25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
rabbit confit
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா முயல் கறி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

இன்றைய மாறிவரும் உணவுப் பழக்கங்களாலும், உடல் நோகாமல் வேலை செய்து வருவதாலும், உடலில் உள்ள கலோரிகளானது அதிகமாக செலவாவதில்லை. இருப்பினும் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் 60 வயதில் வரவேண்டிய இரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு, புற்றுநோய்கள் போன்றவை 25 வயதிலேயே தொற்றிக் கொள்கிறது.

எனவே பலர் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் குறைவாக உள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உட்கொள்ள விரும்புகின்றனர். அதே சமயம் உடலுக்கு வேண்டிய சத்துக்களையும் பெறும் அளவிலான உணவுகளை நாடுகின்றனர். பொதுவாக அனைத்து சத்துக்களும் வளமாக இருக்கும் ஒரு உணவுப் பொருள் தான் இறைச்சி.

 

இத்தகைய இறைச்சியில் பல வெரைட்டிகள் உள்ளன. ஆனால் அனைத்து இறைச்சியிலும் கொழுப்புக்கள் குறைவாக இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் முயல் கறியில் இன்றைய கால தலைமுறையினர் எதிர்பார்க்கும் வகையிலான அத்தியாவசிய சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.

இப்போது முயல் கறியில் உள்ள சத்துக்களையும், அதனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பார்ப்போம்.

 

கொலஸ்ட்ரால் குறைவானது

மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடுகையில் முயல் கறியில் கொலஸ்ட்ராலானது மிகவும் குறைவாக உள்ளது. எனவே எடையை பராமரிக்க நினைப்போர் முயல் கறியை அச்சமின்றி சாப்பிடலாம்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சோடியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ளக்கூடாது. ஆனால் முயல் கறியில் சோடியம் குறைவாக இருப்பதால், இதனை அத்தகையவர்கள் தாராளமாக உட்கொள்ளலாம்.

இதய நோய்

மற்ற கறிகளுடன் ஒப்பிடும் போது முயல் கறியில் செரிவான கொழுப்பு அமிலங்கள் குறைவாகவும், இதயத்தை பாதிக்காத கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவும் இருப்பதால், இதய நோய் உள்ளவர்கள் எவ்வித பயமும் இல்லாமல் முயல் கறியை சாப்பிடலாம்.

புரோட்டீன்

முயல் கறியில் எளிதில் செரிமானமாகக்கூடிய புரோட்டீன்களைக் கொண்டுள்ளது. இதனால் இதனை உட்கொண்ட பின்னர் எந்த ஒரு இம்சையையும் சந்திக்கமாட்டோம். ஆகவே கடுமையான இரையக குடல் பாதை பிரச்சனை உள்ளவர்களும் இதனை சாப்பிடலாம்.

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்

மற்ற இறைச்சியுடன் ஒப்பிடும் போது முயல் இறைச்சியில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிக அளவில் நிறைந்துள்ளது.

புற்றுநோய்

முக்கியமாக புற்றுநோய் உள்ளவர்கள், புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கும் போது, முயல் கறியை சாப்பிட்டு வந்தால், அதனால் ஏற்படும் அபாயத்தை மெதுவாக குறைக்க முடியும்.

சீரான மெட்டபாலிசம்

முயல் கறியை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால், உடலின் மெட்டபாலிசமானது சீராக இருக்கும். இதனால் உடலில் கொழுப்புக்களானது தங்குவதைத் தடுக்கலாம்.

Related posts

15 பாடிகாட்ஸ்! உச்சி முதல் உள்ளங்கால் வரை…

nathan

தாமரை தண்டில் இவ்வளவு நன்மையா?அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

ஒரே ஒரு மூலிகை தண்ணி குடிச்சா உடல் எடை சீக்கிரமா குறையும் தெரியுமா?சூப்பர் டிப்ஸ்…

nathan

இளமைக்கு உத்தரவாதம் தரும் இயற்கை உணவுகள்!

nathan

ஆண்களுக்கு உரமூட்டும் 6 உணவுகள்!

nathan

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் முள்ளங்கி சூப்! தெரிஞ்சிக்கங்க…

nathan

ஒரு மாதம் கருணைக்கிழங்கு சாப்பிட்டால் கிடைக்கும் தீர்வு!

nathan

நீரிழவு நோயாளிகள் வேர்க்கடலை பட்டரை தினமும் சாப்பிடலாமா? தெரிந்துகொள்வோமா?

nathan

மூளைக்கு வலுவை தரும் பலாக்காய் கூட்டு

nathan