23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
24 1395656
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் நீரிழிவு வந்தால் பின்பற்ற வேண்டிய டயட் டிப்ஸ்…

பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அதிலும் இக்காலத்தில் நீரிழிவு நோய் இருந்தால், அப்போது இன்னும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். ஒருவேளை அப்படி கவனத்துடன் நடந்து கொள்ளாவிட்டால், கருச்சிதைவு, பிறப்பு குறைபாடு, குறைப்பிரசவம் மற்றும் அதிக எடையுடன் குழந்தை போன்றவற்றை சந்திக்கக்கூடும்.

ஆனால் சரியான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றினால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்து, நல்ல அழகான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். கர்ப்ப காலத்தில் சில உணவுப் பொருட்களின் மீது ஆசை அதிகரிக்கும் என்பதால், உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது சற்று கடினம் தான். இருந்தாலும், குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம்.

இங்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு வந்தால் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய சில டயட் டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி வந்தால், நீரிழிவு நோயினால் குழந்தைக்கு எந்த பிரச்சனையும் வராமல் தடுக்கலாம்.

இனிப்புக்களை குறைக்கவும்

இந்தியர்களால் இனிப்புக்களின் மீது உள்ள ஆசையை குறைக்க முடியாது. எப்போது விருந்தினர்களின் வீட்டிற்கு செல்லும் போதும், இனிப்புக்களை வாங்கிச் செல்வது வழக்கம். அப்படி உங்களை யாரேனும் பார்க்க வரும் போது, இனிப்புக்களை வாங்கி வருவார்கள். ஆனால் அந்த இனிப்புக்களை நீரிழிவு இருக்கும் போது அதிகமாக சாப்பிட வேண்டாம். இருப்பினும் குறைந்த அளவில் ருசிக்காக சாப்பிடலாம்.

ஆரோக்கியமாக சாப்பிடவும்

கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் என்ன சாப்பிடுகிறார்களோ அதைப் பொறுத்து தான் குழந்தையின் வளர்ச்சி உள்ளது. எனவே பெண்கள் நீரிழிவு இருக்கும் போது இனிப்புக்களை அதிகம் சாப்பிட்டால், அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். இதனால் கருப்பையில் இன்சுலின் உற்பத்தி அதிகரித்து, இறுதியில் குழந்தை குண்டாக பிறக்க வழிவகுக்கும்.

ஜங்க் உணவுகளை தவிர்க்கவும்

எவ்வளவு தான் ஜங்க் உணவுகள் சுவையுடன் இருந்தாலும், அதனை கர்ப்ப காலத்தில் நீரிழிவு இருக்கும் போது சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதில் ருசிக்காக சேர்க்கப்பட்ட செயற்கை பொருட்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்.

சரிவிகிதத்தில் உட்கொள்ளவும்

கர்ப்ப காலத்தில் நீரிழிவு இருந்தால், சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள தயங்க வேண்டாம். ஆனால் அப்படி உட்கொள்ளும் போது சரிசமமாக உட்கொள்ள வேண்டும். அதிலும் 60:20:20 என்ற விகிதத்தில் கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கொழுப்புக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி திட்டமிட்டு உணவுகளை எடுத்துக் கொண்டால், குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுக்கலாம்.

அதிக நார்ச்சத்துள்ள உணவுகள்

நீரிழிவு உள்ள கர்ப்பிணிகள் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் நவதானியங்கள், ஓட்ஸ், பீன்ஸ், ப்ராக்கோலி போன்றவற்றையும், பழங்களில் தர்பூசணியை அதிகம் உட்கொள்வது மிகவும் நல்லது.

இயற்கை வைத்தியங்கள்

இந்தியர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இயற்கை வைத்தியத்தின் முலம் சரிசெய்து கொள்வதில் மிகவும் ஸ்மார்ட்டானவர்கள். அதிலும் நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள பல இயற்கை வைத்தியங்கள் உள்ளன. ஆனால் கர்ப்ப காலத்தில் அவற்றை பின்பற்றும் முன் மருத்துவரிடம் ஆலோசித்து பின் அவற்றை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அவை வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

Related posts

பசியின்மையை நீங்கும் இலந்தை

nathan

தூங்கும் போது திடீரென கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன் தெரியுமா?

nathan

தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி கையாள்வது?

nathan

வேரிகோஸ் வெயின்ஸ் வருவதற்கான காரணங்களும் அறிகுறிகளும்!!இத படிங்க

nathan

குறைந்து வரும் பெண்கள்:திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் திண்டாடும் மாப்பிள்ளைகள்

nathan

கர்ப்ப காலத்தில் ஆன்டி பயாடிக் மருந்துகளை சாப்பிடலாமா?

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த செடிக்கு பேரே இன்சுலின் செடியாம்…

nathan

தெரிஞ்சிக்கங்க… அடிக்கடி முதுகு வலிக்குதா? அப்ப உங்க உடம்புல இந்த சத்து கம்மியா இருக்குன்னு அர்த்தம்…

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த மரத்தின் காற்றுப் பட்டாலே வியாதிகள் எல்லாம் தீரும்!

nathan