பச்சை மிளகாயின் உடல் நலத்தைப் பற்றி பேசுகையில் நாம் அனைத்து வகையான அயல்நாட்டு மிளகாய்களைப் பற்றியும் கற்பனை செய்வோம். குடைமிளகாய் என்பது வளமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவு என்பது அனைவரும் நன்கு அறிந்து செய்தி தான். இருப்பினும் நாம் உணவோடு சேர்த்து உண்ணுகின்ற சாதாரண பச்சை மிளகாயை சாதரணமாக விட்டு விட முடியாது. இந்திய பச்சை மிளகாயில் உள்ள உடல் நல பயன்கள் உங்களை அதிசயிக்க வைக்கும்.
சராசரியான இந்தியர்கள் பச்சை மிளகாய் உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ளனர். பச்சை மிளகாயின் உடல் நல பயன்கள், நாம் நம் உணவோடு உண்ணும் பொதுவான மிளகாய்களிலேயே உள்ளது. பச்சை மிளகாயில் நமக்கு தெரியாத பல உடல் நல பயன்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் உணவிற்கு மிளகாய் போடி சேர்ப்பதை விட, பச்சை மிளகாயை உண்ணுவதே நல்லதாகும்.
அதற்காக பச்சை மிளகாயை அதிக அளவில் சாப்பிட்டு உங்கள் வயிற்றை எரித்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. சொல்லப்போனால் சாதாரண மிளகாய்களே காரசாரமாக இருக்கும். பொதுவாக, இந்த மிளகாய்களை குழம்புகளில் போட்டு அதை மென்று உண்ணுவது வழக்கம். பச்சை மிளகாய் சேர்த்த காரசாரமான உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். ஆனால் மிளகாய் காய்ந்து சிகப்பு வத்தலாக மாறி விட்டால், அதன் ஊட்டச்சத்து குணங்கள் அனைத்தையும் இழந்து விடும்.
இந்திய பச்சை மிளகாய் பற்றிய அருமையான உடல்நல பயன்கள் மற்றும் அதனை ஏன் உண்ண வேண்டும் பற்றி இப்போது பார்க்கலாமா?
புற்றுநோயை எதிர்த்து போராடும்
பச்சை மிளகாயில் வளமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இதனால் நம் உடலின் பாதுகாவலனாக அது உதவுகிறது. இயக்க உறுப்புகளின் பாதிப்பிலிருந்து நம் உடலை காக்கிறது பச்சை மிளகாய். மேலும் இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து புற்றுநோயிலிருந்து காக்கும். இதுப்போக, வயதாகும் செயல்முறையும் குறையும்.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்
இந்திய பச்சை மிளகாயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மிளகாயை பயன்படுத்துவதால் மூக்கடைப்பு சரியாவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் சி, நோய்களை எதிர்க்க இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
உங்கள் சருமத்திற்கு சிறந்தது
பச்சை மிளகாயில் வைட்டமின் ஈ-யும் கூட அதிகமாக உள்ளது. இது சில சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரிந்திடும். அதனால் காரமான உணவை சாப்பிட்டால் நல்ல சருமத்தை பெறலாம்.
கலோரிகள் அற்றது
பச்சை மிளகாயில் கிடைக்கும் அனைத்து நன்மைகளும் கலோரிகளே இல்லாமல் நமக்கு கிடைக்கிறது. மிளகாயில் கலோரிகளே கிடையாது. அதனால் உடல் எடையை குறைக்க நீங்கள் டையட்டில் இருக்கும் போது கூட இதனை பயன்படுத்தலாம்.
ஆண்கள் பச்சை மிளகாய் உண்ண வேண்டும்
ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம் என்பதால், அவர்கள் பச்சை மிளகாயை உண்ண வேண்டும். பச்சை மிளகாய் உண்ணுவதால் புரோஸ்டேட் புற்றுநோய் பிரச்சனைகள் வராமல் இருக்கும் என அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகிறது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்
பொதுவான இந்திய மசாலாக்களால் சர்க்கரை நோயாளிகள் பல பயனை அடைகின்றனர். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க பச்சை மிளகாய் உதவிடும். ஆனால் அதற்காக இனிப்பு பலகாரங்களை சாப்பிட்டு விட்டு பச்சை மிளகாயை சாப்பிட்டு கொள்ளலாம் என்றில்லை.
உணவு செரிமானம் வேகமாக நடக்கும்
பச்சை மிளகாயில் எண்ணிலடங்கா நார்ச்சத்துக்கள் உள்ளது. தற்போது இருக்கும் பொதுவான எண்ணத்துக்கு மாறாக, பச்சை மிளகாய் உட்கொண்டால், உணவு செரிமானம் வேகமாக நடைபெறும்.
காரசாரமான உணவு நல்ல மனநிலையை உண்டாக்கும்
மிளகாய்கள் மூளைக்குள் என்டோர்ஃபின்ஸை உற்பத்தி செய்யும். இது உங்கள் மனநிலையை நன்றாக வைத்திருக்கும். அதனால் நல்ல காரசாரமான உணவை உண்ண பிறகு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்றால் அது தற்செயலாக நடப்பதல்ல.
நுரையீரல் புற்றுநோய் இடர்பாட்டை குறைக்கும்
நமக்கு இன்னும் எப்படி என்று தெரியவில்லை, ஆனால் பச்சை மிளகாயை உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறைகிறது. புகைப்பிடிப்பவர்கள் இதனை கவனிக்க வேண்டும். காரணம் அவர்கள் தானே தினமும் தங்களின் நுரையீரலை புகைத்து கொண்டிருக்கின்றனர்.
பாக்டீரியா தொற்றுக்கள் வரமால் காக்கும்
பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கிறது. அதுவும் முக்கியமாக சரும தொற்றுகள்.
வளமையான இரும்புச்சத்து
இந்திய பெண்களுக்கும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் இந்திய மிளகாய் ஆரோக்கியமானதாகும். பச்சை மிளகாயில் இயற்கையாகவே இரும்புச்சத்து நிறைந்துள்ளது.