கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

அழகுக் கூந்தலுக்கு தூயத் தேங்காய் எண்ணெய்

p98

 

எண்ணெய் தடவலாமா என்ற குழப்பம் பலருக்கு இருக்கும். எண்ணெய் தடவுவது நல்லது. ஆனால் அந்த எண்ணெய் கலப்படம் இல்லாததாக இருத்தல் அவசியம். தேங்காய்ப் பாலை எடுத்து அவற்றை அடுப்பில் கொதிக்கவிடவும். இறுதியில் கிடைக்கும் திரவமே தூயத் தேங்காய் எண்ணெய். இதைத் தடவிவர கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் சத்தாக மாறுகிறது. எண்ணெய் காய்ச்சும் போது, இறுதியில் தேங்கும் கசடை, தூக்கி எறியாமல் ஹேர் பேக்குடன் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மென்மையானக் கூந்தலைப் பெற

810 செம்பருத்தி இலைகளை 10 நிமிடங்கள் வரை தண்ணீரில் ஊறவைத்து அதைப் பசையாக மாற்றிக்கொள்ளவும். ஜெல் போல கூந்தல் முழுவதும் தடவிய பின், 1 மணி நேரம் கழித்து, கூந்தலை மிதமான ஷாம்பூவால் அலசவும். பளபளப்பான, மெண்மையான கூந்தலாக மாறியதைப் பார்க்கலாம்.

பட்டுப் போன்ற கூந்தலுக்கு

பழுத்த அவகேடோ  பாதி, தேன்  2 ஸ்பூன், தயிர்  ஒரு ஸ்பூன், முட்டை  ஒன்று, வாழைப்பழம்  பாதி, நெல்லிப் பொடி  ஒன்று டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை கலந்து பேட்ஸ்டாக்கி கூந்தலில் பூசி, ஒரு மணி நேரம் கழித்து அலசுங்கள்.

எண்ணெய்க் கூந்தல்

தினமும் தலைக்குக் குளிக்கலாம். ஷாம்பூ, கண்டிஷனரை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். கற்றாழையை நடுவில் கட்செய்து அதில் வெந்தயத்தைக் கொட்டி, பிறகு நூலில் அதைக் கட்டி ஒருநாள் இரவு அப்படியே விட்டுவிடவும். அடுத்தநாள் கற்றாழையின் சதைப் பகுதியையும், வெந்தயத்தையும் எடுத்து முட்டை, வைட்டமின் இ எண்ணெய் கலந்து, தலைமுடியில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் கழுவலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button