25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
bladdercancert
மருத்துவ குறிப்பு

மருத்துவர் கூறும் தகவல்கள்! சிறுநீர்ப்பை புற்றுநோயின் அபாயம் யாருக்கு அதிகமாக உள்ளது? அறிகுறிகள் என்ன?

சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலினத்தவருக்கும் சம அளவு உள்ளது. சிறுநீர்ப்பை உடலின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. உடலில் இருந்து வெளிவரும் திரவங்கள் சிறுநீர் வடிவில் இங்கு சேர்க்கப்படுகிறது.

 

சிறுநீர்ப்பையின் உள்ளிருக்கும் சவ்வுகளில் உள்ள அணுக்கள் கட்டுப்படுத்த முடியாமல் வளரும் நிலையை சிறுநீர்ப்பை புற்றுநோய் என்று கூறுகிறோம். சிறுநீர்ப்பை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீரில் இரத்தம் சேர்ந்து வெளிப்படுவது, சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுவது, சிறுநீர் கழிக்கும் போது அடிவயிற்றில் வலி ஏற்படுவது போன்றவையாகும்.

 

UTI என்னும் சிறுநீர் பாதை தொற்று அல்லது இதர தொற்று பாதிப்புகளுக்கும் இதே அறிகுறிகள் தென்படுவதால் மக்கள் இந்த அறிகுறிகள் குறித்து குழப்பம் கொள்கின்றனர். பொதுவாக, சிறுநீர்ப்பை புற்றுநோய் பெரிய அளவிற்கு இருந்தால் மட்டுமே அதன் அறிகுறிகள் பாதிக்கப்பட்ட நபருக்கு தெரிய வருகிறது. இதனால் சிகிச்சை அளிப்பது கடினமாகிறது.

 

ஆகவே இந்த நோய் உண்டாவதற்கான வாய்ப்புகளை களைவது மட்டுமே இதனைத் தடுப்பதற்கான சிறந்த வழியாகும். உங்கள் வாழ்க்கையில் சிறுநீர்ப்பை புற்றுநோய் பாதிப்பு உண்டாகாமல் தடுக்க இந்த 3 பழக்கங்களை இன்று முதல் கடைப்பிடிப்பது அவசியமாகிறது.

சிறுநீர்ப்பை புற்றுநோய் அபாயம் யாருக்கு அதிகமாக உள்ளது ?

* புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது.

* ஆரோக்கியமற்ற உணவு பழக்கமும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்க முடியும்.

* ஜங்க் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகம் உட்கொள்ளும் நபர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது .

* தீங்கு விளைவிக்கும் ரசாயனம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் அதிகம் பயன்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொள்பவர்களுக்கு இந்த அபாயம் உள்ளது.

* போதுமான அளவு தண்ணீர் பருகாமல் உள்ளவர்களுக்கு இந்த நோய் பாதிப்பின் அபாயம் உள்ளது.

திரவ உணவுகள் மற்றும் தண்ணீர் அதிகம் பருகுங்கள்

போதுமான அளவு தண்ணீர் பருகாமல் இருந்தால் சிறுநீர்ப்பை புற்றுநோய் உங்களை தாக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? தண்ணீர் பருகுவதால் நமது தாகம் தனிக்கப்படுவது மட்டுமல்லாமல் உடலில் உள்ள நச்சு கழிவுகள், அழுக்கு மற்றும் விஷ பொருட்கள் ஆகியவை வெளியேற்றப்படுகின்றன. நூற்றுக்கணக்கான வியாதிகளுக்கு தண்ணீர் ஒரு சிறந்த மருந்து. அதாவது நீங்கள் போதுமான அளவு தண்ணீர் பருகுவதால் உங்கள் உடல் முழுவதும் சுத்தம் செய்யப்படுகிறது.

சிறுநீரகத்தின் பணி

இரத்தத்தை வடிகட்டியவுடன் சிறுநீரகம் நச்சுகளை தனியாக பிரிக்கிறது, அதாவது எல்லா கழிவு பொருட்களும் சிறுநீர்ப்பையில் சேர்த்து வைக்கப்படுகின்றன. நீங்கள் குறைவான அளவு தண்ணீர் பருகும் போது, சிறுநீர்ப்பை எளிதாக அவற்றை வெளியேற்றுவதில்லை. அதனால் அதிக அளவு நச்சுகள் உங்கள் உடலில் படிந்து , சிறுநீர்ப்பையில் உள்ள சவ்வுகளில் ஒட்டிக் கொள்கின்றன. நீண்ட நாட்கள் இந்த சவ்வுகளில் நச்சு பொருட்கள் தங்குவதால் கொடிய சிறுநீர்ப்பை புற்றுநோய் உண்டாகிறது.

எவ்வளவு நீர் பருக வேண்டும்?

பொதுவாக ஒரு நாளில் 8-10 க்ளாஸ் அளவு அதாவது 3 லிட்டர் தண்ணீர் பருகுவது பரிந்துரைக்கப்படுகிறது. இது தவிர, உங்கள் உணவில் இளநீர், பழச்சாறு, க்ரீன் டீ, ப்ளாக் டீ, எலுமிச்சை நீர், மூலிகை டீ போன்ற திரவ உணவுகளை உங்கள் தினசரி உணவு பழக்கத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். மற்றுமொரு முக்கிய குறிப்பு என்னவென்றால் நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் கட்டுப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

புகைப்பழக்கத்தை கைவிடுங்கள்

புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் 3 பங்கு அதிகம் இருப்பதாக அமெரிக்க புற்றுநோய் அமைப்பு தெரிவிக்கிறது. சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் புகைப்பழக்கம் அதாவது சிகரெட் , பீடி, குட்கா, ஈ-சிகரெட் போன்றவற்றிற்கு அடிமையானவர்கள் என்று தேசிய சுகாதார நிறுவனம் 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு குறிப்பிடுகின்றனது. காகித சிகரெட்டை காட்டிலும் ஈ -சிகரெட் பாதுகாப்பானதென்று இன்றைய இளைஞர்கள் நினைக்கின்றனர். ஆனால் இரண்டுமே ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆகவே சிறுநீர்ப்பை புற்றுநோய் வராமல் தடுக்க உடனடியாக புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ளலாம்

பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் உட்கொள்ளும் நபர்களுக்கு புற்றுநோய்க்கான அபாயம் குறைகிறது என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பழங்கள் மாற்றம் காய்கறிகளில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடன்ட் இருப்பதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளைத் தடுக்கின்றன. மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின், மினரல், புரதம் போன்ற சத்துகள் இருப்பதால் உடலின் எல்லா உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. இதனால் உடலின் எந்த ஒரு பாகத்திலும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள், குறைவாக பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்றவற்றை உட்கொள்வதால் சிறுநீர்ப்பை புற்றுநோய் தடுக்கப்படுகிறது என்று இன்வெஸ்டிகேட்டிவ் அன்ட் க்ளினிக்கல் யூராலஜி என்ற பத்திரிகை குறிப்பிடுகிறது.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… அம்மாவாகப் போகிறீர்கள் என்பதைத் தெரியப்படுத்தும் ஆரம்ப அறிகுறிகள்!

nathan

குழந்தைகளை குறி வைக்கும் கொரோனா மூன்றாம் அலை !: குழந்தைகளை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

nathan

புற்று நோய் எதிர்ப்பு சக்தி – மங்குஸ்தான் பழம்

nathan

திங்கட்கிழமை டென்ஷனை குறைக்க 5 வழிகள்!

nathan

உங்கள் மகள் காதல்வசப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்?

nathan

மறந்து போன எண்ணெய்க்குளியல்

nathan

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எளிய ஆயுர்வேத குறிப்புகள்!

nathan

சுவையின்மைக்கான சித்த மருந்துகள்

nathan

வயிற்று புண்களுக்கு மருந்தாகும் உருளைக் கிழங்கு

nathan