27 C
Chennai
Thursday, Nov 14, 2024
doctor
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பெற்றோராக தயாராகி கொண்டிருபவர்களுக்கான சில முக்கியமான டிப்ஸ்…

உங்கள் உலகத்திற்கு ஒரு புதிய விருந்தாளியை கொண்டு வர நீங்கள் திட்டமிடுகிறீர்களா? ஓ…. அது மிகவும் சிறந்த விஷயமாயிற்றே! ஆனால், இந்த புதிய விருந்தினரை கவனிக்க எல்லா விதத்திலும் தயாராக இருக்கிறீர்களா? ஒரு பெற்றோராக இருந்து உங்களால் அனைத்தையும் செய்து விட முடியுமா?

இதோ நீங்கள் முழுமையான பெற்றோராக தயாராக செய்ய வேண்டிய முன்நடவடிக்கைகளைப் பற்றி இங்கு கொடுத்துள்ளோம். படித்துப் பயன் பெறுங்கள.

உங்கள் எடையை பரிசோதியுங்கள்

உங்களுடைய எடையை தெரிந்து கொள்ளுங்கள். குழந்தை பிறப்பதற்கு முன்னரோ அல்லது பின்னரோ, குறைவான எடை அல்லது அதிகமான எடையுடன் இருப்பது ஆபத்தானதாகும். நீங்கள் குறைவான எடையுடன் இருந்தால் பிரசவம் கடுமையானதாக இருக்கும். அதே நேரம் அதிகமான எடையுடன் இருந்தால், நீரிழிவு மற்றும் அதிகமான இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். எனவே, கருத்தரிக்கும் முன்னரே எடையை பரிசோதியுங்கள்.

மருந்துகளை கவனிங்க!

அலர்ஜி, தலைவலி அல்லது வேறு ஏதாவது பிரச்சனைக்கு மருந்துகளை நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால், கவனமாக இருக்கவும்! இந்த மருந்துகளில் சில கருவில் உள்ள குழந்தையை பாதிக்கக்கூடும். நீங்கள் சாப்பிட்டு வரும் மருந்துகள், மாத்திரைகள் பற்றி உங்களுடைய குழந்தைகள் நல மருத்துவரிடம் சொல்லி விடுங்கள். மேலும், அவற்றிற்கு மாற்றாக சாப்பிட வேண்டிய மருந்துகள் அல்லது தவிர்ப்பதற்கான வழிகளைப் பற்றி அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

சத்தான உணவுகள்

உங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் பழங்கள், பழச்சாறுகள் மற்றும் பிற மல்டி-வைட்டமின்கள், புரோட்டின்கள் மற்றும் கால்சியம் அதிகமுள்ள உணவுகளை வைத்திருங்கள். பச்சைக் காய்கறிகள் மற்றும் தானியங்களை நிறைய சாப்பிடுங்கள்.

பல்லுக்கு தேவை தில்லு!

ஆரோக்கியமான பிரசவத்திற்கு வாய் மற்றும் பற்களை நலமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். பல் ஈறுகளில் உள்ள கோளாறுகளால் பாக்டீரியா தொற்றுகள், குறைப்பிரசவம் மற்றும் முன்சூல்வலிப்பு (Preeclampsia) போன்ற பிரச்சனைகள் வரலாம். அதேபோல, கருத்தரித்த பின்னர் நீங்கள் எக்ஸ்-ரே செய்து கொள்ளக் கூடாது. எனவே, கொஞ்சம் நேரத்தை செலவு செய்து, உங்களுடைய பல் மருத்துவரிடம் கலந்து பேசி, பற்களில் உள்ள பிரச்சனைகளை சரி செய்யுங்கள்.

வீட்டை தயார் செய்தல்

உங்களுடைய கனவு வீட்டை புனரமைக்க விரும்பினால், கருத்தரிப்பதற்கு முன் அதை செய்யுங்கள். பெயிண்ட்கள், கிளீனர்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளில் கலந்துள்ள வேதிப்பொருட்கள் கர்ப்பிணிகளுக்கும், குழந்தைக்கும் ஆபத்து விளைவிப்பவையாகும்.

மருத்துவரிடம் பேசுங்கள்

குழந்தை பெறுவதாக முடிவு செய்வதற்கு 3 மாதங்களுக்கு முன்னர், முன்-கருத்தரிப்பு சோதனை (Pre-natal test) செய்து கொள்ளுங்கள். அதில், உங்களுடைய இரத்த அழுத்தம், சர்க்கரை, தைராய்டு மற்றும் ஹீமோகுளோபின் அளவுகள் சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களுடைய குடும்ப பின்னணியைப் பொறுத்து, டாக்டர் மரபியல் பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரை செய்யலாம்.

ஓய்வு

மிகுந்த மன அழுத்தத்துடன் இருந்தால் உங்களால் கருத்தரிக்க முடியாது. எனவே, கருத்தரிக்கும் முன்னதாக நன்றாக ஓய்வு எடுங்கள். ஆர்வமான புத்தகங்களை படியுங்கள், தியானம் செய்யுங்கள், நண்பர்களுடன் நேரத்தைக் கழியுங்கள், சினிமா பாருங்கள், பாட்டு கேளுங்கள், நன்றாக தூங்குங்கள் அல்லது உங்களை அமைதியாக வைத்திருக்கக் கூடிய எந்த செயலையும் செய்யுங்கள். ஆனால், ஆல்கஹால் அல்லது மாத்திரைகளை சாப்பிட்டு மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்யாதீர்;கள்.

ஃபோலிக் அமிலம்

‘ஸ்பைனா பிஃபிடா (Spina Bifida)’ என்ற பிறக்கும் போது வரும் பிரச்சனையின் ஆபத்துகளை குறைக்க வேண்டுமென்றால், வைட்டமின் பி-ஐ அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரைகள் மற்றும் பச்சை இலைக் காய்கறிகளை சாப்பிட்ட ஃபோலிக் அமிலத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒயின், காப்ஃபைன் மற்றும் சிகரெட்டுக்கு – ‘நோ’

கருத்தரிப்பதற்கு முன்னர், சிகரெட், ஒயின் போன்றவற்றிற்கு பெரிய ‘நோ’ சொல்லுங்கள். புகையும், ஒயினும் உங்களுடைய குழந்தையின் மன வளர்ச்சியை பெரிதும் பாதிக்கின்றன. அதே போல, அதிகளவு காப்ஃபைனை உடலில் சேர்த்துக் கொள்வதால், கரு கலைந்து விடலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நிதி நிலைமை

பணவீக்கம் வேகமாக அதிகரித்து வருவதும், அனைவருடைய வாழ்வையும் புரட்டிப் போட்டுத் தள்ளுவதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். எனவே, குழந்தைக்காக கருத்தரிக்கும் முன்னதாக, நீங்கள் போதுமான அளவு பொருளாதார ரீதியில் வலுவாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பிரசவம் மற்றும் கர்ப்பகாலத்திற்கான செலவுகளை கணக்கிடுங்கள். நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் போட்டிருந்தால், அந்த நிறுவனத்தை அழைத்து, கர்ப்ப காலத்திற்கான கவரேஜ் பற்றி விசாரியுங்கள்.

Related posts

வாஷிங் மெஷினில் துவைக்கிறீர்களா? கவனம் தேவை

nathan

நிர்வாணமாக இருந்தால் இத்தனை நன்மைகளா?

nathan

சுற்றுலா சுகமானதாக அமைய ஆலோசனைகள்

nathan

உங்க உடலுக்கு வலிமை தரும் மசாஜ் தெரபி தெரியுமா

nathan

உங்க உடல் உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்த நீங்கள் சாப்பிட வேண்டிய 5 பொருட்கள்!!

nathan

தெரிஞ்சிக்கங்க…டயட் என்னும் பெயரில் பெண்கள் செய்யும் தவறுகள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சிசேரியனுக்கு பிறகு கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?

nathan

சுவையின்மைக்கான சித்த மருந்துகள்

nathan

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உயர் இரத்த அழுத்தம்! தெரிஞ்சிக்கங்க…

nathan