26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு காளான்

ஹோட்டல்களில் செட்டிநாடு காளான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் அந்த செட்டிநாடு காளானை எப்படி செய்வதென்று தெரியுமா? பொதுவாக செட்டிநாடு காளான் ரசம் சாதம், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? அப்படியெனில் இன்று செட்டிநாடு காளான் செய்து சுவையுங்கள். சரி, இப்போது அந்த செட்டிநாடு காளானை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Chettinad Mushroom Recipe

ADVERTISEMENT

தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 1 (நறுக்கியது)
காளான் – 1 பாக்கெட் (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

மசாலாவிற்கு…

வரமிளகாய் – 3
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மல்லி – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் காளானை சேர்த்து காளானை நன்கு வேக வைக்க வேண்டும்.

அடுத்து அதில் தக்காளி, தேவையான அளவு உப்பு, 1-2 டேபிள் ஸ்பூன் அரைத்த மசாலா பொடி சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 2-3 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால், செட்டிநாடு காளான் ரெடி!!!

Related posts

வெந்தய கார குழம்பு

nathan

செட்டிநாடு இறால் குழம்பு!

nathan

சுவையான செட்டிநாடு பூண்டு ரசம்

nathan

தேங்காய் சேர்க்காத செட்டிநாடு மீன் குழம்பு

nathan

சூப்பரான செட்டிநாடு காளான் மசாலா

nathan

செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல்

nathan

செட்டிநாடு இறால் சுக்கா

nathan

செட்டிநாடு மட்டன் குருமா செய்முறை விளக்கம்

nathan

செட்டிநாடு காலிஃப்ளவர் சூப்

nathan