25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
bedwetting 15
மருத்துவ குறிப்பு

இதோ சில டிப்ஸ்… உங்க குழந்தை படுக்கையில் ‘சுச்சு’ போவதைத் தடுக்கணுமா?

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் போது பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதில் ஒன்று தான் படுக்கையில் சிறுநீர் கழிப்பது. இது சாதாரணமான ஒன்று தான். குழந்தைகள் வேண்டுமென்றே இப்படி செய்வதில்லை. ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, அவர்களை அறியாமலேயே சிறுநீரைக் கழிக்கிறார்கள். பொதுவாக 7 வயதிற்குட்பட்ட குழந்தைகள், இவ்வாறு இருப்பது பிரச்சனை அல்ல. ஆனால் 7 வயதிற்கு மேலான பின்பும் குழந்தைகள் சிறுநீர் கழித்தால், அதை உடனே கவனிக்க வேண்டியது அவசியம்.

 

பெற்றோர்கள் குழந்தைகளால் ஈரமாக்கப்பட்ட பெட்சீட்டைத் துவைப்பதற்கு சோம்பேறித்தனம் கொள்ளமாட்டார்கள். தினமும் செய்வதற்கு தயாராகத் தான் இருப்பார்கள். ஆனால் வெளியிடங்களுக்கு செல்லும் போது, இப்படி செய்யும் போது தான் விஷயமே உள்ளது. இதனால் உறவினர்களால் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு, மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள்.

இந்த நிலையைத் தவிர்ப்பதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனையைப் போக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். சரி, இப்போது படுக்கையில் குழந்தைகள் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க உதவும் சில வழிகளைக் காண்போம்.

வால்நட்ஸ் மற்றும் உலர் திராட்சை

வால்நட்ஸ் மற்றும் உலர் திராட்சை ஆரோக்கியமான ஸ்நாக்ஸாகும். உங்கள் குழந்தைகளுக்கு இவைகள் பிடிக்குமானால், தினமும் கொடுங்கள். அதுவும் இரண்டையும் தனித்தனியாக வெவ்வேறு நேரங்களில் கொடுக்காமல், ஒன்றாக கொடுங்கள். இப்படி தினமும் சாப்பிடக் கொடுப்பதன் மூலம் இரவு நேரத்தில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்கலாம்.

தேன்

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு தேன் நல்ல தீர்வளிக்கும். ஏனெனில் தேனில் இயற்கையாவே நீரை உறிஞ்சி தக்க வைக்கும் குணம் உள்ளது. எனவே தேனை இரவில் தூங்கும் முன் சாப்பிடுவதன் மூலம், சிறுநீர்ப்பை நிரம்பினாலும், வெளியேறாமல் உள்ளேயே தக்க வைக்கும். டீனேஜ் வயதினர் படுக்கையில் சிறுநீரைக் கழித்தால், 1 டேபிள் ஸ்பூன் தேனையும், இளம் குழந்தைகள் சிறுநீரைக் கழித்தால் 1 டீஸ்பூன் தேனையும் கொடுங்கள்.

வெல்லம்

உடல் வெப்பம் குறைவாக இருந்தாலும், படுக்கையில் சிறுநீர் கழிக்க நேரிடும். உங்கள் குழந்தைக்கு தொடர்ந்து 2 மாதம் சிறிது வெல்லத்தை பாலில் கலந்து கொடுத்து வாருங்கள். இதனால் உடலின் வெப்பம் தூண்டப்பட்டு, படுக்கையில் சிறுநீர் கழிப்பது தடுக்கப்படும். குறிப்பாக அளவுக்கு அதிகமாக வெல்லத்தைக் கொடுக்காதீர்கள். அளவாகவே கொடுங்கள்.

பட்டை

பட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கும். அதில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனையும் ஒன்று. எனவே உங்கள் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழித்து வந்தால், அவர்களுக்கு ஒரு சிறு துண்டு பட்டையைக் கொடுத்து சாப்பிட சொல்லுங்கள். இல்லாவிட்டால், அவர்கள் சாப்பிடும் உணவில் ஒரு சிட்டிகை பட்டைத் தூளை சேர்த்து கொள்ளுங்கள்.

மலை நெல்லிக்காய்

மலை நெல்லிக்காய் மருத்துவ குணங்கள் நிறைந்த ஓர் அற்புத உணவுப் பொருள். குழந்தைகளுக்கு நெல்லியின் கசப்புத்தன்மையால் பிடிக்காமல் போகலாம். ஆனால் நெல்லிக்காயின் விதைகளை நீக்கிவிட்டு, அதில் தேன் கலந்து சாப்பிடக் கொடுங்கள். இதனால் நிச்சயம் உங்கள் குழந்தை நெல்லியை விரும்பி சாப்பிடும்.

கிரான்பெர்ரி ஜூஸ்

கிரான்பெர்ரி ஜூஸ் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனைக்கு தீர்வளிக்கும். எனவே உங்கள் குழந்தைக்கு இரவில் படுக்கும் முன் நற்பதமான கிரான்பெர்ரி ஜூஸ் கொடுங்கள். இதனால் விரைவில் உங்கள் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனையில் இருந்து விடுபடுவார்கள்.

சோம்பு

சோம்பு படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனைக்கு தீர்வளிக்கும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 1 டீஸ்பூன் சோம்பு மற்றும் தேன் சேர்த்து கலந்து கொடுங்கள். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் கொடுத்து வந்தால், இப்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

கடுகு

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனைக்கு கடுகு பொடி நல்ல தீர்வு வழங்கும். அதற்கு கடுகு பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, இரவில் படுப்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் குடிக்க கொடுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

எள்ளு

சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு எள் அருமருந்தாகும். அதற்கு ஒரு கைப்பிடி எள்ளு விதையை பகல் நேரத்தில் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுங்கள். இல்லாவிட்டால் உண்ணும் உணவின் மீது தூவிக் கொடுங்கள். இதனால் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்க உதவும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது. இது செரிமான பிரச்சனைகளைப் போக்குவதோடு, படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனையில் இருந்தும் விடுவிக்கும். எனவே தினமும் நன்கு கனிந்த 2-3 வாழைப்பழங்களைக் கொடுங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மசாஜ்

இடுப்புத் தசைகள் தானாக நெகிழ்வதன் விளைவாகத் தான் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்கிறார்கள். குழந்தைகளுக்கு ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதைக் கொண்டு அடிவயிற்றுப் பகுதியில் சிறிது நேரம் மசாஜ் செய்வதன் மூலம், சிறுநீர் பாதையில் உள்ள தசைகள் வலிமையடைந்து, சிறுநீர்ப்பையின் கட்டுப்பாட்டை மேம்படுத்தும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…உடலில் கட்டிகள் வருவதற்கான காரணம் என்ன?

nathan

மருத்துவ குணம் ஏராளம் கொண்ட துளசி! தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

எலுமிச்சையின் அற்புத மருத்துவக் குணங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா துளசிச் செடியால் ஏற்படும் எதிர்பாராத 6 பக்க விளைவுகள்!!

nathan

உடலின் சிறுநீரகக்கற்களை கரைக்கும் கரும்புச்சாறு

nathan

வெண்புள்ளியை தவிர்க்க சூப்பர் டிப்ஸ்……

nathan

எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் பழக்கவழக்கங்கள்!!!

nathan

சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுப்பது எப்படி…?

nathan

தீபாவளியும் குழந்தைகள் பாதுகாப்பும்

nathan