31.3 C
Chennai
Thursday, May 15, 2025
aiswarya rajesh
Other News

கசிந்த தகவல் !அந்த தமிழ் இயக்குனர் படுக்கைக்கு கூப்பிட்டு போகாததால் 3 வருஷம் படமே இல்லை..குமுறும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

தமிழ் சினிமாவில் தற்போது கதாநாயகிகளை மையப்படுத்தி வெளிவரும் பெரும்பாலான படங்களில் நாயகியாக நடிப்பது ஐஸ்வர்யா ராஜேஷ்(aishwarya rajesh) மட்டும்தான். இவரது நடிப்பில் வெளிவந்த கனா படம் இவருக்கு உள்ள ஒரு திறமையை வெளிப்படுத்தியது.

கதைக்கு முக்கியத்துவம் என்றால் கவர்ச்சி மட்டும் இல்லாமல் உதட்டோடு உதடு முத்தம் காட்சியாக இருந்தாலும் தைரியமாக நடிக்கும் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருப்பதால் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தமிழ் சினிமாவில் நாயகியாக மாறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்த நேரத்தில் பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷை படுக்கைக்கு அழைத்து போகாததால் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் பட வாய்ப்பு இல்லாமல் செய்து விட்டதாக அவர் சமீபத்திய நாளிதழ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னராக வலம் வந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பிறகு அவ்வப்போது சில படங்களில் நடித்தாலும் அட்டகத்தி படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த காக்கா முட்டை படம் சினிமாவில் இவருடைய முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்தது.

விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் ஆகியோர்களின் ஃபேவரிட் நாயகியாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து அவரது படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு கொண்டிருக்கும்போது ஒரு தமிழ் டாப் இயக்குனரிடம் சென்றாராம்.

அப்போது அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்க தகுதி இல்லை எனவும், அட்ஜஸ்ட் செய்தால் காமெடி நடிகருக்கு ஜோடியாக வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறினாராம். ஆனால் முன்னணி நாயகியாக மட்டுமே நடிக்க விரும்பிய ஐஸ்வர்யா ராஜேஷ் அதை மறுத்து விட்டாராம்.

இதனால் அந்த இயக்குனர் மற்ற இயக்குனர்களிடம் கூறி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் படங்கள் இல்லாமல் ஐஸ்வர்யா ராஜேசை அலைய வைத்தாராம். தற்போது தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்திய பேட்டியில் இதனை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அது என்னமா, எப்ப பாரு இயக்குனர் என்று சொல்றீங்க, பேரை மட்டும் சொல்ல மாட்றீங்க..

Related posts

இடியாப்பத்தால் குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்… ரூ.20 லட்சம் அபராதம்

nathan

சொந்த கிராமத்தில் பொங்கலை கொண்டாடிய நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா

nathan

குருவாயூர் கோயிலுக்கு தங்கக் கிரீடம் வழங்கிய துர்கா ஸ்டாலின்..! 14 கிலோ எடை..

nathan

பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்த தினேஷ்

nathan

இந்திய நடிகருக்கு தபால் தலை -கௌரவித்த அவுஸ்திரேலியா!

nathan

அடேங்கப்பா! முதல் முறையாக கவர்ச்சி இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்ட அஞ்சனா ரங்கன் !

nathan

டிடியின் விவாகரத்துக்கு காரணம் பாடி டிமாண்ட்! பகீர் கிளப்பும் பயில்வான்!

nathan

எலிமினேட் ஆன போட்டியாளரை மிக தரக்குறைவாக பதிவிட்ட விஜய் டிவி!

nathan

விஜய் சேதுபதி மகன் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தின் புகைப்படங்கள்

nathan