28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
1 sleeping 1
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…தூங்கும் போது ஏன் கால்களுக்கு நடுவே தலையணை வெச்சு தூங்கணும்-ன்னு சொல்றாங்க தெரியுமா?

அனைவருக்குமே வீடு சொர்க்கம் தான். எவ்வளவு தான் நாள் முழுவதும் அயராது உழைத்தாலும், வீட்டிற்கு வந்து படுக்கையில் தூங்கும் போது கிடைக்கும் சுகம் வேறு எங்கு சென்றாலும் கிடைக்காது. ஆனால் என்ன அவ்வாறு படுக்கையில் தூங்கும் போது ஆங்காங்கு சிறு வலிகளை சந்திப்போம். இதற்கு காரணம் நாம் தூங்கும் நிலை தான். ஆம், ஒருவர் தவறான நிலையில் தூங்கினால், மறுநாள் உடலின் பல பகுதிகளில் வலியை சந்திக்க வேண்டியிருக்கும்.

 

ஒருவரின் முதுகெலும்பின் ஆரோக்கியத்திற்கு தூங்கும் நிலையானது மிகவும் முக்கியம். ஒரு நாளைக்கு 8 மணிநேரம் ஒரே நிலையில், அதுவும் தவறான நிலையில் தூங்கும் போது, முதுகெலும்பிற்கு போதுமான ஆதரவு கிடைக்கப் பெறாமல், அதன் விளைவாக வலி, பிடிப்பு மற்றும் உட்காயங்களை உண்டாக்கும். எனவே இரவு தூங்கும் போது சரியான நிலையில் தூங்க வேண்டியது அவசியம்.

உங்க கையில நரம்பு இப்படி அசிங்கமா தெரியுதா? அது எதனால் தெரியுமா?

சொல்லப்போனால் ஒரு நல்ல இரவு தூக்கத்தின் திறவுகோல் முதுகெலும்பை நடுநிலையான நிலையில் வைத்திருப்பது தான். உங்களின் முதுகெலும்பு நேராக இல்லாவிட்டால், நாளடைவில் அது வளைந்துவிடுவதோடு, பல முதுகு சம்பந்தமான பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடும். எனவே தூங்கும் போது – முக்கியமாக பக்கவாட்டில் தூங்கும் போது கூட உங்கள் உடலை சரியான வழியில் நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பொருத்தமான மெத்தை ஒன்றை தேர்ந்தெடுத்து, தலையணை பயன்படுத்தி முதுகெலும்பை ஆரோக்கியமான வளைவுக்கு மாற்றிவிடலாம்.

சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது? அப்ப எவ்வளவு நேரம் கழிச்சு குளிக்கலாம்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பக்கவாட்டில் திரும்பி தூங்குபவர்களுக்கான சரியான தோரணை
பக்கவாட்டில் திரும்பி தூங்குபவர்களுக்கான சரியான தோரணை
பெரும்பாலானோர் தூங்கும் நிலை என்றால் அது பக்கவாட்டில் தூங்குவது தான். உண்மையில், சுமார் 74% மக்கள் இந்த மாதிரி தான் தூங்குகிறார்கள். நீங்கள் பக்கவாட்டில் தூங்குபவரானால், சரியான மெத்தையை தேர்ந்தெடுத்துள்ளீர்களா என்று பாருங்கள். பக்கவாட்டில் தூங்குபவர்களுக்கு மென்மையான மெத்தை தேவைப்படும். ஏனெனில் இவர்களின் இடுப்பு மற்றும் தோள்கள் வலிமிகுந்த அழுத்த புள்ளிகளை நேரடியாகத் தாக்கும்.

நீங்கள் சௌகரியமாக தூங்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த, உங்கள் உடலை எவ்வாறு நிலைநிறுத்த வேண்டும் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

* உங்கள் தலைக்கு கீழே உள்ள தலையணை சற்று தடிமனாக இருப்பதை உறுதி செய்வதன் மூலம், உங்கள் கழுத்தை உங்கள் முதுகெலும்பை ஒரே நிலைக்கு கொண்டு வர முடியும்.

* முழங்கால்களுக்கு இடையில் ஒரு உறுதியான தலையணையை வைத்து தூங்குங்கள். முக்கியமாக இந்த தலையனை உங்கள் முழங்கால்களில் இருந்து கணுக்கால் வரை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனால் முழங்கால்கள் மற்றும் கணுக்கால் சரியாக ஒரே நிலையில் இருக்கும்.

* உங்கள் இடுப்பு எலும்புகள் ஒன்றையொன்று நேரடியாக அடுக்கி வைக்கப்பட வேண்டும். இதனால் முதுகெலும்பு நடுநிலையான நிலையில் இருக்கும்.

இப்போது கால்களுக்கு இடையே தலையணையை வைத்து தூங்குவதால் பெறும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

சௌகரியம்

தூங்கும் போது கால்களுக்கு இடையே தலையணையை வைத்துக் கொள்வதன் மூலம், அது ஆறுதலை அளிப்பதோடு, முழங்கால்களை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்திருப்பதன் மூலம் அழுத்தம் நீக்கப்படுகிறது. இது உங்கள் இடுப்பு பகுதி சீரமைக்கப்படுவதை உறுதி செய்கிறது.

இடுப்பு அழுத்தம் குறையும்

கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்கும் போது, அது இடுப்பில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கிறது. அதோடு முதுகெலும்புகள் சீரமைப்பில் இருந்து நகர்வதையும் தடுக்கிறது.

முதுகு வலி

கீழ் முதுகு வலி அல்லது கால் வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக சியாட்டிகா உள்ளவர்களுக்கு, தலையணையை கால்களுக்கு இடையே வைத்து தூங்குவது மிகவும் நல்லது. ஒருபுறமாக தூங்கும் போது, உங்கள் மேல் கால் ஓய்வெடுக்க முன்னோக்கி மெத்தையை பார்த்து செல்லக்கூடும். இது கீழ் முதுகில் ஒருவித அழுத்தத்தைக் கொடுத்து, சியாட்டிக் நரம்பை எரிச்சலடையச் செய்யும்.

குறட்டை தடுக்கப்படும்

குறட்டை விடுபவர்களுக்கு பக்கவாட்டு தூக்க நிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இந்த தூக்க நிலையில், காற்றுப் பாதைகள் மிகவும் நிலையானவை மற்றும் காற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. உங்கள் முதுகெலும்பை சீரமைத்து வைத்திருப்பது, கழுத்து மற்றும் முதுகு வலியைக் குறைக்கிறது. அதோடு இது தூக்கத்தில் மூச்சுத்திணறல்/குறட்டை ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

இரத்த ஓட்டம் மேம்படும்

பக்கவாட்டில் திரும்பி தூங்குவதால் உடலில் இரத்த ஓட்டம் மேம்படும். அதிலும் கால்களுக்கு இடையில் ஒரு தலையணையை வைப்பதன் மூலம் ஏற்படும் லேசான உயரத்தால் வேனா காவா நரம்பு வழியாக இரத்த ஓட்டம் எளிதாக இருக்கும். இது தான் இதயத்திற்கும், முதுகிற்கும் இரத்தத்தைக் கொண்டு செல்லும் முக்கிய நரம்பு.

வலது பக்கம் திரும்பியே எழ வேண்டும்

உடலின் ஆற்றலையும், மன விழிப்புணர்வையும் புதுப்பிக்க ஒரு நல்ல இரவு தூக்கம் அவசியம். இது உங்கள் மனநிலையை மேம்படுத்தவும், அடுத்த நாளுக்கு உங்களை தயார்படுத்தவும் உதவுவது மட்டுமல்லாமல், நோயில் இருந்து மீளவோ அல்லது காயத்தில் இருந்து குணமடையவோ உதவும். நீங்கள் தூங்கி எழுந்திருக்கும் போது, ஏதேனும் வலியை உணர்ந்தால், உடனே உங்கள் தூக்க தோரணையை சரிபார்க்கவும். மேலும் ஒவ்வொரு இரவு தூங்கும் போதும் தூக்க தோரணையை கவனிக்க வேண்டியது அவசியம். அதேப் போல் மறுநாள் காலையில் எழும் போது வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க… காதலும், உடலுறவும் உங்கள் ஆரோக்கியத்தின் மீது ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்னெ தெரியுமா?

nathan

கருவில் இருக்கிற குழந்தை ஆரோக்கியமாக இருப்பதன் அறிகுறிகள்..

nathan

பற்களில் காரை படிந்துள்ளதா..? இனி கவலை எதற்கு.

nathan

வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை போக்கி நன்மைகள் நடைபெற ! தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன்?

nathan

தூதுவளையை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்திவர கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்…

sangika

உடலிலேயே மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா?

nathan

கோடை காலத்தில் எந்த உணவை தவிர்க்கலாம்!….

nathan

பானி பூரி உடலுக்கு நன்மையை தருகிறதா? பானி பூரியை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்?

nathan