28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
07 13968598
மருத்துவ குறிப்பு

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஆண் மைக் குறைவை ஏற்படுத்தும் டெஸ்டோஸ் டிரோன் குறைவாக இருப்பதற்கான காரணங்கள்!!!

டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண் ஹார்மோன். பாலுணர்ச்சியை தூண்டுவது இந்த ஹார்மோன் தான். இது பெண்களுக்கு மிகவும் குறைவான அளவில் இருக்கும். ஆண்களுக்கு சாதாரணமாக இந்த ஹார்மோனானது ஒரு டெசிலிட்டருக்கு 300-1200 நானோ கிராம் இருக்கும். ஆனால் இதற்கு குறைவாக இருந்தால், ஆண்மைக் குறைவு ஏற்படக்கூடும்.

அதுமட்டுமின்றி, பாலுணர்வின் நாட்டம் இல்லாமை, மன இறுக்கம், அதிகப்படியான சோர்வு மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் பிரச்சனை போன்றவை ஏற்படக்கூடும். ஆண்களுக்கு இந்த ஹார்மோன் குறைவாக சுரப்பதற்கு சில காரணங்கள் உள்ளன. அத்தகைய காரணங்கள் சரியாக தெரியாததால், பலர் என்ன செய்வதென்றே தெரியாமல், கவலையில் சோர்ந்துவிடுகின்றனர்.

 

அப்படி சோர்ந்துவிடுவதால் மட்டும் என்ன நடக்கப்போகிறது? ஆகவே உடலில் டெஸ்டோஸ்டிரோனின் அளவு குறைவாக இருந்தால், அதற்கான காரணத்தை முதலில் அறிந்து கொண்டு, பின் அதற்கேற்றவாறு சிகிச்சைகளை மேற்கொண்டால், இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும். மேலும் தற்போது இந்த பிரச்சனைக்கு நிறைய சிகிச்சைகள் வந்துள்ளன.

இங்கு ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோனின் அளவு குறைவாக இருப்பதற்கான காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

வயது

ஆண்களுக்கு வயதாக ஆக ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனின் அளவு குறைந்து கொண்டே வரும். அதனால் தான் 30 வயதிற்கு மேல் ஆண்களால், கருத்தரிக்க உதவ முடிவதில்லை.

புற்றுநோய் சிகிச்சைகள்

ஆண்கள் புற்றுநோய் சிகிச்சையான ஹீமோதெரபியை மேற்கொண்டிருந்தால், அது டெஸ்டோஸ்டிரோனின் அளவைக் குறைத்து, மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். ஆனால் சிலருக்கு சில நாட்கள் கழித்து டெஸ்டோஸ்டிரோனின் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

உடல் பருமன்

உடல் பருமனும் டெஸ்டோஸ்டிரொனின் உற்பத்திக்கு தடையை ஏற்படுத்தும். அதன் காரணமாகத் தான் உடல் பருமனுடன் இருப்பவர்களால் கருத்தரிக்க உதவ முடிவதில்லை. அதுமட்டுமின்றி, உடல் பருமனுடன் இருப்போருக்கு நீரிழிவு மற்றும் இதய நோய் போன்றவைகளும் வரும்.

பிட்யூட்டரி சுரப்பியில் பிரச்சனை

பிட்யூட்டரி சுரப்பியில் பிரச்சனை
டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்வதில் பிட்யூட்டரி சுரப்பி தான் முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய பிட்யூட்டரி சுரப்பியில் காயங்களோ அல்லது கட்டிகளோ இருஙநதால், அது டெஸ்டோஸ்டிரோனின் அளவைக் குறைக்கும்.

ஆரோக்கியமற்ற ஹைப்போதலாமஸ்

மூளையின் ஒரு பகுதி தான் ஹைப்போதலாமஸ். அவை தான் பிட்யூட்டரி சுரப்பிக்கு டெஸ்டோஸ்டிரோனை சுரக்குமாறு சொல்லும். ஆனால் காசநோய் மற்றும் இணைப்புத்திசு புற்று போன்றவை ஆண்களை தாக்கினால், அது டெஸ்டோஸ்டிரோனின் அளவைக் குறைக்கும்.

பாதிப்படைந்த ஆண்விதை

ஆண்விதைகளில் அடிப்பட்டால், அது ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனின் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

அதிகப்படியான X

பொதுவாக ஆண்களுக்கு ஒரு X மற்றும் ஒரு Y குரோமோசோம்கள் இருக்கும். ஆனால் அதில் ஒரு X ஹார்மோன் அதிகமாக இருந்தால், அது ஆண் ஹார்மோனின் உற்பத்தியை குறைத்து, டெஸ்டோஸ்டிரோனின் அளவைக் குறைத்துவிடும்.

பொன்னுக்கு வீங்கி நோய்

சில நேரங்களில் பொன்னுக்கு வீங்கி நோய் ஆண்விதைகளுடன், உமிழ்நீர் சுரப்பியையும் பாதிக்கும். அதிலும் இந்த நோயானது சிறு வயதில் வந்திருந்தால், அது கூட டெஸ்ரோஸ்டிரோனின் உற்பத்தியை பாதிக்கும்.

ஹீமோகுரோம் நோய்

உடலில் அதிகப்படியான இரும்புச்சத்து இருந்தால், அது ஆண்விதைகளை பாதிப்பதுடன், பிட்யூட்டரியின் செயல்பாட்டையும் பாதிக்கும். இதனால் டெஸ்டோஸ்டிரோனின் அளவு குறையும்.

Related posts

முடி வேண்டுமா… உயிர் வேண்டுமா?

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! சளியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் சீரகம்..!

nathan

பெண்களே வெளிநாடு செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

nathan

சினிமாவோடு வாழ்க்கையை சம்பந்தப்படுத்தி கொள்ளாதீர்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா எப்பேர்ப்பட்ட சளியையும் கரைத்தெடுக்கும் அதிசய சிரப்!

nathan

உடல் உறுப்பு தானத்தின் நோக்கம்

nathan

உங்களுக்கு கழுத்தின் இடது பக்கம் மட்டும் அடிக்கடி வலிக்கிறதா?

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! தூக்கம் மிகவும் அவசியம் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா மது குடிப்பது, உடல் உறுப்புக்களை எந்த அளவிற்கு சீர்குலைக்கிறது?

nathan