நம்ம ஊர் வெப்பநிலைக்கு சாதாரணமாகவே கன்னா பின்னாவென்று வியர்த்து வழியும். வீட்டில் சும்மா இருந்தால் கூட உடம்பே அவிந்து விடுவது போல இருக்கும்.
உச்சி வெயிலில் பைக்கில் போகும் போது டிராஃபிக்கில் மாட்டிக் கொண்டாலும் இதே நிலைமை தான். அதிலும், தலையில் ஹெல்மெட் மாட்டியிருந்தால் கேட்கவே வேண்டாம். தலை முழுவதும் வியர்வையில் நனைந்து, எரிச்சல் தான் மிஞ்சும்.
பொடுகுத் தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் சில இயற்கை வைத்தியங்கள்!!!
இந்தப் பிரச்சனைகளால் அடிக்கடி குளிக்க வேண்டுமென்று தான் தோன்றும். ஆனால் குளிக்கிற நோக்கில் அடிக்கடி தலைமுடியைக் நீரில் அலசுவது நல்லதா, எப்படியெல்லாம் தலைமுடியைப் பராமரிக்கலாம் என்பது குறித்து வல்லுனர்கள் கூறும் விளக்கத்தை இப்போது நாம் பார்க்கலாம்.
தினமும் அலசுதல்
ஹைப்பர்ஹிட்ரோசிஸ் என்ற வியர்வைப் பிரச்சனைகள் இருந்தால் ஒழிய, தலைமுடியை நாம் தினமும் அலச வேண்டுமென்ற அவசியமில்லை. ஷாம்புக்களில் ரசாயனங்கள் அதிகம் இருப்பதால் அவை தலைமுடிகளிலும் மயிர்க் கால்களிலும் உள்ள தேவையான எண்ணெய்களை நீக்குவதோடு, தலைமுடியை அளவுக்கு அதிகமாக உலர வைத்துவிடும். இது நல்லதல்ல. எனவே வாரத்திற்கு 3 முறை தலைமுடியைக் கழுவினால் போதும். அதிலும் சாதாரண நீரில் கழுவுதல் போதுமானது.
பொடுகுகளை நீக்குதல்
இப்போதெல்லாம் பொடுகுப் பிரச்சனை என்பது ஒரு பொதுவானது தான். எண்ணெய்த் தன்மையுள்ள பொடுகுகளை நீக்க, ஆலிவ் எண்ணெயில் தலைமுடியை 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து, அதற்குப் பின் சூடான டவல் கொண்டு சுற்றிக் கொண்டு, பின்னர் முடியைக் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், இஞ்சிச் சாற்றை உச்சந்தலையில் தேய்த்து, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் முடியைக் அலசுவதும் நல்லது. மேலும் பொடுகு எதிர்ப்பு ஷாம்பு தேய்த்து 2 நாட்களுக்கு ஒருமுறை தலைமுடியைக் கழுவுதல் நலம்.
ஹென்னா தேய்த்தல்
தலைமுடிக்கு ஹென்னாவை உபயோகிப்பதால், அது வறண்டு தான் போகும். அதனால் அதைப் பயன்படுத்தக் கூடாது என்று தான் பெரும்பாலான தலைமுடி நிபுணர்கள் சொல்வார்கள். அதற்குப் பதில் தரமான கண்டிஷனர்களைப் பயன்படுத்துவது சிறந்தது.
ஹேர் சீரம்கள்
ஹேர் சீரம்கள்
தலைமுடிகளை மிருதுவாக்க ஹேர் சீரம்களைப் பயன்படுத்துவது நல்லது. ஆனால் இதை அளவுக்கு அதிகமாக உபயோகிக்கக் கூடாது. ஓரிரண்டு துளிகளை மட்டுமே எடுத்து முடிகளில் சீராகத் தடவினாலே போதும்.
ஆரோக்கியமான கேசத்திற்கு…
நுனியில் பாதிப்படைந்துள்ள முடிகளை ட்ரிம் செய்து விடுங்கள்.
ஆரோக்கியமான கேசத்திற்கு…
சூரிய ஒளியிலிருந்து முடியைப் பாதுகாக்க தொப்பி, ஸ்கார்ஃப் ஆகியவற்றை அணியலாம்.
ஆரோக்கியமான கேசத்திற்கு…
காலை 11 முதல் மாலை 4 மணி வரை வெயிலில் சுற்ற வேண்டியிருந்தால், ஹேர் சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்துங்கள்.
ஆரோக்கியமான கேசத்திற்கு…
நீச்சலடிக்கப் போகும் முன், எப்போதும் கொஞ்சம் கண்டிஷனரைத் தேய்த்துக் கொள்ளுங்கள்.
ஹேர் ஸ்பா
ஹேர் ஸ்பா செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டால், இயற்கை வழிகளையே நாடுங்கள். செம்பருத்திப் பூவை நன்றாக அரைத்து முடிகளில் தடவுவது நல்லது. அது முடியை நன்கு கருமையாகவும், வலுவாகவும் வளரச் செய்யும். மேலும் இரும்புச்சத்து அதிகமுள்ள மருதாணி மற்றும் நோயெதிர்ப்பு சக்தி நிறைந்த வேம்பு ஆகியவையும் முடியின் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதே போல் முடி அலர்ஜிக்கு கற்றாழை மிகவும் நல்லது. முடிகளில் கலர் செய்திருப்பவர்கள், வெண்ணெயை உபயோகிக்கலாம்.
இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…