23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
cvrpic 153
ஆரோக்கியம் குறிப்புகள்

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஜிம்மிற்கு போகாமலே உடல் எடையை கச்சிதமாக வைத்து கொள்ள இதையெல்லாம் சாப்பிடுங்க…!

உணவின் மேல் நமக்கு இருக்கின்ற அளவுக்கு அதிகமான பிரியம், நம் உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. இந்த பிறவியின் பெரும் பலனை அனுபவிக்க ஆரோக்கியமான உணவை சாப்பிட்டாலே போதுமானது. ஆனால், இன்றைய உணவு முறை மிகவும் சீர்கேடு அடைந்துள்ளது. உணவின் முழு தன்மையும் பரிணாம வளர்ச்சியில் வேறுபட்டு வந்துள்ளது. அந்த வகையில் நாம் இன்று சாப்பிடும் பெரும்பாலான உணவு வகையில் சத்துக்கள் மிகவும் குறைந்துள்ளது.

ஃபாஸ்ட் ஃபூட்ஸ் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு அதிகம் ஆகி கொண்டே போகிறது. இவை உடல் பருமனை அதிகமாக்கி எண்ணற்ற நோய்களை உடலுக்கு தரும். இந்த பதிவில் உடல் எடையை எளிமையாக குறைக்க செய்ய என்னென்னெவெல்லம் சாப்பிடலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

ஏன் எடை கூடுகிறது..?

அதிகமாக சாப்பிட்டு, ஒரே இடத்தில உட்கார்ந்து கொண்டு, எந்த ஒரு வேலையையும் செய்யாமல் இருந்தால் உடல் எடை கூடத்தான் செய்யும். இவை உடல் எடை கூட சாதாரண காரணியாக கருதப்படுகிறது. சத்தற்ற உணவுகளையும், கெட்ட கொழுப்புகள் அதிகம் கொண்ட உணவுகளையும் சாப்பிட்டால் அவை நிச்சயம் உடல் நல குறைப்பாட்டை தந்து விடும்.

வேக வைத்த முட்டை

முட்டையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உடல் எடை குறைக்க விரும்புவோர் முட்டையை தங்களது டயட்டில் சேர்த்து கொள்ளலாம். குறிப்பாக காலை உணவில் முட்டையை சேர்த்து கொண்டால் நல்ல பலனை பெறலாம். ஏனெனில் இவற்றில் குறைந்த அளவே கலோரிகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

காலே, முளைக்கீரை

பொதுவாக கீரை வகைகள் சிறந்த உணவாக கருதப்படுகிறது. அதிலும் முளைக்கீரை மற்றும் காலே போன்ற பச்சை கீரைகள் அருமையான உடல் எடை குறைப்பு உணவாகும். இவற்றில் குறைந்த அளவே கலோரிகளும், கார்போஹைடிரேட்களும் உள்ளன. எனவே, உடல் எடை குறைக்க விரும்புவோர் இந்த கீரை வகைகளை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

ப்ரோக்கோலி

உடல் எடையை எளிமையாக குறைக்க இந்த ப்ரோக்கோலி உதவுகிறது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம் இருக்கின்றன. இவற்றில் உள்ள புரதச்சத்தும், நார்ச்சத்தும் உங்கள் டயட்டில் நல்ல பலனை தருமாம். மேலும், இவை எதிர்ப்பு சக்தியையும் உடலில் அதிகரிக்கும்.

கோழியின் மார்பகங்கள்

ஒரு சில இறைச்சி வகைகளை மட்டுமே உடல் பருமன் அதிகமாக உள்ளோர் எடுத்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்த கோழி இறைச்சியும் அடங்கும். ஆனால், கோழியின் முழு பாகங்களும் இதில் சேராது. கோழியின் மார்பக பகுதியை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையுமாம்.

வேக வைத்த உருளை கிழங்கு

உருளை கிழங்கை பொரித்தோ அல்லது வறுத்தோ சாப்பிட்டால் மட்டுமே உடல் எடையை கூட செய்யும். மாறாக இதனை வேக வைத்து சாப்பிட்டால் நல்ல பலனை அடையலாம். இவற்றில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி உடலின் செயல்பாட்டை சீராக வைக்கிறது.

பீன்ஸ்

உடல் எடையை குறைக்க உதவும் காய்கறிகளில் இந்த பீன்ஸும் முக்கிய பங்கை வகிக்கிறது. இவற்றில் ஏராளமான ஊட்டசத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக இவற்றில் உள்ள பீன்ஸ் விதைகளை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். ஏனெனில், இதில்தான் அதிக நலன்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

முழு தானியங்கள்

நீங்கள் உண்ணும் உணவில் முழு தானிய உணவுகளை சேர்த்து கொண்டால் நலனை பெறலாம். இவற்றில் எண்ணற்ற நார்ச்சத்துக்கள் இருப்பதால், உடலின் எடையை கூட்டாமல் வைத்து கொள்ளும். தானிய வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவிலே உடல் பருமன் குறைந்து விடும்.

பழுப்பு அரிசி

முற்றிலுமாக மாறுபட்ட வெள்ளை அரிசியை நாம் அன்றாடம் சாப்பிட்டு வந்தால் அது நம் உடல் நலத்தை கெடுத்து விடும். சத்தற்ற வெள்ளை அரிசியை சாப்பிடுவதால் பெரிய பலன் ஒன்றும் கிடைக்க போவதில்லை. மாறாக பழுப்பு அரிசியில் பல்வேறு ஊட்டசத்துக்களும், குறைந்த கலோரிகளும் உள்ளன. எனவே, விரைவிலே இவை உடல் எடை குறைப்பிற்கு உதவும்.

சியா விதைகள்

ஊட்டசத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளில் இந்த சியா விதையும் ஒன்று. இவை மிக குறைந்த அளவே கார்ப்ஸை கொண்டது. அத்துடன் இதில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவற்றை நீரிலோ அல்லது பழச்சாற்றுடன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையுமாம்.

தேங்காய் எண்ணெய்

மற்ற எண்ணெய் வகைகளை காட்டிலும் தேங்காய் எண்ணெய்யை சமைக்க பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. குறிப்பாக இவை வயிற்றின் கொழுப்புகளை குறைக்க உதவுமாம். எனவே, உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

ஓட்ஸ்

சத்தான உணவுகளில் ஓட்ஸ் மிக முக்கிய ஒன்றாகும். காலை உணவாக ஓட்ஸை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் குறைய தொடங்கும். குறிப்பாக இவற்றில் உள்ள பீட்டா-க்ளுட்டன் என்ற நார்சத்து செரிமானத்தை அதிகரித்து, உடல் எடையை குறைக்க செய்கிறது.

பயிறு வகைகள்

மிக குறைந்த நாட்களில் உடல் எடையை குறைக்க விரும்பினால் உணவில் பயிறு வகைகளை சேர்த்து கொள்ளுஙங்கள். பச்சை பயிறு, பட்டாணி போன்றவை அதிக நார்சத்து மற்றும் புரசத்து கொண்டவை. எனவே, இவை மிக சீக்கிரத்திலே உடல் எடையை குறைத்து விடும்.

மீன்

மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை உடல் பருமனாக இருப்பவர்களுக்கு பெரிதும் உதவுகிறது. இவற்றில் அதிகமான புரசத்து இருப்பதால், உடல் எடையை கூட செய்யாது. மாறாக இவை உடலுக்கு அதிக வலிமையை தந்து கச்சிதானமான உடல் அமைப்பை தரும்.

மேற்சொன்ன உணவு வகைகளை சாப்பிட்டு அழகான உடல் அமைப்பை பெறுங்கள் நண்பர்களே. அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடியின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

Related posts

புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் டைகர் நட்ஸ் பற்றி தெரியுமா ?

nathan

உடல் செயல்பாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான நுண்சத்து, ‘வைட்டமின் டி’

nathan

சூப்பர் டிப்ஸ்.. சமையல் டிப்ஸ்..

nathan

அதிகமுறை சூடேற்றி சாப்பிடக்கூடாத 5 உணவுகள்

nathan

வாங்க பார்க்கலாம்! உங்கள் ராசிக்கு காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?

nathan

இந்த ராசிக்காரர்கள் தங்கள் முன்னாள் காதலில் இருந்து வெளிவர ரொம்ப ரொம்ப கஷ்டப்படுவார்களாம்!

nathan

சூப்பர் டிப்ஸ்.. பிரயாணத்தின் போது வாந்தியை நிறுத்த !!!

nathan

மனித உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைக்கும் உணவுகள்

nathan

நுகரும் திறனை வைத்து உங்கள் வாழ்நாளை எப்படி கணக்கிடுவது என உங்களுக்கு தெரியுமா??

nathan