28.7 C
Chennai
Friday, Jul 10, 2026
மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ்! மூட்டு வலியை அடியோடு அழிக்கும் முடக்கதான் கீரை வாழை இலை இட்லி.. எப்படி செய்வது?..

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் நல பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக கீரை வாழை இலை இட்லியை எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்..

இவை, முடக்கத்தான் கீரை, மூட்டு வலி, முழங்கால் வலிகளை நீக்கும். சீறுநீர் தடையின்றி வெளியேறும். எலும்புக்கு நல்ல சக்தியைக் கொடுக்கிறது.

தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி – 3 கப்,

முழு உளுந்து – அரை கப்

வெந்தயம் – ஒரு கைப்பிடி

முடக்கத்தான் கீரை (ஆய்ந்தது) – 2 கப்

வாழை இலை – 1

நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் தனித்தனியே ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறியதும் முதலில் வெந்தயத்தைப் போட்டு சுமார் ஐந்து நிமிடங்கள் அரைத்து, முடக்கத்தான் கீரையைச் சேர்க்கவும். பிறகு உளுந்து, அரிசியைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

இப்படியான மாவில் உப்பு சேர்த்துக் கரைத்துவைத்த ஆறு மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும்.

இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து, சிறிது நல்லெண்ணெய் தடவி மாவை இடலையாக (அகலமாக) கொஞ்சம் தடிமனாக ஊற்றி மூடிவைத்து ஆவியில் வேகவிடவும்.

10 நிமிடங்களில் வாழை இலை மணத்துடன்… சுடச்சுட சுவையான, சத்தான முடக்கத்தான் வாழை இலை இட்லி தயார்.

Related posts

மகிழ்ச்சியின் ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள்

nathan

உங்களுக்கு இதுபோன்ற வயிற்று வலி இருந்தால், நீங்கள் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் !

nathan

கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள், பக்க விளைவுகள் என்ன?

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளுக்கு ஏற்படும் ஒமிக்ரான் தொற்று:அறிகுறிகள் என்னென்ன?

nathan

தென்கொரியாவை கலக்கி வரும் கல்லறை சிகிச்சை பற்றி உங்களுக்கு தெரியுமா?

nathan

உங்களுக்கு சைனஸ் பிரச்னையை விரட்ட வேண்டுமா? இதை மட்டும் இனி செய்யுங்க

nathan

பதறவைக்கும் இதய நோய்! – ஏன் வருகிறது… என்ன தீர்வு?

nathan

தெரிந்துகொள்ளுங்கள் ! ஏலக்காயில் அடங்கியிருக்கும் நன்மைகள் இவ்வளவா?..

nathan

மெனோபாஸ் வயது பிறகும் மாதவிடாய் வந்தால்…?

nathan