கடன் அன்பை முறிக்கும் என்ற பழமொழி பல நேரங்களில் உண்மையாகவே உள்ளது.
மேலும் மற்றவரிடம் எந்த பொருட்களை வாங்கினால் வறுமை தேடி வரும் என்பதை படித்து தெரிந்து கொண்டு அந்த பொருட்களை இனி வாங்கமால் இருங்கள்
கைக்குட்டை
கைக்குட்டையை மற்றவர்களிடம் வாங்கினால் அதனால் கிருமிகள் மட்டும் பரவுவதில்லை, மிகவும் மோசமான வறுமையும் தான் ஏற்படும்.
படுக்கை
வாழ்க்கைத் துணையைத் தவிர மற்றவர்களுடன் படுக்கும் படுக்கையை பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டையை வரவழைப்பதோடு உறவை முறிவடைய செய்யும்
பேனா
ஒருவரிடம் பேனாவை வாங்கி, அதை திருப்பி கொடுக்காமல் அப்படியே வைத்துக் கொண்டால் வாழ்க்கையில் வறுமை மற்றும் அவமானத்தை சந்திக்க வழிவகுக்கும்.
பணம்
மற்றவர்களிடம் கடனாக பணம் வாங்கினால் அவர்களுடனான உறவு முறிவடைவது மட்டுமின்றி பணம் வாங்கும் போது வாங்கியவரின் கையின் வழியே துரதிர்ஷ்டமும் தான் வரும். எனவே கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள்
கை கடிகாரம்
மற்றவர்களிடம் கை கடிகாரம் வாங்கி பயன்படுத்தி வந்தால், அது வறுமை மற்றும் வாழ்வில் எதிலும் தோல்வியை சந்திக்க வழிவகுக்கும். எனவே யாரிடமும் கைக்கடிகாரத்தை வாங்காதீர்கள்.
உடைகள்
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உடைகளை பகிர்ந்து கொள்வது என்பது நல்லதாக இருக்கலாம். ஆனால் அப்படி உடைகளை பகிர்ந்து கொண்டால் அது பல பிரச்சனைகளை உண்டாக்கும்.