25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
31 mobile ad
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா செல்போனுக்கு அடிமையாக இருப்பதை விட்டொழிப்பது எப்படி?

நீங்கள் எப்பொழுதும் உங்களுடைய செல்போனில், நண்பர்களுடன் பேசிக் கொண்டோ, ரிங்டோன்களை டவுன்லோடு செய்து கொண்டோ அல்லது வேகமாக மெசேஜ் அனுப்பிக் கொண்டோ இருக்கிறீர்களா? நீங்கள் எத்தனை மணிநேரம் செல்போனை பயன்படுத்துகிறீர்கள் மற்றும் போனை அடிக்கடி பயன்படுத்தும் சூழல்களை எதிர்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் உங்களுக்கு இருக்கும் செல்போனுக்கு அடிமையாகும் குணமும்!

அதிலும், பல்வகையான பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தக் கூடிய கையடக்கக் கருவியாக இருக்கும் நவீனமான ஸ்மார்ட் போன்கள், இன்றைய தலைமுறையை செல்போன் இல்லாமல் ஒரு நொடியைக் கூட கழிக்க விடுவதில்லை. இப்படிப்பட்ட செல்போன் போதையிலிருந்து அல்லது மோகத்திலிருந்து விடுபடும் வழிகளைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

பிஸியாக இரு!

கிரிக்கெட் விளையாடுதல் அல்லது இசைக் கருவிகள் வாசித்தல் போன்று ஏதாவதொரு புதிய பொழுதுபோக்கை முயற்சி செய்யுங்கள். நீங்கள் செய்து முடிக்க வேண்டிய விஷயங்களில் கவனத்தைச் செலுத்துங்கள். அது செய்யும் வேலை தொடர்பாகவோ அல்லது பெற்றோர்களுடன் குடும்பமாக ஒரு நாளை செலவிடும் செயல்பாடாகவோ கூட இருக்கலாம்.

ஏன்?

செல்போனை உங்களுக்கு ஏன் மிகவும் பிடிக்கிறது என்று யோசித்துப் பார்க்கவும். பின்னர், உங்களுடைய போனில் உங்களுக்குப் பிடித்த எந்த விஷயம், செல்போன் போதையை கொண்டு வருகிறது என்றும், அதை ஒருமுறை அழித்து விட்டால் என்ன ஆகும் என்றும் யோசித்துப் பாருங்கள். உங்களிடம் போன் இருப்பதே போதைக்கு காரணமாக இருந்தால், அவசர காலங்களுக்கு மட்டுமே அதைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

போதும்!

நீங்கள் செய்யும் அழைப்புகள் போதும் என்று குறைக்க முயற்சி செய்யுங்கள் அல்லது உங்களது செல்போன் போதை பற்றி நண்பர்களிடம் சொல்லி வையுங்கள். எனவே, அவர்கள் அதிக நேரம் போனில் பேசாமல் அழைப்புகளை கட் செய்வார்கள்.

எக்ஸ்ட்ரா வேண்டாம்

மொபைலில் இருக்கும் எஸ்.எம்.எஸ் பிளான்கள் அல்லது ரிங்டோன் டவுன்லோடு பேக்கேஜ் போன்ற எக்ஸ்ட்ரா வசதிகளை முடக்கி விடுங்கள். பொதுவாகவே மொபைல் மெசேஜ்களை ஒரு முறை அனுப்பும் போது, பெரும்பாலான நிறுவனங்கள் 10 சென்ட்களை பெறுகின்றன. ஒவ்வொன்றிற்கும் நீங்கள் தனித்தனியாக பேமண்ட் செய்வதால், உங்களிடம் உள்ள மெசேஜ் அனுப்ப வேண்டும் என்ற ஆவலை அவை தக்க வைத்துக் கொண்டு விடுகின்றன.

கொடுத்து விடு

செல்போனை பயன்படுத்த வேண்டும் என்ற ஆவல் வரும் போது, அதை உங்களுடைய பெற்றோர்களிடம் கொடுத்து விடுங்கள். அலுவலகம் முடிந்த பிறகும், இரவு உணவுக்குப் பின்னரும் மற்றும் வார இறுதி நாட்களிலும் இவ்வாறு செய்யலாம்.

பிளான் பண்ணுங்கோ!

இறுதியாக பணம் கொடுத்தால் பேசும் வசதியை உங்களுடைய அலைபேசியில் பயன்படுத்துங்கள். போர்ட்டபிள் பே போன் (Portable Pay Phone) மற்றும் குறிப்பிட்ட நேர அளவிற்கு பேச வைக்கும் காலிங் கார்டுகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். நீங்கள் அதிகமான நிமிடங்களை அடைந்தவுடன் அழைப்பு தானாகவே முடங்கி விடும்.

விட்டு விடு

இந்த பழக்கத்தை விட்டு விடுங்கள். முழுமையாக அல்ல, ஆனால் செல்போனைப் பயன்படுத்தும் நேரத்தைக் குறைக்கப் பாருங்கள். அடுத்த முறை நீங்கள் செல்போனை எடுக்கும் போது, இப்பொழுது இந்த மனிதருக்கு அழைக்கவோ அல்லது மெசேஜ் செய்யலாமா அல்லது சற்று நேரம் பொறுத்திருக்கலாமா? என்று யோசிக்கத் தொடங்குங்கள். அடுத்த முறை நீங்கள் செல்போனைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கும் போது, உருப்படியாக வேறு ஏதாவது செய்யலாமா என்று முயற்சி செய்யுங்கள். செல்போன் இல்லாமல் உங்களால் நேரத்தைக் கழிக்க முடியவில்லை என்ற நிலை உங்களுக்கு இருந்தால், அவ்வாறு செல்போன் இல்லாத நேரங்களில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை கவனித்து உணர்ந்திருங்கள்.

Related posts

ஆண்களே! இதோ ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பழங்கள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா திருமணத்திற்கு பின் வரும் முதல் நாளை பற்றி இந்திய பெண்கள் நினைக்கக்கூடிய பொதுவான 9 விஷயங்கள்

nathan

நீங்க செய்யற இந்த தவறுகள் உங்கள் பற்களை மோசமாக்கும் தெரியுமா!!

nathan

குனிந்து பாதத்தை பார்க்க முடியாத அளவு தொப்பை மறைக்குதா?

nathan

ஒரே நாளில் வியர்வை நாற்றம் போக வேண்டுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்கு சில எளிய வழி முறைகள்…

nathan

நகங்களில் இந்த மாற்றங்கள் இருப்பின் மரணத்தின் விழிம்பில் இருக்கின்றார் என முடிவு எடுக்கலாம்!

nathan

விரைவாக கருத்தரிக்க 7 விஷயங்கள்

nathan

இதெல்லாம் சைவ உணவே கிடையதாமா… இவளோ நாள் உங்கள நல்லா ஏமாத்தியிருக்காங்க!!!

nathan