காலை வேளையில் வித்தியாசமாகவும், அதே சமயம் ஈஸியாகவும் இருக்குமாறான காலை உணவு செய்ய விரும்பினால், கேழ்வரகு இடியாப்பம் ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள். இந்த ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவாறு இருப்பதுடன், அவர்களுக்கு ஆரோக்கியத்தையும் தரும்.
சரி, இப்போது அந்த கேழ்வரகு இடியாப்பம் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – 1 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – 1 சிட்டிகை
சர்க்கரை – 5 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, உப்பு மற்றும் சர்க்கரை போட்டு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த மாவை இடியாப்ப அச்சில் வைத்து, இட்லி தட்டில் பிழிய வேண்டும்.
பின்பு அதனை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் மூடி வைத்து, இறக்கினால் சுவையான கேழ்வரகு இடியாப்பம் ரெடி!!! இதனை தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும்.