23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
mint
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றுவதற்கான சில இயற்கை வழிமுறைகள்!!!

நமது உடலுக்குள் படையெடுத்துச் சென்று நம்முடைய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரத்தத்தை உணவாக உண்டு உயிர் வாழும் ஜீவராசிகள் தான் ஒட்டுண்ணிகள் ஆகும். இவை உள்ளும், புறமும் என எங்கெங்கும் இருக்கின்றன. வெளியில் உள்ள ஒட்டுண்ணிகள் மனிதனின் கண்களுக்கு புலப்படுவதாகவும், பல்வேறு வழிமுறைகளில் நீக்கக் கூடியதாகவும் உள்ளன.

ஆனால் உடலின் உள்ளே உள்ள ஒட்டுண்ணிகளை கண்டறிவதும், நீக்கி அழிப்பதும் சற்றே அதிகமான முயற்சிகள் தேவைப்படும் விஷயமாகும். தலையிலுள்ள பேன்கள் மற்றும் உடலிலுள்ள பேன்கள் ஆகியவை மனிதர்களிடம் மிகவும் சாதாரணமாக காணப்படும் தொற்றுண்ணிகளாகும்.

 

தனிப்பட்ட நபர்களின் பொருட்கள், உடைகள் மற்றும் ஆடைகளின் மூலம் வெளிப்புற ஒட்டுண்ணிகள் வேகமாக பரவுகின்றன. எனவே, வெளிப்புற ஒட்டுண்ணிகள் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடும் என்பதால், அவற்றை உடனடியாக களைய வேண்டியது அவசியமாகும்.

ஓட்டுண்ணிகளை களைய வேண்டுமென்றால் நீங்கள் ஆன்டி-பயாடிக்ஸ்களை பயன்படுத்த வேண்டும். இந்த ஒட்டுண்ணிகளை உடலில் ஆழமாக ஊடுருவி அறவே ஒழிக்கும் வழிமுறைகளை வீட்டிலிருந்தே செய்ய முடியும் என்பது உங்களுக்கு கிடைக்கப் போகும் நல்ல செய்தி!

 

கேரட்

குடல்களில் உள்ள ஒட்டுண்ணிகளை அழிக்கும் எளிய வழி கேரட்டுகளை சாப்பிடுவது தான். இரண்டு கேரட்டுகளை எடுத்து சாப்பிடுங்கள் போதும். அதிலும் வெறும் வயிற்றில், காலை நேரத்தில் கேரட்டை சாப்பிடுவது நல்லது. தினமும் இவ்வாறு செய்வதன் மூலம் ஒட்டுண்ணிகளை அழிக்க முடிவதுடன், எதிர்காலத்திலும் அவற்றின் தாக்குதல்களை தவிர்த்திட முடிகிறது. அதுமட்டுமல்லாமல் உங்களுடைய கண்களை ஆரோக்கியமாகவும், தெளிவாகவும் வைத்திருக்கவும் கேரட் உதவுகிறது.

எலுமிச்சை மற்றும் புதினா

ஒரு கோப்பை புதினா சாற்றுடன், எலுமிச்சை ஜுஸ் மற்றும் சிறிதளவு கருப்பு உப்பை சேர்த்துக் கொள்ளவும். உங்களுடைய வயிற்றிலுள்ள எல்லா வகையான ஒட்டுண்ணிகளையும் நீக்கும் பொருட்டாக தினமும் இந்த கரைசலை குடியுங்கள். ஒட்டுண்ணிகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையையும் மற்றும் பல்வேறு பிரச்னைகளையும் ஏற்படுத்தி விடும் என்பதால் முழுமையான உடல் நலத்தைப் அவற்றை நீக்க வேண்டியது அவசியம்.

தேங்காய்

அரைக்கப்பட்ட தேங்காயை சாப்பிட்டால் அடிவயிற்றின் ஒட்டுண்ணிகளுக்கு அழிவு நேரும். ஒரு வாரத்திற்கு இவ்வாறு செய்து வந்தால் போதும், வயிற்றிலுள்ள ஒட்டுண்ணிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். மேலும் தேங்காய் தண்ணீரை குடிப்பதன் மூலமாகவும் நீங்கள் இதே விளைவைப் பெற முடியும். தேங்காய் தண்ணீர் மற்றும் அரைக்கப்பட்ட தேங்காயின் பலனைப் பெற்று, ஒட்டுண்ணிகளிடமிருந்து வேகமாக சுகமடையுங்கள்.

விளக்கெண்ணெய் மற்றும் பால்

ஒரு கோப்பை சூடான பாலுடன், இரண்டு தேக்கரண்டிகள் விளக்கெண்ணெயை கலக்கவும். இந்த பாலை குடிப்பதன் மூலமாக, மலம் கழிக்கும் போது ஒட்டுண்ணிகளை நீக்கி விட முடியும். வாரத்திற்கு ஒருமுறை இவ்வாறு செய்து, குடலிலுள்ள ஒட்டுண்ணிகளிடமிருந்து நிவாரணம் பெறுங்கள்.

எலுமிச்சை கொட்டைகள்

அரைக்கப்பட்ட எலுமிச்சை கொட்டைகள் வயிற்றிலுள்ள ஒட்டுண்ணிகளைக் கொன்று, அவற்றின் செயல்பாட்டை நிறுத்திவிடும். எலுமிச்சை கொட்டைகளை எடுத்து பசை போல அரைத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீருடன் இந்த பசையை கலந்து குடிக்கவும். எலுமிச்சை சாற்றுடன் கூட இதை நீங்கள் கலந்து குடிக்கலாம். மேலும், இந்த கொட்டைகளை நன்றாக மென்று விழுங்குவதன் மூலமும் எளிதான நிவாரணம் பெற முடியும்.

மாதுளை ஜுஸ்

மாதுளை சாற்றை குடிப்பதன் மூலமாக வயிற்றிலுள்ள ஒட்டுண்ணிகள் பலவற்றையும் களைந்து நிவாரணம் பெற முடியும். மாதுளையை அப்படியே சாப்பிட்டும், சாறாக பிழிந்தும் சாப்பிடலாம். தினசரி உணவில் மாதுளையை சேர்த்துக் கொண்டு ஒட்டுண்ணிகளின் தாக்குதலிலிருந்து காத்துக் கொள்ளுங்கள். வயிற்றை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பப்பாளி விதைகள்

சுவையான பப்பாளியை சாப்பிட்டு விட்டு, வேண்டாமென்று தூக்கி எறியும் கருநிற பப்பாளி விதைகள் ஒட்டுண்ணிகளை களைய உதவும் மருந்து என்றால் நம்ப முடிகிறதா? எனவே, அடுத்த முறை பப்பாளி சாப்பிடும் போது கொட்டையை தூக்கி எறிய வேண்டாம். பப்பாளி கொட்டைகளை அரைத்து பசை போல உருவாக்கி, பழத்துடன் சேர்த்து அவற்றையும் சாப்பிடுங்கள். வயிற்றிலுள்ள ஒட்டுண்ணி புழுக்கள் உடனடியாக சுத்தம் செய்யப்படுவதை உணருங்கள்.

தக்காளிகள்

இரண்டு தக்காளிகளை அறுத்து விட்டு, அதனுடன் கருப்பு உப்பு மற்றும் மிளகை சேருங்கள். ஓவ்வொரு நாளும் இதை சாப்பிட்டு பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணி தொற்றுகளை வயிறு மற்றும் உடலிலிருந்து நீக்கி சுக் பெறுங்கள். தக்காளியை அப்படியே சாப்பிடவும், சாலட் ஆக செய்து சாப்பிடவும் முடியும்.

பூண்டு

மோசமான நறுமணத்தைக் கொண்டிருந்தாலும் ஒட்டுண்ணிகளை விரட்டுவதில் பூண்டுக்கு நிகரில்லை. பூண்டு பாக்டீரிய மற்றும் பூஞ்சைகளுக்கு எதிரான குணங்களை கொண்டிருப்பதால், உடலிலுள்ள தேவையற்ற ஒட்டுண்ணிகளை கொல்லுவதில் சிறப்பான பணியை செய்கிறது. பூண்டின் சில மொட்டுக்களை எடுத்து ஒவ்வொரு நாளும் மென்று தின்றால், ஒட்டுண்ணிகளை ஓட ஓட விரட்ட முடியும்.

மோர் மற்றும் தயிர்

வயிற்றில் ஆரோக்கியமான பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் ஒட்டுண்ணிகளை கொல்லவும் மற்றும் கேன்டிடா தொற்றுக்களை நீக்கவும் முடியும். இதன் மூலம் ஒட்டுண்ணிகள் மற்றும் பூஞ்சைகளை விரட்டவும் முடியும். தினமும் ஒரு கோப்பை மோர் அல்லது தயிரை சாப்பிட்டு வந்தால் உங்களுடைய வயிறு இந்த தொற்றுகளிலிருந்து விடுதலை பெறவும் மற்றும் மோசமான பாக்டீரியாக்கள் பெருகுவதை தடுக்கவும் முடியும்.

பச்சைக் காய்கறி ஜுஸ்

பச்சைக் காய்கறிகளை சாறாக பிழிந்து குடிப்பதால் நமது உடலுக்கு எண்ணற்ற நற்பலன்கள் கிடைக்கின்றன. காய்கறி சாறுகளில் உள்ள அவசியமான ஊட்டச்சத்துக்களை நமது உடல் ஈர்த்துக் கொள்ளும். இவற்றுடன் சேர்த்து, இந்த சாறுகளில் உள்ள ஆக்சிஜன் எதிர்பொருட்களும் உள்ளே செல்வதால் இரத்த செல்களை சுத்திகரிக்கும் பணி ஊக்குவிக்கப்படுகிறது. இதன் மூலம் உடலிலுள்ள ஒட்டுண்ணிகள் மற்றும் நச்சுப் பொருட்கள் நீக்கப்பட்டு விடுகின்றன.

ஜீரணத்திற்கான என்ஸைம்களை பச்சைக் காய்கறிகள் கொண்டிருப்பதால் ஒட்டுண்ணிகள் மற்றும் கேண்டிடா போன்றவற்றை அழித்திட முடியும். கேரட், கீரை, செலரி மற்றும் வெள்ளரிக்காய் போன்ற ஜுஸ்களிலும் கூட பச்சைக் காய்கறி சாற்றை கலந்து குடிக்கலாம்.

அரிசி வினிகர்

பல்வேறு வகையிலான பிரச்சனைகளுக்கு நிவாரணியாக வினிகர் உள்ளது. ஒரு தேக்கரண்டி அரிசி வினிகருடன், ஒரு கிளாஸ் தண்ணீரை கலக்கவும். வினிகரின் அமிலத்தன்மை அதிகமாக இருப்பது நலம். இதனை தினமும் குடித்து வயிற்றிலுள்ள ஒட்டுண்ணிகளை அழித்திடுங்கள். கடுமையான ஒட்டுண்ணி தாக்குதலுக்கு நீங்கள் ஆளாகி இருந்தால், தினமும் 3-4 டம்ளர்களை குடிப்பது நல்லது.

இலவங்கம்

இலவங்கப் பட்டையில் உள்ள நுண்ணுயிரிகளுக்கு எதிரான குணம் குடலிலுள்ள ஒட்டுண்ணிகளை விரட்ட உதவும். இவை ஒட்டுண்ணிகளையும், அவற்றின் முட்டைகளையும் அழித்து விடுவதால், ஒட்டுண்ணிகள் பல்கிப் பெருகுவது தவிர்க்கப்படுகிறது. தினமும் 1-2 இலவங்கப்பட்டைகளை வாயில் போட்டுக் கொண்டு ஒட்டுண்ணிகளை உடலிருந்து சுத்தம் செய்யுங்கள்.

மஞ்சள்
மஞ்சள்
பல்வேறு வகையிலான மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கும் மஞ்சள் ஒட்டுண்ணிகளின் தாக்குதலுக்கும் பதில் சொல்கிறது. தினமும் சாப்பிடும் உணவிலோ அல்லது நேரடியாக தண்ணீரில் கலந்தோ குடித்து வந்தால், ஒட்டுண்ணிகளுக்கு எதிராக மிகவும் திறமையான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க… இந்த நோய் உடனே தீரும்…

nathan

காது குடையும் பழக்கம் நல்லதா?

nathan

புற்றுநோய்க்கு… மருந்தாகும் மசாலா பொருட்கள்!

nathan

வீட்டுக்கு தேவை வெளிச்சம்

nathan

தெரிந்துகொள்வோமா? உலகையே அச்சுறுத்தும் நீரிழிவு நோயை எப்படி விரட்டுவது?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கால்சியம் குறைபாடுகளின் அறிகுறிகளும்… தீர்வுகளும்…

nathan

பெண்ணின் கரு முட்டை

nathan

இதயம் பத்திரம்! ஒரு வழிகாட்டி

nathan

வெண்மையான பற்கள் வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan