28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
201710271032438083 1 menstrualcycle. L styvpf
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பி.சி.ஓ.டி. பிரச்சனைக்கு ‘குட்-பை’ சொல்லணுமா?அப்ப தினமும் செய்யுங்க…

பாலிசிஸ்டிக் கருப்பை கோளாறு (Polycystic Ovary Disorder ) அதாவது PCOD/பி.சி.ஓ.டி. எனப்படுவது கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடிய ஒரு பிரச்சனை. முறையற்ற மாதவிடாய், எடை அதிகரிப்பு பிரச்சனை, ஹார்மோன் சமனற்ற நிலை போன்றவை அதன் பொதுவான அறிகுறிகள். மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால், 8ல் ஒரு பெண்ணிற்கு இந்த பிரச்சனை இருக்கிறது என்றும், இதற்கு மருத்துவம் பார்க்காவிட்டால், மலட்டுத்தன்மை, டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் நாள்பட்ட உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.

பி.சி.ஓ.டி பெரும்பாலும் வாழ்க்கை முறை கோளாறுகளுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு பிரச்சனையாகும். இருப்பினும், தங்களது அன்றாட வாழ்க்கையில் சிறு சிறு மாற்றங்களை கொண்டு வந்தாலே போதும், இந்த பிரச்சனை எளிதில் குறைந்துவிடும். அதாவது, அதிகப்படியான உடல் வேலைபாடு போன்ற மாற்றங்களை கொண்டு வர வேண்டும். உணவு பழக்கங்களில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் தான் அவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வாழ்க்கையில் முறையில் மாற்றம்

நல்ல கொழுப்புகள், பழங்கள், காய்கறிகள் அடங்கிய சிறந்ததொரு, ஆரோக்கியமான உணவு பழக்கம் மிகவும் முக்கியமான ஒன்று. குறிப்பாக, உணவில் இருந்து பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்புகளை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். பி.சி.ஓ.டி நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் நட்ஸ் அல்லது விதைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா -3 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நட்ஸ் மற்றும் விதைகளை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவை, ஹார்மோன் செயல்பாட்டையும், எடை ஏற்ற இறக்கங்களையும் நிர்வகித்திடும். அப்படிப்பட்ட 5 நட்ஸ் பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். பி.சி.ஓ.டி. உள்ளவர்கள் இவற்றை தங்களது உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளவும்.

ஆளி விதைகள்

ஆளி விதையில் ஒமேகா -3 மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. பி.சி.ஓ.டி மற்றும் பி.சி.ஓ.எஸ் உடன் தொடர்புடைய பக்க விளைவுகளை கட்டுப்படுத்த இவை பெரிதும் உதவுகின்றன. உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கும், நல்ல கருவுறுதலை ஊக்குவிப்பதற்கும், மாதவிடாயை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவக்கூடிய லிக்னன் எனப்படும் ஆக்ஸிஜனேற்றத்தை உடலுக்கு வழங்கிடும். ஆளி விதைகளை தவறாமல் உட்கொள்வது நுண்ணறைகளின் இருப்பைக் குறைக்கும், மாதவிடாய் சுழற்சியை மென்மையாக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பூசணி விதைகள்
பூசணி விதைகளில் உள்ள எண்ணிலடங்கா நன்மைகளை வைத்து, அவற்றை ஒவ்வொரு பெண்ணின் பி.எஃப்.எஃப் என்று கூட கூறலாம். மெக்னீசியம் அதிகம் நிறைந்த, பூசணி விதைகள் தசைப்பிடிப்பால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு வலி நிவாரணி மருந்தாக செயல்படக்கூடும். அதுமட்டுமின்றி, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கையும் கட்டுப்படுத்தும். இது பி.சி.ஓ.டி. போராளி என்றும் அறியப்படுகிறது. ஏனென்றால் இது ‘பீட்டா-சிட்டோஸ்டெரால்’ என்ற நொதியைக் கொண்டுள்ளது. மேலும், பி.சி.ஓ.டி. உடன் தொடர்புடைய அதிகப்படியான முடி உதிர்தலையும் குறைக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களையும் பூசணி விதை வழங்குகிறது.

சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகளில், உடலில் ஹார்மோன் சமநிலையை கட்டுப்படுத்திட உதவும் 100 வகையான என்சைம்கள் நிறைந்துள்ளன. இந்த விதைகளில் உள்ள ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் நொதிகள் உற்பத்தியை சமநிலைப்படுத்தி, மாதவிடாய் கால முன் நோய்க்குறி, தைராய்டு அறிகுறி போன்றவற்றை நிர்வகிக்க உதவுகிறது. இதனால், கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் அடிக்கடி நிகழும் காலையில் ஏற்படும் நோயைக் கட்டுப்படுத்தவும் உதவக்கூடும். சூரியகாந்தி விதைகளில் உள்ள வைட்டமின் பி6, புரதம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஒருங்கிணைக்க உதவுவதோடு உடலின் சமநிலையை மேம்படுத்துகிறது.

எள் விதைகள்
நல்ல செய்தி என்னவென்றால், இந்தியர்களாகிய நம்மில் பலர் நம் உணவின் ஒரு பகுதியாக எள் விதைகளை உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்கனவே கொண்டிருக்கிறோம். வெள்ளை எள் அல்லது கருப்பு எள் எதுவாக இருந்தாலும், அதிலுள்ள பொட்டாசியம், ஹார்மோனை ஒழுங்குபடுத்தும் மெக்னீசியம், துத்தநாகம்(ஜிங்க்) ஆகியவற்றை கொண்டுள்ளது. இதில் கலோரிகளும் கணிசமாகக் குறைவாகவே உள்ளது, இது உங்கள் உடல் எடையை நிர்வகிக்க ஒரு நல்ல வழி என்றே கூறலாம். ஆயுர்வேதத்தின் படி, எள்ளில் உள்ள வெப்பத்தை உருவாக்கும் நன்மைகளுக்காகவே இது பரவலாக பேசப்படுகின்றன.

வேர்க்கடலை
வேர்க்கடலையானது, எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் உடலுக்கு தேவையான கொழுப்பு சத்துகளுக்கு மிகச் சிறந்த மூலமாகும். வேர்க்கடலையை தவறாமல் சாப்பிடுவது கொழுப்பின் அளவையும், தீங்கு விளைவிக்கும் உயர் ஆண்ட்ரோஜன் அளவையும் குறைத்திடும். இது கருப்பைகள் முட்டையை வெளியிடுவதைத் தடுத்திட உதவுகிறது. இதுபோன்று முட்டை வெளியேறினால், கூடுதல் முடி வளர்ச்சி மற்றும் பி.சி.ஓ.டிக்கு பங்களிக்கும் பிற ஹார்மோன் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்கூடும்.

Related posts

சர்க்கரை நோயால் வீக்கம் அடையும் கால்களுக்கான அற்புதமான எளிய தீர்வு

nathan

பெண்கள் கர்ப்பமடைய சரியான வயது எது? தெரிந்துகொள்வோமா?

nathan

உங்கள் கவனத்துக்கு உங்க உடல்நலம் பற்றி உங்கள் நாக்கு என்ன சொல்கிறது தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா அப்பெண்டிக்ஸ் என்னும் குடல்வால் அழற்சி எதனால் வருகிறது?

nathan

மலச்சிக்கலைப் போக்கும் வழிகள்

nathan

எடைக்குறைப்பு எப்படி உங்கள் சர்க்கரை நோயில் இருந்து எப்படி காப்பாற்றுகிறது தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

சிறுநீரக கற்களை போக்க சிறந்த மருத்துவம்!

sangika

பலவீனம் ஆகிறது சென்னை குழந்தைகளின் நுரையீரல்!

nathan

உங்க மார்பகத்தில் அரிப்பு ஏற்படுவதற்கு இதுதான் காரணமாம் – பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan