28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.05 2
தலைமுடி சிகிச்சை

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தலை ரொம்ப அரிக்குதா? உடனே அரிப்பை போக்கும் ஒரு துளி சாறு!

அதிகப்படியான வியர்வை, எண்ணெய் பசை போன்ற பிரச்சனைகள் கூந்தல் உதிர்வை தவிர அரிப்பு, எரிச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்தக்கூடும்.

எனவே, அரிப்பு, எரிச்சல் பிரச்சினை இருந்தால் ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்க வேண்டும்.

மேலும், தலை அரிப்பிற்கு அவை மட்டுமே காரணங்களாக இருக்க முடியாது.

அதிகப்படியான அழுக்கு, சுத்தமற்ற ஸ்கால்ப், கிருமிதொற்று, பொடுகு, பேன் தொல்லை அல்லது ஷாம்பு அழற்சி போன்ற வேறு சில காரணங்களாலும் அரிப்பு ஏற்படக்கூடும்.

தலை அரிப்பு பிரச்சனையில் இருந்து விடுபட உதவக்கூடிய சில எளிய வீட்டு வைத்தியங்களை தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

 

 

 

எதனால் அரிப்பு ஏற்படுகிறது?

 

  • தலையில் அரிப்பு தொல்லை ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து முதலில் தெரிந்து கொள்வோம்.
  • தலையில் அரிப்பு ஏற்படுவதற்கு பொதுவான காரணம் என்றால் அது பொடுகு தொல்லை தான்.
  • ஸ்கால்ப் பூஞ்சை மற்று பாக்டீரியா தொற்றுகளால் பாதிக்கப்பட்டு கூட அரிப்பு ஏற்படலாம்.
  • தலையில் பேன் இருந்தால் கடுமையான அரிப்பு தொல்லை இருக்கும்.
  • போதுமான ஈரப்பதம் இல்லையென்றால், தலையில் அரிப்பு அதிகமாக ஏற்படும்.
  • மோசமான சுகாதாரம் மற்றும் கெமிக்கல் நிறைந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களால் ஏற்படக்கூடிய நோய்தொற்றுகள்.
  • தலையில் அதிகமாக வியர்த்தால் கூட அரிப்பு அதிகமாக இருக்கும்.
  • இது தவிர, மனஅழுத்தம் மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம் கூட அரிப்பை ஏற்படுத்தக்கூடும்.
  • அரிப்பு பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்

 

எலுமிச்சைச் சாறு

கூந்தல் பராமரிப்பிற்கு எலுமிச்சை மிகவும் சிறந்தது. எலுமிச்சைச் சாற்றை ஸ்கால்ப் மற்றும் கூந்தலில் தடவி, சில நிமிடங்கள் கழித்து வெறும் தண்ணீரில் அலசிடவும். அது அரிப்பை நீக்கி, கூந்தலை வலுவாக்கும்.

கற்றாழை

கற்றாழையின் ஜெல்லை எடுத்து ஸ்கால்ப் பகுதியில் நன்கு தடவி 15 நிமிடங்கள் ஊற விடவும். பின்பு, வெறும் தண்ணீரில் கழுவிடவும். அதனால், அரிப்பு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

படுக்கும் முன் தலை சீவுதல்

தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு 5 முதல் 6 முறை தலையை சீப்பு கொண்டு சீவி விட்டு தூங்கவும். இதனால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் சீராகி, அனைத்து வித ஸ்கால்ப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.

கெமிக்கல் நிறைந்த பொருட்களை தவிர்க்கவும்

 

  1. சிறந்த ஆரோக்கியமான கூந்தலை பெற வேண்டுமென்றால், சிறந்ததொரு கூந்தல் பராமரிப்பு பொருட்களை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.
  2. கெமிக்கல் நிறைந்த ஷாம்பு, கண்டிஷ்னர் அல்லது க்ளென்சரை உபயோகிக்கின்றீர்கள் என்றால் உடனே அதை நிறுத்துங்கள்.
  3. இயற்கை பொருட்களை மற்றும் வீட்டிலேயே தயாரித்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.
  4. சல்பேட் இல்லாத ஷாம்பு பயன்படுத்துவது மட்டுமே சிறந்தது. கெமிக்கல் பொருட்கள், கூந்தலை வறட்சி அடைய செய்துவிடும். அதிகப்படியான வறட்சி கூந்தலில் பொடுகு தொல்லை ஏற்படுத்திவிடும்.

Related posts

ஆண்களே முடி எல்லாம் கொட்டி போச்சா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

பொடுகுக்கான வீட்டு சிகிச்சை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு அப்புறம் உங்களுக்கு அதிகமாக முடி கொட்டுவதை எப்படி தடுக்கலாம் தெரியுமா?

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் அற்புத ஹேர் மாஸ்க்!இத ட்ரை பண்ணி பாருங்க…….

nathan

தலைமுடி உதிர்வதை தடுக்க வேண்டுமா? இந்த சின்ன சின்ன டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

nathan

இதோ சூப்பர் டிப்ஸ்! கூந்தலில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை போக்க வேண்டுமா?

nathan

எலுமிச்சையோட இதுல ஏதாவது ஒன்னு சேர்த்து தேய்ங்க… வழுக்கையே விழாது… சூப்பர் டிப்ஸ்..

nathan

கூந்தலுக்கு ஊட்டச்சத்தையும் கொடுக்கும் செம்பருத்தி எண்ணெய்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த மிளகாயை எண்ணெயில் கலந்து தேய்ச்சா முடி நீளமா வளருமாம்…

nathan