22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
625.0.560.350.160.300.053.800.668 3
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சுகோங்க! முட்டையில் கொழுப்பா? தினமும் முட்டை சாப்பிடுவதால் எவ்வளவு நன்மை தெரியுமா?

தற்போது இருக்கும் உலகில் மக்கள் சாப்பிடும் அன்றாட உணவில் முட்டை என்பது நிச்சயமாக இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் அதில் இருக்கும் கொழுப்பு காரணமாக, மஞ்சள் கருவை மட்டும் விட்டுவிட்டு வெள்ளை கருவை சாப்பிடுவர்.

ஒரு சிலர் தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று முட்டைகள் வரை சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளனர். இதனால் முட்டை தினமும் சாப்பிடுவதால், நமக்கு என்ன நடக்கும்? இதனால் தீங்கு ஏதும் இருக்கிறதா என்பதைப் பற்றி பார்ப்போம்.

புரதங்கள்
புரதங்கள் உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு கலத்தின் கட்டுமானத் தொகுதி ஆகும். எனவே உங்கள் அன்றாட உணவின் புரதம் மிக முக்கியமான அங்கமாகும்.

போதுமான புரதம் இல்லை என்றால், உங்கள் உடல் உயிரணுக்களை ஆரோக்கியமான முறையில் மீண்டும் உருவாக்க போராடும், இதனால் நீங்க்ள் அதை உருவாக்குவதற்காக வீணடித்துவிட்டோமே என்பதை போல் உணரலாம்.

முட்டைகள் புரதத்தின் அருமையான ஆதாரமாகும். ஒவ்வொரு முட்டையிலும் சராசரியாக 6 கிராம் புரதம் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆற்றலை அதிகரிக்கும் சக்தி
நீங்கள் எப்போதும் வழக்கமன உணவை சாப்பிடுகிறீர்கள், ஆனால் நீங்கள் சோர்வாக இருப்பதாக உணர்கிறீர்கள் என்றால், உங்களுக்கு வைட்டமின் பியின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.

எனவே, முட்டைகளில் நிறைய பி வைட்டமின்கள் உள்ளன. உங்கள் காலை உணவோடு ஒரு முட்டையை சாப்பிடுவது உங்கள் உடலில் நீங்கள் இழந்திருக்கும் வைட்டமின்களை உருவாக்க உதவும்.

வேகமாக முடி வளர
முட்டையில் இருக்கும் பி வைட்டமின்கள், ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கும் பெரிதும் பங்களிக்கின்றன.

பயோட்டின் குறைபாடால் பெரும்பாலும் முடிகள் உதிரலாம், இந்த பயோட்டினை எதிர்த்து முடிகள் அதிகமாக உதிர்வதை தடுக்க உதவும்.

பி-வைட்டமின்கள் பொதுவாக இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகின்றன. அதுமட்டுமின்றி ஆரோக்கியமான முடியின் வளர்ச்சிக்கு போதுமான பி வைட்டமின்கள் அவசியம்.

அடுத்த முறை நீங்கள் ஒரு மோசமான ஹேர்கட் பெறும்போது, முடிந்தவரை விரைவாக வளர அதிக முட்டைகளை சாப்பிடலாம்.

பார்க்கும் திறனை பராமரிக்க
கண்ணுக்கு பொறுத்தவரை கேரட் மிகச் சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவற்றில் இருக்கும் பீட்டா கரோட்டின் காரணமாக, இது உடலில் வைட்டமின் ஏ ஆக மாறுகிறது.

முட்டைகளில் வைட்டமின் ஏ அதிகமாகவும் உள்ளது, மேலும் கண் ஆரோக்கியத்தை பராமரிக்கும் போது இதேபோன்ற பாதுகாப்பு விளைவைக் கொண்டிருக்கிறது.

இதய நோயை தடுக்கும்

பெரும்பாலான மக்கள் முட்டை இதயத்திற்கு தீங்கு விளைவிப்பவை என்று தவிர்க்கின்றனர். ஆனால் நாள் ஒன்றிற்கு ஒரு முட்டை வீதம் சாப்பிடுபவர்களுக்கும், முட்டை சாப்பிடாதவர்களுக்கும் நடத்தப்பட்ட ஆய்வில், முட்டையை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக காட்டுகின்றன.

மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்
மனித உடலில் மோசமான பகுதி என்று இதை கூறுவர், அது என்ன என்று நினைத்தால் மூளை. இது கிட்டத்தட்ட 60 சதவீதம் கொழுப்பால் ஆனதால், இப்படி கூறுகின்றனர்.

எனவெ, உங்கள் மூளை சீராக செயல்பட உங்கள் உணவில் நல்ல கொழுப்புகளையும் சேர்க்க வேண்டும். முட்டையின் மஞ்சள் கருவில் மூளைக்கு தேவையான விஷயங்களை தருபவை இருக்கின்றன.

இளம் வயதிலேயே உங்கள் பிள்ளைக்கு முட்டை சாப்பிடுவதை பழக்கப்படுத்துவதன் மூலம், மூளையின் வளர்ச்சி அதிகமாகும்.

முட்டையில் இருக்கும் கொழுப்புகள்
முட்டையை பொறுத்தவரை அதில் அதிக கொழுப்பு இருப்பதாக பெரும்பாலனோர் நினைக்கின்றனர். ஆம் அதில் அதிக கொழுப்பு இருக்கிறது தான், அதில் இரண்டு வகையான கொழுப்புகள் உள்ளன.

எல்.டி.எல் மற்றும் எச்.டி.எல். என்பது தான், எல்.டி.எல் என்பது இதய நோய்க்கான அதிக ஆபத்துடன் தொடர்புடைய ஆபத்தான வகை. இருப்பினும் எல்.டி.எல்லில் இரண்டு துணை வகைகள் உள்ளன. சிறிய வகை மிகவும் ஆபத்தானது,

ஆனால் எச்.டி.எல் உடலுக்கு ஒரு ஆரோக்கியமான மற்றும் அவசியமான தேவை.

தோல் பாதுகாப்பு
முட்டைகளில் உள்ள கரோட்டினாய்டுகள் சருமத்தைப் பாதுகாக்கும் என்று கருதப்படுகிறது. தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் உங்கள் சருமத்தில் நுழைந்து சேதத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு அவற்றை வடிகட்ட இந்த ஊட்டச்சத்துக்கள் செயல்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் பொருள் என்னவென்றால், தோல் புற்றுநோயை வளர்ப்பதற்கான உங்கள் வாழ்நாள் ஆபத்து குறைவாக உள்ளது என்று கூறப்படுவதால், முட்டை எடுத்து கொள்வது நல்லது என்று கூறுகின்றன.

Related posts

உங்களுக்கு தெரியுமா முருங்கை இலை பொடியை தினமும் குடிப்பதால் உண்டாகும் அற்புதமான 10 பலன்கள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் 10 சைவ உணவுகள்!!!

nathan

மணத்தக்காளிக்காய்

nathan

வாயு தொல்லையை போக்கும் பூண்டு சாதம்

nathan

வெங்காயத்தாளில் இதை சேர்த்து சாப்பிட்டால் போதும்! சூப்பர் டிப்ஸ்

nathan

ஆரோக்கியப் பலன்கள் அள்ளித் தருவதில் இது, `முந்திரிக்கொட்டை!’

nathan

மன அழுத்தத்தில் இருந்து உடனடி நிவாரணம் தரும் உணவுகள்!!!

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் இஞ்சி – கற்றாழை ஜூஸ்

nathan

ஆரோக்கிய டிப்ஸ்

nathan