மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய 6 அழகு சாதனங்கள்!

பல ஆண்டுகளுக்கு முன், ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளில் வெற்றியடைந்து கொண்டிருந்த சமயத்தில், தாயின் கருப்பையை பல விதங்களில் பாதிக்கக்கூடிய பல்வேறு இரசாயனங்களையும் கண்டறிந்திருக்கிறார்கள்.

புதிய உயிரை இவ்வுலகிற்கு கொண்டு வருவது எத்தகைய மகோன்னதமான உணர்வைக் கொடுக்கும் என்பதை உணரும் அதே வேளையில், அந்த அனுபவத்தை மேலும் அற்புதமானதாக ஆக்க வேண்டியதும் நம் கடமை என்பதை புரிந்து கொண்டு செயல்படுவது மிகவும் அவசியம். பிரசவத்தை பாதுகாப்பான ஓர் நிகழ்வாக்கிட பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ள அழகு சாதனங்களை அறவே தவிர்க்கப் பாருங்கள்.

ஆடம்பர அழகுப் பொருட்கள்

ஆண்களே ஓர் நற்செய்தி! கர்ப்ப காலத்தின் போது ஆர்கானிக் பொருட்கள், அரிப்பை உண்டாக்கி சருமத்தை பாதிக்கும் என்று கூறி, அவற்றை உபயோகிப்பதை அறவே தவிர்க்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். மேலு குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்ட பொருட்களை வாங்கி உபயோகிக்கும் படி அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இது பணத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பக்க விளைவுகளையும் குறைக்கும்.

சருமத்தின் கருமையைப் போக்கும் வழிமுறைகள்

ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன், டிஹெச்ஏ (டைஹைட்ராக்ஸிஅசிடோன்) என்ற இரசாயனத்தை, சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உபயோகித்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் கர்ப்ப காலத்தைப் பற்றி பேசுகையில், நம் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி கட்டாயம் கூறியாக வேண்டும். வெயிலில் பல மணிநேரம் இருப்பதன் மூலம் சருமத்தின் கருமையைப் போக்கும் வழிமுறை, சரும புற்றுநோயை உருவாக்கும். அதிலும் முக்கியமாக, கர்ப்ப காலத்தின் போது உடல் பலவீனமாக இருப்பதினால், பல்வேறு நோய்களும் எளிதில் தொற்றிக் கொள்ளும் அபாயமும் இருக்கும். கருமையடைந்த சருமப் பகுதிகளில் ஸ்ப்ரே உபயோகிப்பது கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும். எனவே, கர்ப்ப காலத்தின் போது இது போன்ற சிகிச்சைகளை தவிர்க்க வேண்டியது மிகவும் முக்கியம்.

சருமத்தை வெளுப்படையச் செய்யும் சாதனங்கள்

சருமத்தை வெளுப்படையச் செய்யக்கூடிய சாதனங்களில் கலந்திருக்கும் அதிக அளவிலான இரசாயனங்கள் என்ஸைமாட்டிக்கை பாதித்து, உங்கள் சருமத்தை கருப்படையச் செய்யும். ஆகவே குழந்தையை பிரசவிக்கும் வரையில் கர்ப்பிணிப் பெண்கள் இது போன்ற பொருட்களை உபயோகிக்காதிருப்பது நலம். மேலும் குழந்தை பிறப்பிற்குப் பின் அவர்கள் இது போன்ற அழகு சாதனங்களை உபயோகித்து தாங்கள் விரும்பியவாறு தங்கள் சருமத்தை அழகுபடுத்திக் கொள்ளலாம்.

முடியை அகற்றுதல்

உடலில் உள்ள தேவையற்ற முடியை அகற்றுவதற்கு உபயோகிக்கப்படும் பொருட்களில் இருக்கக்கூடிய தையோகிளைக்கோலிக் ஆசிட் எனப்படும் வேதிப்பொருள் கர்ப்ப காலத்தின் போது உபயோகிப்பதற்கு பாதுகாப்பானது அன்று. இது போன்ற அபாயகரமான இரசாயனப் பொருட்களை உபயோகிப்பதைக் காட்டிலும், உங்கள் உடலிலிருந்து தேவையற்ற முடியை அகற்றுவதற்கு உங்கள் துணைவரின் உதவியை நாடுவது நலம். இது அவர் உங்களுடன் இணக்கமாக இருப்பதற்கு உதவுவதுடன், இது போன்ற அழகான தருணங்கள் அளிக்கும் பரவசமான உணர்வை உளமார அனுபவிக்கவும் அவருக்கு உதவும்.

அதீதமான வாசனைத் திரவியங்கள்

சில நேரங்களில், பெண்கள் சிலர் பல்வேறு வகையான வாசனைகள் நிரம்பிய கூட்டுக்குள் அடைந்து கிடப்பதையே மிகவும் விரும்புவதை பார்த்திருக்கலாம். எனினும், கர்ப்ப காலம் என்று வரும் போது, இது போன்ற அதீதமான வாசனைகள் கருவிலிருக்கும் குழந்தையின் ஹார்மோன் வளர்ச்சிக்கு எதிராக செயல்பட்டு அதனை பாதிக்கும். அதனால் பெர்ஃப்யூம்கள், டியோடரண்ட்டுகள், ரூம் ஃப்ரெஷனர்கள் போன்ற வாசனைத் திரவியங்களின் அபரிமிதமான உபயோகத்தை அறவே ஒதுக்கி விடுவது நலம்.

டாட்டூக்கள் (பச்சை குத்துதல்)

நீங்கள் டாட்டூ விரும்பியாக இருந்து, உங்களுக்கு விருப்பமான டாட்டூக்களை உடம்பில் குத்திக்கொள்ள ஆசைப்படுவதில் பாதகம் ஒன்றுமில்லை. ஆனால், நீங்கள் கருத்தரித்திருக்கும் பட்சத்தில், உங்கள் உடலில் டாட்டூ குத்துவது உகந்ததல்ல. ஆரோக்கியமான குழந்தையை பிரசவிக்கும் வரையில் நீங்கள் பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும். டாட்டூ குத்துதல் உங்கள் உடலுக்கு (முக்கியமாக கர்ப்பமாக இருக்கும் பட்சத்தில்) கடுமையான நோய் தொற்றை உண்டாக்குவதுடன், பல்வேறு நோய்களையும் எளிதில் பரப்பக்கூடும். கர்ப்ப காலத்தின் போது இது போன்ற அபாயகரமான செயல்களில் ஈடுபடுவது உசிதமல்ல.

ஆரோக்கியமான நல்வாழ்வு வாய்க்கட்டும்

இதுவரை மேலே பட்டியலிடப்பட்ட கர்ப்பிணிகள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகளை கடைப்பிடித்து, அற்புதங்கள் நிறைந்த ஒன்பது மாத கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு நொடியையும் நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்வு உங்களுக்கு வாய்த்திட எங்களின் நல்வாழ்த்துக்கள்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button