25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
Image 3 6
Other News

இனியும் அலட்சியம் காட்டாதீர்கள்! பெண்கள் கருத்தரிப்பதற்கு தாமதமாவது ஏன் தெரியுமா?..

பெரும்பாலான பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சினைகளையே அதிகம் சந்திக்கிறார்கள்.

கருத்தரிக்காததற்கு அவர்களின் மலட்டுத் தன்மையே காரணம் என நம்பப்பட்டுவந்த நிலையில், தற்போது ஆண்மைக் குறைவுதான் அதிக காரணமாக உள்ளது.

கர்ப்பப்பையின் உள்பக்கமும், வெளிப்பக்கமும் ஆரோக்கியமாக இருக்கிறதா என பார்க்க வேண்டும்.

உள்புறம் கட்டியோ, சதை வளர்ச்சியோ (Polyp) அல்லது தடுப்புகள்(Septum) போன்றவையோ இருக்கக் கூடாது. கர்ப்பப்பை சரியான நீள, அகலத்துடன் இருக்க வேண்டும்.

கரு இணைக்குழாய் ஆரோக்கியமாகவும், அடைப்பின்றியும் இருக்க வேண்டும்.

சூலகம் என்கிற முட்டைப்பை மாதம் ஒரு கருமுட்டையை சுழற்சி முறையில் வெளியேற்ற வேண்டும்.

கரு முட்டை உற்பத்திக்கான ஹார்மோன் சுரப்புகள் எஃப்.எஸ்.ஹெச்., எல்.ஹெச், டி.ஆர்.எல்., தைராய்டு போன்றவை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.

ஏன் கருத்தரிக்கவில்லை என்பதை 90 சதவிகித தம்பதியருக்கு மிகச் சரியாக ஒரு மாத ஆய்வில் கண்டுபிடித்துச் சொல்லி விட முடியும். கருத்தரிக்காத பெண்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனை களை உரிய நேரத்தில் செய்தாக வேண்டும். அதன்படி…

* மாதவிடாயான இரண்டாவது நாளில் ஹார்மோன் சோதனையும், பெல்விக் ஸ்கேன் சோதனையும்.

* மாதவிடாயான ஏழாவது நாளில் ஹெச்.எஸ்.ஜி. மற்றும் எக்ஸ்ரே.

* மாதவிடாயான 21-வது நாளில் எஸ்.பி.4 எனப்படுகிற சீரம் புரொஜெஸ்ட் ரோன் சோதனை.

* மாதவிடாயான 7-வது நாள் தொடங்கி, கருமுட்டையின் சரியான வளர்ச்சியை ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளும் ஃபாலிகுலர் ஸ்டடி.

கருமுட்டை சூலகத்திலிருந்து வெளிவரும் நிகழ்ச்சிக்கு, சினை முட்டை வெளிவருதல் (Ovulation) என்று பெயர். அந்த நேரத்தில் என்டோமெட்ரியம் எனப்படுகிற திசுவானது 8 மி.மீ. அளவு வளர்ச்சியுடன் இருந்தால் தான், உருவான கருவானது கருப்பையில் பதியும்.

இப்படி எல்லா வற்றையும் பார்த்து, எல்லா பரிசோதனை களும் நார்மல் என்று தெரிந்தால், டயக்னாஸ்டிக் ஹிஸ்ட்ரோ லேப்ராஸ்கோப்பி (Diagnostic Hystero Laproscopy) என்கிற மைனர் அறுவை சிகிச்சையை செய்ய வேண்டியிருக்கும்.

கர்ப்பப்பையின் கழுத்துப் பகுதியான செர்விக்ஸில் புண் ஏற்பட்டு, விந்தணு செல்கிற பாதை குறுகலாக இருந்தாலும் குழந்தைப் பேறு உண்டாவதில் தாமதமாகலாம். மனைவிக்கு மட்டுமே சோதனைகளும், சிகிச்சைகளும் அவசியம் என நினைக்காமல், கணவனும் அவற்றுக்குத் தயாராக வேண்டும்.

இதையடுத்து, ஆணுக்கு விந்தணுப் பரிசோதனை அவசியம். விந்தணு எண்ணிக்கை, குறைந்த பட்சம் 20 மில்லியன் இருக்க வேண்டும். அதில் 50 சதவிகிதம் வேகமான, உந்து சக்தியுள்ள உயிரணுக்களாக இருக்க வேண்டும்.

சில நேரங்களில் விந்தணுக்களின் எண்ணிக்கை போதுமானதாக இருந்தாலும், அந்த விந்தணுக்களுக்கு கருமுட்டையை கருத்தரிக்கச் செய்கிற சக்தி இருக்காது.

அதற்கும் சிறப்பு பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அவசியம். எனவே, மனம் தளராமல் சிறப்பு சிகிச்சைகளுக்கு உங்கள் கணவருடன் தயாராகுங்கள்.

Related posts

கணவன் செய்த செயலால் துடித்த மனைவி – கொடூர சம்பவம்!

nathan

பூங்காவுக்குச் சென்றருக்குக் கிடைத்தது வைரக்கல்

nathan

நடிகருடன் நெருக்கமான நடிகை சமந்தா..

nathan

திருமணம் செய்த 103 வயது சுதந்திர போராட்ட வீரர்

nathan

ஹாக்கி – கோப்பை வென்ற இந்திய அணி

nathan

இறப்பதற்கு முன்னரே மீனா பேரில் எழுதி வைக்கப்பட்ட சொத்து

nathan

ஜோதிட சாஸ்திரத்தின்படி இந்த 5 ராசிக்காரர்கள் மட்டும் மன்னிக்கவே மாட்டார்கள்..!

nathan

அடேங்கப்பா! திருமணமாகாமல் 58 வயதில் 750 படங்கள்.. கோவை சரளாவின் மறுபக்கத்தில் இப்படியொரு சோகமா?

nathan

விஜய் கட்சி கொடியில் உள்ள நிறங்கள்

nathan