28.1 C
Chennai
Saturday, Nov 16, 2024
7 rash 15
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தொடையின் உட்புறத்தில் ரொம்ப அரிக்குதா?அப்ப தினமும் செய்யுங்க…

சிலர் கால்களுக்கு இடையில் தொடைப்பகுதில் எப்போதும் சொரிந்து கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். உங்களுக்கு நெருக்கமானவர்கள் கூட இந்த பாதிப்பைக் கொண்டிருக்கக்கூடும். கோடை காலத்தில் அதிகமான வெப்பம் காரணமாக உண்டாகும் வியர்வை காரணமாக தொடை பகுதியில் இவ்வித அரிப்பு உண்டாகலாம். கால்களுக்கு இடையில் இருப்பதால் இந்த அரிப்பு எளிதில் விலகுவதில்லை.

 

அலுவலகத்தில் அல்லது பொது இடங்களில் நாம் இருக்கும் போது இந்த இடத்தில் அரிப்பு ஏற்பட்டால் அது ஒருவித அசோகரியத்தை உண்டாக்கலாம். இந்த பாதிப்பை எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல் விரைவாக போக்குவதற்கான தீர்வுகளை உங்களுக்கு நாங்கள் இப்போது தரவிருக்கிறோம். இவை ஏற்கனவே முயற்சிக்கப்பட்டு நல்ல தீர்வைத் தந்துள்ளன. எனவே நீங்கள் நிச்சயம் முயற்சிக்கலாம்.

நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்

நெல்லிக்காய் உட்கொள்வதால் பல்வேறு நோய்கள் குணமாகும் நிலையில், தொடையில் உள்ள அரிப்பைப் போக்கவும் நெல்லிக்காய் உதவுகிறது. நெல்லிக்காயின் தோல்பகுதியுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து அரிப்பு இருக்கும் இடத்தில் தடவவும். அடுத்த இரண்டு நாட்களில் அரிப்பு காணாமல் போய்விடும்.

கடுகு எண்ணெய் , தண்ணீர் மற்றும் எலுமிச்சை

எலுமிச்சை சாற்றில், கடுகு எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து, அந்த விழுதை அரிப்பு உள்ள இடத்தில் தடவ அரிப்பு உடனடியாக மறைகிறது.

செலரி இலைகள்

20 கிராம் செலரி இலைகளை 100 கிராம் அளவு தண்ணீரில் கொதிக்க விடவும். தொடையில் அரிப்பு உண்டாகும் போது இந்த நீர் கொண்டு அந்த இடத்தைக் கழுவவும். செலரி இலையை அரைத்து அரிப்பு உள்ள இடத்தில் தடவுவதால் கூட அரிப்பை வேரிலிருந்து அகற்றிவிட முடியும்.

புளிப்பு தயிர் சேர்க்கலாம்

அரிப்பு இருக்கும் தொடை பகுதியில் புளிப்பு தயிரைத் தடவவும். இதனால் அரிப்பில் இருந்து நிவாரணம் பெற முடியும்.

எலுமிச்சை மற்றும் வாழைப்பழம்

வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நன்மை தரும் ஒரு உணவுப்பொருள். அதேப்போல் பல்வேறு நோய்களுக்கும் இது ஒரு சிறந்த தீர்வாகும். எலுமிச்சை சாறு மற்றும் வாழைப்பழ கலவையை அரிப்பு இருக்கும் இடத்தில் தடவுவதால் அரிப்பு விரைவில் குணமடையும்.

எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அரிப்பு இருக்கும் இடத்தில் தடவி கைகளால் மென்மையாக மசாஜ் செய்யவும். இதனால் அரிப்பு விரைவாக குணமடையும்.

தோல் சார்ந்த நோய்களுக்கான எளிய தீர்வுகள்

அரிப்பு, எக்ஸிமா, படை போன்ற தோல் சார்ந்த நோய் யாருக்கும் ஏற்படலாம். இவை எல்லாவற்றிற்கும் இயற்கையான தீர்வுகள் நல்ல பலன் கொடுக்கும். பசு நெய் இதற்கு ஒரு சிறந்த தீர்வைத் தரும். புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மைக் கொண்ட பசு நெய் இந்த பாதிப்பிற்கு ஏற்ற ஒரு தீர்வாகும். பசு நெய் எவ்வளவுக்கு பழமையானதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு புளிப்பு தன்மை கொண்டிருக்கும். அந்த அளவிற்கு விலைமதிப்பற்றதாகவும் இருக்கும். பழைய நெய் மிகவும் புளிப்பாக இருப்பதால் பல்வேறு சரும நோய்களுக்கு தீர்வைத் தருகிறது.

 

நெய்யை எவ்வாறு பயன்படுத்துவது?

எக்ஸிமா போன்ற பாதிப்புகளுக்கு நெய் ஒரு வரப்பிரசாதம். பசு நெய் எவ்வளவு சாப்பிட்டாலும் எந்த ஒரு பக்க விளைவும் இருப்பதில்லை, மாறாக பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. படை போன்ற பாதிப்புகளுக்கு கருமிளகு ஈயமஞ்சள் , கால்வனைஸ் சால்மன் ஆகியவற்றை 10 கிராம் அளவு எடுத்து பசுநெய்யுடன் கலக்கவும். இந்த கலவையை எக்சிமா பாதிப்பு உள்ள இடத்தில் ஒருநாளில் 3-4 முறை தடவவும். அடுத்த சில நாட்களில் எக்ஸிமா முற்றிலும் மறைந்துவிடும்.

முடிவுரை

கோடை காலத்தில் சரும தொற்று உண்டாவதற்கான பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. இந்த வகை சரும தொற்று சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமலிருந்தால் பல்வேறு தீவிர பாதிப்புகளை உண்டாக்கக்கூடும். குறிப்பாக இந்த வகை தொற்று பாதிப்பு பிறப்புறுப்பு அல்லது அக்குள் போன்ற மறைவான பகுதிகளில் உண்டாகும் போது இன்னும் தீவிர பாதிப்பை உண்டாக்கும். ஈரமான ஆடை, இறுக்கமான ஆடை , வியர்வை, சோப்பு போன்றவற்றின் காரணமாக இவ்வித நோய்கள் உண்டாகலாம். இவ்வித தொற்று காரணமாக சருமம் சிவந்து போவது, தடிப்புகள் உண்டாவது, நீடித்த அரிப்பு போன்றவை ஏற்படும். இந்த தொற்று பரவும் போது அதனை குணப்படுத்த நீண்ட நாட்கள் ஆகலாம்.

Related posts

முதல் இரவு பழக்கவழக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் தெரிந்து கொள்ளலாம்.

nathan

உடல் பருமன் சுட்டு (Body Mass Index)

nathan

கருப்பை வலுப்பெற தினமும் உணவில் சேர்க்க

nathan

மாமியார்-மருமகள் ஒற்றுமைக்கு…பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இந்த பிரச்சனை இருந்தா இளநீர் குடிக்காதீங்க?தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா பொடுகு தொல்லையை போக்க வெறும் 10 மிளகு இருந்தாலே போதுமாம்!

nathan

இந்த 4 ராசிக்காரர்கள் கடன் வாங்குவதையோ, கொடுப்பதையோ தவிர்ப்பது நல்லதாம்

nathan

உங்கள் உயரம் கூடவோ, குறையவோ நீங்கள் பிறந்த மாதம் காரணமாக இருக்கலாம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குடும்ப தலைவிகளுக்கான சில எளிய வீட்டு குறிப்புகள்….!

nathan