31.1 C
Chennai
Monday, May 20, 2024
அசைவ வகைகள்

ஆந்திரா ஸ்டைல்: மட்டன் கைமா குழம்பு

30 1435649377 mutton keema curry

மட்டன் கைமாவை பலருக்கும் சரியாக சமைத்து சாப்பிடத் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், அதனைக் கொண்டு வெறும் வடை தான் செய்யத் தெரியும். ஆனால் அதனைக் கொண்டு அருமையான சுவையில் குழம்பு செய்யலாம் என்பது தெரியுமா? அதிலும் ஆந்திரா ஸ்டைலில் சுவையாக மட்டன் கைமா குழம்பு செய்து சாப்பிடலாம்.

இங்கு அந்த ஆந்திரா ஸ்டைல் மட்டன் கைமா குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பார்த்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மட்டன் கைமா – 250 கிராம்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 சிட்டிகை
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மட்டன் கைமாவை நீரில் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின் அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின அதில் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி, பின் அதில் தக்காளி, ஊற வைத்த கைமா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

அடுத்து அதில் மிளகாய் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, 1 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 15-20 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் மூடியை திறந்து பார்த்து, குழம்பு போதாதெனில் மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் மட்டன் கைமா குழம்பு ரெடி!!!

Related posts

காரசாரமான சைடு டிஷ் மீன் மிளகு மசாலா

nathan

சுவையான நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படி

nathan

கோவா க்ரீன் சிக்கன் குழம்பு

nathan

அவரைக்காய் முட்டை பொரியல் செய்வது எப்படி?

nathan

இறால் குடமிளகாய் வறுவல்

nathan

நாவூரும் சுவையில் இறால் சுக்கா! எவ்வாறு தயார் செய்யலாம்?

nathan

சுவையான பஞ்சாபி சிக்கன்

nathan

சிக்கன் ப்ரை / Chicken Fry

nathan

சுவையான மங்களூரியன் சிக்கன் குழம்பு

nathan