பெண்கள் ஒரு சில பொருட்களை தாய் வீட்டில் இருந்து கணவன் வீட்டிற்கு எடுத்துச்செல்லக்கூடாது என சாஸ்திர ரீதியாக கூறப்படுகிறது.
அந்த பொருட்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
பூஜை பொருட்கள்.
உங்களுடைய அம்மா வீட்டில் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பூஜை பொருட்களை எக்காரணம் கொண்டும் கணவன் வீட்டிற்கு எடுத்துச்செல்லக்கூடாது.அவ்வாறு செய்தால் அம்மா வீட்டின் பூஜை அறையில் இருக்கும் தெய்வம் கணவன் வீட்டின் தெய்வமாக இடம் மாறுவதற்கு ஒப்பாக கூறப்படுகிறது.
கசப்பு சுவை உள்ள காய்கறிகள்
கசப்பு சுவை உள்ள காய்கறிகளை அம்மா வீட்டில் இருந்து கணவன் வீட்டிற்கு எடுத்து செல்வதால் இரண்டு வீட்டிற்கும் இடையே கசப்பான உணர்வை ஏற்படுத்திவிடும் என்பதால் இதை தவிர்த்துக்கொள்வது நல்லது.
ஆயுதங்கள்
இரும்பினால் ஆன கத்தி,சுத்தியல்,அறுவாமனை போன்ற பொருட்களை அம்மா வீட்டில் இருந்து கணவன் வீட்டிற்கு எடுத்து சென்றால் இரண்டு வீட்டிற்கும் இடையே பகைமை உணர்வு ஏற்படும்.இந்த பொருட்களை சீர்வரிசையாக பெறலாம்.ஆனால் அம்மா வீட்டில் உபயோகித்துக்கொண்டிருக்கும் பொருட்களை எடுத்து செல்லக்கூடாது.
கல் உப்பு,எண்ணெய்,புளி
லட்சுமி கடாட்சம் நிறைந்த கல் உப்பை பணம் கொடுத்து மட்டுமே வாங்க வேண்டும்.அம்மா வீட்டில் இருந்து இரவலாக எடுத்து செல்லக்கூடாது.இவ்வாறு செய்தால் வீட்டில் செல்வச்செழிப்பு குறையும்.மேலும் வீட்டில் கலக்கத்தை ஏற்படுத்தும்.