29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ஆரோக்கியம் குறிப்புகள்

விரைவில் கர்ப்பமடைய கருத்தரிக்கும் நேரத்தை அறியும் முறை

342e0a74 b22c 4d59 84cc 97c5849b4135 S secvpf
தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் வரப்பிரசாதம் ஆகும்.

திருமணமான பெண்கள் உடனே கருத்தரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டால், மாதவிலக்கான 12ம் நாள் முதல் 18ம்

நாட்களுக்குள் உறவு வைத்துக்கொள்ளவேண்டும்.

நாத அணுவும், விந்து அணுவும் ஒன்று சேர்வதே கரு உருவாதலாகும்.

விந்தணு ஒவ்வொரு முறை உறவு கொள்ளும்போதும் 2-4 மிலி விந்து நீர் வெளிப்படுகிறது. இந்த விந்தணு 0.5 மி.மீ நீளம் உடையது.

விந்தணு உருவாக 74 நாட்கள் ஆகும்.

விந்தணு கருப்பையில் 10 நாட்கள் வரை உயிர்வாழும். ஆனால் 24-48 மணி நேரத்தில் கருத்தரிக்கச் செய்யும் சக்தியை இழந்து

விடுகிறது.

விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் உள்ளது.

சினைமுட்டையானது பெண்ணின் சினைப் பையிலிருந்து வெளியாகும். இதன் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம்.

சினை முட்டை வட்ட வடிவமுடையது. 0.2 மி.மீ அளவாகும்.

சினை முட்டை, சினைப் பாதையின் புறச் சுவர்களால் உறிஞ்சப்பட்டு சினைப்பையை அடைகிறது.

மாதவிலக்கு சுழற்சி நடந்த 12 முதல் 18 நாட்கள் வரை சினைமுட்டை வெளிப்படும்காலம். இந்தக் காலத்தில் உறவு கொண்டால்

விந்தணு சினை முட்டையில் சேர்ந்துகரு உண்டாகும்.

சினைமுட்டை வெளிப்பட்ட நேரம் முதல், சினைப்பாதையில் நகர்ந்து வர 2 நாட்கள்ஆகும். சினைமுட்டை வெளிவந்து 24 மணி

நேரத்திற்குள் விந்தணு சினைமுட்டையைஅடைய வேண்டும்.

கருத்தரிக்கும் நேரத்தை அறியும் முறைகள் :

1. தேதிகொண்டு அறியமுடியும் :

மாதவிலக்கு சுழற்சி ஆன முதல் நாள், நாள் ஒன்று என்று கணக்கில் கொண்டு கணக்கிட வேண்டும்.

பொதுவாக மாதவிலக்கு சுழற்சியானது 28-30 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும்.மாதவிலக்கு ஒழுங்கில்லாத மகளிருக்கு இது மாறுபட்டு

இருக்கும்.

மாத விலக்கு ஒழுங்கில்லாத மகளிருக்கு இந்த முறையில் கருத்தரிக்கும்காலத்தை கணக்கிடுவது கடினம். மாதவிலக்கு சுழற்சி 28-30

நாட்கள்உள்ளவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு 12 முதல் 16 நாட்களுக்குள் கர்ப்பம்தரிக்கும் வாய்ப்பு அதிகம்.

2. யோனிக்கசிவு அதிகரித்து காணும் :

யோனிக்கசிவு (Vaginal secretions) கருமுட்டை வளர்ச்சிமுழுமையானதாக ஆனபின்பு அது விந்தணுவுடன் சேரும் காலம் யோனிக்

கசிவுஅதிகம் காணப்படும். இதனை வைத்து கருத்தரிக்கும் காலத்தை கணக்கிடலாம்.

கருத்தரிக்கும் காலம் அறிந்த பின்பு உறவு கொண்டால் விந்தணு கருப்பையினுள்எளிதாக ஊர்ந்து சென்று சினை முட்டையுடன்

இணைய யோனிக்கசிவு உதவி செய்கிறது.

3. காமக்கிளர்ச்சியின்போது Progesterone என்னும் ஹார்மோன்அதிகமாக சுரப்பதால் உடல் வெப்பம் 0.30இ அளவு உயர்கிறது. இதை

வைத்து கருவுறஏற்ற காலத்தை அறிந்துகொள்ளலாம்.

12 முதல் 16ம் நாளுக்குள் கருப்பையின் உட்சுவர்கள், கனத்து, தடித்து கருவைஏற்கக்கூடிய நிலையில் இருக்கும். இக்காலங்களின்

நோயின் தாக்குதல்இல்லாமலும், மனச்சிக்கல் இல்லாமலும் உறவு கொண்டால் கரு உருவாகும் வாய்ப்புகள் கூடும்.

Related posts

வீடே மணக்கும் கருவாட்டு குழம்பு….

nathan

மணி பிளாண்ட் வேகமாக வளர்வதற்கான சில டிப்ஸ்…

nathan

தெரிஞ்சிக்கங்க…இருபது வயதுகளில் பெண்கள் தம்மை அறியாமல் செய்யக்கூடிய தவறுகள்!!!

nathan

சின்ன சின்ன டிப்ஸ் … டிப்ஸ்… டிப்ஸ்…

nathan

மன அழுத்தத்தை போக்கும் பூக்கள்..தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

எடையைக் குறைக்க கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம்?

nathan

ஷாக் ஆயிடுவீங்க! கணவனுக்கு உயிர் போகுமாம்.! மனைவி வேலைக்கு போனா,

nathan

உங்களுக்கு தெரியுமா விக்கல் ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்வது எப்படி

nathan

உங்களுக்கு தெரியுமா கருத்தரித்தலை தள்ளிப் போட உதவும் 8 இயற்கையான வழிகள்

nathan