கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மக்களிடையே பிரபலமான ஓர் பானம் தான் க்ரீன் டீ. இந்த டீயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது என பல ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.
இதனால் தற்போது ஏராளமானோருக்கு க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் வந்துவிட்டது. முக்கியமாக உடல் எடையைக் குறைக்க நினைப்போரின் மத்தியில் இந்த டீ அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இத்தகைய க்ரீன் டீயின் சுவை சிலருக்கு பிடிக்காமல் இருக்கும். ஆனால் இந்த டீயின் சுவையை அதிகரிக்க அத்துடன் எலுமிச்சை சாற்றினை கலந்து கொள்ளலாம்.
இதனால் இந்த டீயினால் கிடைக்கும் நன்மைகள் இரு மடங்காக அதிகரிக்கும். க்ரீன் டீயுடன் எலுமிச்சை சாற்றினை கலந்து குடியுங்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்காக உயருமாம்.
தேவையான பொருட்கள்:
- க்ரீன் டீ பேக் – 1
- எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – 1 கப்
- தேன் – சுவைக்கேற்ப
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, நன்கு சூடேற்ற வேண்டும்.
- பின் அந்நீரை ஒரு டம்ளரில் ஊற்றி, அதில் க்ரீன் டீ பேக்கை 2-3 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- பிறகு அந்த டீ பேக்கை எடுத்துவிட்டு, அதில் எலுமிச்சை சாறு மற்றும் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து சூடாக குடிக்கவும்.