28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
625.500.560.350.160.300.053.800.900.160.90 2020 06
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா இந்த இலையின் சாறை மட்டும் தடவினாலே தேமல் மறைந்துபோகுமாம்?

இன்று நறுமணம் தரும் சோப்புகளை அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். சிலருக்கு இந்த சோப்புகள் கூட உடம்பில் தேமல் வர காரணமாக மாறிவிடுகின்றன. அதனால் முடிந்தவரையில் வாரத்தில் இரண்டு தடவைகளாவது சோப்புக்கு பதிலாக இந்த இயற்கை மூலிகைகளை பயன்படுத்த வேண்டும்.

மேலும் தினமும் இரவு தூங்கும் போது உடலுக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொண்டு படுப்பது மிகவும் நல்லது.

தலைக்கு எண்ணெய் தேய்த்தும் குளிக்க வேண்டும். உடலில் வெப்பம் அதிகரிப்பதும் கூட சரும நோய்கள் வருவதற்கு காரணமாக அமைந்து விடும்.

உடம்பில் தேமல் ஏற்பட்டால் சில வீட்டு வைத்தியத்தை கொண்டு எப்படி குணப்படுத்தலாம் என்று பார்ப்போம்

  • பூவரச மரத்தில் காய்களை எடுத்து அம்மியில் உரசினால் மஞ்சள் நிறத்தில் பால் வரும். அவற்றை முகத்தில் தேமல் உள்ள இடங்களில் பூசி வர முகத்தில் அந்த தேமல் காணாமல் போகும்.
  • அருகம்புல் உடல் நலத்திற்கும், இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. அருகம்புல், கஸ்தூரிமஞ்சள், மருதோன்றி போன்றவற்றை அம்மியில் அரைத்து தேமல் உள்ள இடத்தில் பூசினால் விரைவில் குணம் கிடைக்கும்.
  • நாயுருவி இலை சாறை தேமல், படை உள்ள இடத்தில் பூசி வந்தால் குணமாகும். இந்த நாயுருவி இலையானது எளிதாக கிரமாப்புறங்களில் கிடைக்கும். அவ்வாறு கிடைக்கவில்லை என்றால், நாட்டுமருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்தலாம்.
  • கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளித்து வரலாம். எலுமிச்சை பழச்சாறு தேமல் உள்ள இடங்களில் தேய்த்தால் தேமல் மறையும்.
  • நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து சர்க்கரை சேர்த்து குடித்தால் தேமல் குறைந்து விடும்.
  • எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்தை சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமல் உள்ள இடத்தில் பூசி வந்தால் தேமல் மறையும்.
  • மஞ்சள் இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் குறையும் .
  • துளசி இலை, வெற்றிலை எடுத்து அரைத்து தேமல் மேல் பூசினால் தேமல் நீங்கிவிடும்.
  • சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறையும்.
  • கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை ஆகியவற்றை பாலில் அரைத்து, முகத்தில் தேமல், கரும்புள்ளி உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல், கரும்புள்ளி குறைந்து விடும்.
  • தொட்டாற்சுருங்கி இலையை நன்கு அரைத்து அதன் சாற்றை தேமல் உள்ள இடங்களில் காலையிலும் மாலையிலும் தடவிவந்தால் ஐந்தே நாட்களில் தேமல் பறந்து விடும்.
  • கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.
  • வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
  • குப்பை மேனிக் கீரையை எடுத்து அதனோடு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மை போல அரைத்து தேகத்தின் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர தேமல் மறையும்.

Related posts

இதோ எளிய நிவாரணம்! மூச்சுக்குழாய் அழற்சிக்கான அற்புதமான சில இயற்கை வைத்தியங்கள்!!!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!!

nathan

உடல் பருமனால் ஆண்மைக் குறைபாடு ஏற்படுவதற்கானக் காரணங்கள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்பிணிகள் இந்த 3 பழங்களையும் சாப்பிடவே கூடாதாம்…

nathan

முட்டுக்கட்டை போட்டும் தயக்கமும், பயமும்

nathan

அகத்திக்கீரை

nathan

என்ன காரணம்? எதாவது விஷேசம் உண்டா என்று கேட்ட சூழல் மாறி, எந்த குழந்தையின்மைமருத்துவமனைக்கு போகப்போறிங்கஎன்று?

nathan

சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற விரும்பும் பெண்கள்

nathan

சிறுநீரகக் கல்… ஏன், எதற்கு, எப்படி? நலம் நல்லது-45

nathan