தோல் மனிதனின் அழகு அடையாளம். மாசு, மருவற்ற பளிங்கு போன்ற சருமமும், பார்த்ததும் பரவசப்படுத்தும் ‘பளிச்’ நிறமும் வேண்டும் என்பதற்காக என்னென்னவோ முயற்சிக்கிறோம். ஒவ்வொரு பருவத்திலும், சருமத்தில் மாற்றங்கள் தோன்றுவது இயற்கைதான். சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தேவைப்படும் பாராமரிப்பு முறைகளைச் சரிவரக் கையாண்டால், சருமத்தில் நிரந்தரமான அழகைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்கின்றனர் சரும நிபுணர்கள். ஒவ்வொருவரின் நிறத்தையும் வெளிக்காட்டுவதோடு நம் சருமத்தின் வேலை முடிவதில்லை. சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி-யைத் தயாரிப்பது, வெளியில் இருந்து வரும் கிருமிகளை அண்டவிடாமல் அரண்போல் காப்பது, குளிர் காலத்தில் உடலைச் சூடாகவும், கோடைக் காலங்களில் குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்வது எனப் பற்பல பணிகளை மேற்கொள்கிறது. உடலை ஒரு போர்வையாகப் போர்த்தி இருக்கும் சருமத்தைப் பாதுகாக்க, அழகாக்க, மிளிரவைக்க அட்டகாசமான டிப்ஸ்களை வழங்குகின்றனர் தோல் சிகிச்சை மருத்துவர் ரத்னவேல், சித்த மருத்துவர் வேலாயுதம், இயற்கை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.
வியர்வை
மனிதனின் உடலில் இருந்து ஒரு நாளைக்குச் சராசரியாக அரை லிட்டர் வியர்வை வெளியேறும். உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைப்பதற்குத்தான் வியர்வை சுரக்கிறது. அது வரும் பாதையில் அடைப்பு இருந்தால், அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டு, சின்னச் சின்னக் கொப்பளங்கள் தோன்றும். இதுதான் வியர்க்குரு.
வியர்க்குரு பிரச்னையில் இருந்து விடுபட…
தினமும் குறைந்தது இரண்டு முறை குளிக்கவேண்டும். கேலமைன் (calamine)லோஷன் தடவுவது நல்லது.
சிவப்பும் கருக்கும்
பொதுவாக, தோலின் மேல்பாகம் 28 நாட்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது. தோலின் நிறம் ஃபியோமெலனின் (Pheomelanin)மற்றும் யூமெலனின் (Eumelanin)என்ற மெலனின் அணுக்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இயற்கை ஒருவருடைய தோலின் நிறத்தை கூடுதல் ஃபியோமெலனின் கொண்டு எழுதினால், அவருடைய தோல் நிறம் வெள்ளையாகவும், யூமெலனினைக் கூடுதலாகக் கொண்டு எழுதினால் கறுப்பு நிறமாகவும் அமையும்.
முகப்பரு
முகத்தில் உள்ள சுரப்பிகளில் அடைப்பு மற்றும் பாக்டீரியா தொற்று, ஹார்மோன் மாற்றங்கள், சில வகை மாத்திரைகள், ஒவ்வாமை, அழகு சாதனங்கள் போன்ற காரணங்களால் முகத்தில் பருக்கள் வரலாம். அதைத் தொடுவதோ, கிள்ளுவதோ கூடாது. அதுவே மாறாத தழும்பாகிவிடும்.
சிலருக்கு முழங்கை, இடுப்புப் பகுதியில் பருக்கள் போலவும், தோலில் முட்களும் தோன்றலாம். இதற்கு, ஃபாலிகுலர் ஹைப்பர்கெரட்டோஸிஸ் (follicular hyperkeratosis) என்று பெயர். வைட்டமின் ஏ, டி அத்தியாவசியக் கொழுப்பு அமிலம் ஆகியவற்றின் குறைபாட்டால் இது ஏற்படுகிறது.
பரு வராமல் தடுக்க:
தோல் சுருக்கம்
தோலில் நீர்சத்துக் குறையும்போது, கை, கால்களில் அரிப்பு, வெடிப்பு, சிவந்த தடிப்புகள், மற்றும் வீக்கம் ஏற்படலாம். நீர்சத்தினால் வரும் சாதாரண வெடிப்பு கால் பாதத்தின் ஓரங்களில் வரும். சிலருக்கு சிவந்து தீக்காயங்கள் போலவும் தோற்றம் அளிக்கலாம். கொப்புளங்கள் ஏற்பட்டு அதில் இருந்து நீர் கசியக்கூடும். இதுவே உலர்ந்து தோலின் மீது படையாகப் படியவும் நேரிடும்.
தேவையற்ற முடி…
தைராய்டு ஹார்மோன் பிரச்னை, கருப்பையில் நீர்க்கட்டி, மாதவிடாய்க் கோளாறு, ஆண் தன்மைக்கான ஹார்மோன் அதிகமாகச் சுரத்தல் போன்ற காரணங்களால் பெண்களுக்கு முகம் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் முடி வளர நேரிடுகிறது. இதுவே, மனதளவில் மிகப் பெரிய சங்கடத்தை ஏற்படுத்திவிடும்.
கண் கருவளையம்
கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் அழகை முற்றிலும் பாதிக்கும். நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிவதாலும், தூக்கமின்மை காரணமாகவும் கண்ணின் கீழ் கறுத்துப் போகக்கூடும். உடலில் வெப்பம் அதிகரித்து நேரடியாகக் கண்களைப் பாதிக்கும். கண்களுக்கு எரிச்சலைத் தரும்.
சருமப் பராமரிப்பு
எண்ணெய்ச் சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம், அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய சருமம் என்று சருமத்தைப் பல வகைப்படுத்தலாம். இதில் உங்களது சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை முதலில் தெரிந்துகொண்டு, அதற்கேற்பப் பராமரித்துவந்தால், சருமம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து மீள முடியும்.
எண்ணெய் சருமத்தினருக்கு…
கொளுத்தும் வெயில் உங்கள் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து, உங்கள் முக அழகை கெடுத்துவிடும்.
நீங்கள் செய்ய வேண்டியது:
வறண்ட சருமத்தினருக்கு…
தோலில் ஈரப்பசை, எண்ணெய்ப் பசை மிகவும் குறைவாக இருப்பதால், வறண்ட சருமம் ஏற்படுகிறது.
நார்மல் சருமம்
எந்தவிதமான பிரச்னையும் இல்லாத சூப்பரான சருமம் இது. தரமான அழகு சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம், பாதிப்பு ஏற்படாமல், அழகைக் கூட்டலாம்.
அலர்ஜி சருமம்
உடுத்தும் உடை முதல் உண்ணும் உணவு வரை எதுவும் இந்த வகை சருமத்தினருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். இத்தகைய சரும அலர்ஜி இருப்பவர்கள், எதெல்லாம் தனக்கு அலர்ஜியாகிறது என்பதை முதலில் தெரிந்துகொண்டு அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
உணவு
சரும ஆரோக்கியம் வெளிப்புறத்தில் செய்யும் சிகிச்சையைப் பொறுத்து மட்டும் அல்ல… நாம் சாப்பிடும் உணவையும் பொறுத்தது. முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. சருமத்தின் ஈரப்பதத்தைப் பராமரிப்பதில் தண்ணீர் முக்கியப் பங்காற்றுகிறது. தினமும், உணவில் அதிக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையும், நம் உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான தண்ணீரை வழங்குகின்றன.
நவீன சிகிச்சை
பருக்கள், சுருக்கங்கள், மரு, மங்கு, கரும்புள்ளி போன்ற அனைத்து சருமப் பிரச்னைகளையும் ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டு, அதற்கேற்பப் பாதுகாப்பு முறைகளையும், சிகிச்சைகளையும் மேற்கொள்வது அவசியம். பிரச்னை முற்றிய நிலையில், அழகு நிலையங்களை அணுகுவதோ, கை வைத்தியத்தின் மூலம் சரிசெய்ய முயற்சிப்பதோ, பலனைத் தராது. தற்போது, தோல் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் நவீன முறையில் சிகிச்சைகள் உள்ளன. இதனால் எந்தப் பக்கவிளைவுகளும் இருக்காது.
தொகுப்பு: ரேவதி