625.500.560.350.160.300. 4
மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ்! மூட்டு வலியை அடியோடு அழிக்கும் முடக்கதான் கீரை வாழை இலை இட்லி.. எப்படி செய்வது?..

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் நல பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக கீரை வாழை இலை இட்லியை எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்..

இவை, முடக்கத்தான் கீரை, மூட்டு வலி, முழங்கால் வலிகளை நீக்கும். சீறுநீர் தடையின்றி வெளியேறும். எலும்புக்கு நல்ல சக்தியைக் கொடுக்கிறது.

தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி – 3 கப்,

முழு உளுந்து – அரை கப்

வெந்தயம் – ஒரு கைப்பிடி

முடக்கத்தான் கீரை (ஆய்ந்தது) – 2 கப்

வாழை இலை – 1

நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் தனித்தனியே ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறியதும் முதலில் வெந்தயத்தைப் போட்டு சுமார் ஐந்து நிமிடங்கள் அரைத்து, முடக்கத்தான் கீரையைச் சேர்க்கவும். பிறகு உளுந்து, அரிசியைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

இப்படியான மாவில் உப்பு சேர்த்துக் கரைத்துவைத்த ஆறு மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும்.

இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து, சிறிது நல்லெண்ணெய் தடவி மாவை இடலையாக (அகலமாக) கொஞ்சம் தடிமனாக ஊற்றி மூடிவைத்து ஆவியில் வேகவிடவும்.

10 நிமிடங்களில் வாழை இலை மணத்துடன்… சுடச்சுட சுவையான, சத்தான முடக்கத்தான் வாழை இலை இட்லி தயார்.

Related posts

உங்களுக்கு அழுகையின் ரகசியம் தெரியுமா?

nathan

சிறுநீரக பாதிப்புடையோர் சாப்பிடக் கூடியவை

nathan

தடுப்பூசிகள் டாக்டர் என்.கங்கா

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் 3 துளசி இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

எளிய இயற்கை வைத்தியம் – 50 மருத்துவ குறிப்புகள்!

nathan

பாட்டி வைத்தியத்தின் மூலம் நோய்களுக்கான தீர்வுகள்!

nathan

மாத்திரைகளை இரண்டாக உடைத்து சாப்பிடலாமா.?

nathan

பெண்கள், குழந்தைகளைத் தாக்கும் இரத்தச் சோகை…எச்சரிக்கை டிப்ஸ்!

nathan

கண், உள்ளங்கை, நெற்றி துடித்தால் என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா?

nathan