- பிஸ்கட் தூள் (graham crackers) – ஒன்றரைக் கோப்பை
- சர்க்கரை – கால் கோப்பை
- உருக்கிய வெண்ணெய் – கால் கோப்பை
- க்ரீம் சீஸ் – 8 அவுன்ஸுள்ள இரண்டு பாக்கெட்
- புளித்த கிரீம்(sour cream) – அரைக்கோப்பை
- முட்டை – இரண்டு
- சர்க்கரை – ஒரு கோப்பை
- சோள மாவு – ஒரு மேசைக்கரண்டி
- துருவிய எலுமிச்சை தோல் – ஒரு பழம்
- வென்னிலா எசன்ஸ் – அரைதேக்கரண்டி
- புளூ பெர்ரி – ஒன்றரைக்கோப்பை
- சர்க்கரை – அரைக்கோப்பை
- எலுமிச்சைச்சாறு – ஒரு மேசைக்கரண்டி
- தண்ணீர் – இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை
- ஒரு கோப்பையில் பிஸ்கட் தூளுடன் சர்க்கரை போட்டு உருக்கிய சூடான வெண்ணெயை ஊற்றி நன்கு கலக்கவும். அல்லது மிக்ஸரில் பிஸ்கட்டுகளைப் போட்டு தூளாக்கி அதனுடன் சர்க்கரையையும் வெண்ணெயையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.
- இதனை சீஸ் கேக் செய்வதெற்கென்றே உள்ள மீடியமான அளவுள்ள பேனில் கொட்டி சமமாக பரவலாக தட்டவும்.
- பிறகு இதை 350 டிகிரி சூடாக்கிய அவனில் வைத்து பேக் செய்யவும்.
- ஐந்து அல்லது ஆறு நிமிடத்தில் நல்ல பிரவுன் கலரில் ஆனவுடன் வெளியில் எடுத்து விடவும்.
- பிறகு பிஸ்கட் தூளாக்கிய மிக்ஸரில் முதலில் க்ரீம் சீஸையும், சவர் க்ரீமையும் சேர்த்து போட்டு நன்கு கலக்கவும்.
- பிறகு சர்க்கரை, சோளமாவு, துருவிய எலுமிச்சை தோல், முட்டை மற்றும் வென்னிலா எசன்ஸ் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து கலக்கவும்.
- பிறகு இந்த கலவையை தயாராகியுள்ள கிரஸ்ட்டில் பரவலாக ஊற்றி ஒரு கரண்டியின் உதவியால் சமப்படுத்தவும்.
- பிறகு அவனை 300 டிகிரி Fல் சூடாக்கி அதில் வைத்து ஒரு மணி நேரம் வரை பேக் செய்யவும். அல்லது க்ரீம் கலவை நன்கு கெட்டியாகும் வரை வைத்திருந்து வெளியில் எடுத்து ஆறவைத்து குளிர் சாதனப் பெட்டியில் வைத்து விடவும்.
- இதற்கிடையில் ஒரு சிறிய பாத்திரத்தில் பழங்களுடன் சர்க்கரை, தண்ணீர், எலுமிச்சை சாறு ஆகியவற்றைப் போட்டு கெட்டியான சிரப்பாகும் வரை மிதமான தீயில் வைத்திருந்து இறக்கி விடவும்.
- நன்கு குளிர்ந்து செட்டிலான கேக்கை பரிமாறும் தட்டில் வைத்து துண்டுகள் போட்டு பழச்சிரப்பை மேலாக ஊற்றி பரிமாறவும்.