் என்றும், அதுவே சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் படுக்கையில் நன்கு திருப்தியடைவதாக தெரிய வந்துள்ளது. இது ஒன்று போதாதா நீங்கள் சந்தோஷமடைய.
இளமைத் தோற்றம்
பொதுவாக வயதான காலத்தில் தான் மார்பகங்கள் தளர்ந்து தொங்கும். ஆனால் பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களின் மார்பகங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் விரைவிலேயே தளர்ந்து தொங்க ஆரம்பிக்கும். இதனால் முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும். அதுவே சிறிய மார்பகங்கள் என்றால் ஃபிட்டாக நீண்ட நாட்கள் காட்சியளிக்கலாம்.
அனைத்து உடைகளும் பொருந்தும்
முக்கியமாக பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களால் அனைத்து உடைகளையும் அணிய முடியாது. அப்படியே அணிந்தால், சில உடைகள் அவர்களுக்கு அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். இதனால் மற்றவர்கள் கிண்டல் செய்யவும் கூடும். அதுவே சிறிய மார்பகங்கள் கொண்டவர்களானால், அசௌகரியமின்றியும் அழகாகவும் காட்சியளிக்கலாம்.
பிராக்கள் கூட கஷ்டம்
பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களால் பிரா அணிதும் மார்பகங்கள் தொங்குவதைத் தடுக்க முடியாது. சில நேரங்களில் பிரா கழியக்கூடும். இதனால் அந்த பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். ஆனால் சிறிய மார்பகங்களைக் கொண்டவர்கள் இப்பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்காது.
முதுகு வலி
ஆய்வு ஒன்றல் பெரிய மார்பங்களைக் கொண்ட பெண்கள் அதிக அளவில் முதுகு வலியால் கஷ்டப்படக்கூடும் என்றும், சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் இப்பிரச்சனைக்கு உள்ளாவதில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
மார்பக புற்றுநோய்
முக்கியமாக சிறிய மார்பகங்களைக் கொண்டவர்களுக்கு மார்பக புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே உங்களுக்கு சிறிய மார்பகங்கள் இருந்தால், கவலைக் கொள்ளாமல் சந்தோஷமடையுங்கள்.