28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
625.0.560.370.180.700 e1597114340980
ஆரோக்கிய உணவு

நாக்கு ஊறும் சுவையான மட்டன் குழம்பு…

மட்டன் குழம்பு குக்கரில் செய்வதால் வேலை சீக்கிரம் முடிந்துவிடும். அதே சமயம் மட்டனும் நன்கு வெந்திருக்கும். எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்
ஆட்டுக் கறி – 1 கிலோ

கடலை எண்ணெய் – 40 ml

பட்டை – 2 துண்டு

ஏலக்காய் – 3ஸ்டார் பூ- 2

பிரிஞ்சு இலை – 1

சோம்பு – 1/2 Tsp

சின்ன வெங்காயம் – 15

கறிவேப்பிலை – சிறிதளவு

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 Tsp

தக்காளி – 2

மஞ்சள் பொடி – 1 Tsp

மிளகாய் பொடி – 1 Tsp

மிளகு பொடி – 1/2 Tsp

உப்பு – தே.அ

மட்டன் குழம்பு பொடி – 3 1/2 Tsp

தண்ணீர் – 2 கப்

முந்திரி – 10

கசகசா – 3/4 Tsp

கரம் மசாலா – 1/2 Tsp

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :
குக்கர் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, இலை போட்டு வதக்குங்கள். பின் சோம்பு போட்டு பொறிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக தக்காளி சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மட்டனை சேர்த்து அதோடு மஞ்சள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து பிறட்டுங்கள். மசாலா நன்கு சேர வேண்டும்.

அடுத்ததாக மிளகுப் பொடி, மட்டன் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்துப் பிறட்டி தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். அடுத்ததாக குக்கரை மூடிவிட்டு ஐந்து விசில் விடுங்கள்.

அதற்கிடையே முந்திரி மற்றும் கசகசாவை மைய அரைத்துக்கொள்ளுங்கள். விசில் வந்ததும் குக்கரைத் திறந்து மீண்டும் அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து குழம்பை கொதிக்க வையுங்கள்.

ஒரு கொதி வரும் போது அரைத்த முந்திரி பேஸ்டை சேருங்கள். 5 நிமிடங்களுக்குக் கொதித்ததும் இறுதியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் சுவையான மட்டன் குழம்பு தயார்.

Related posts

வயிற்று தொல்லைகளை போக்கும் பிரண்டை துவையல்

nathan

உடலின் வலிமையை அதிகரிக்கும் உணவுகள்!!!

nathan

முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?

nathan

ரத்த சோகையை குணமாக்கும் பேரீச்சம் பழம்

nathan

பலமுறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த நோய் உள்ளவர்கள் பால் குடித்தால் உயிருக்கே ஆபத்தாம்!

nathan

நெய்மீன் கருவாடு தொக்கு

nathan

பேரிச்சம்பழம் சாப்பிட்டாலும் பக்கவிளைவுகள் இருக்கா…?அளவாக சாப்பிடுங்கள்…

nathan

எச்சரிக்கை! தந்தூரி உணவை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் உபாதைகள்

nathan