28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
1 waxd 560
மருத்துவ குறிப்பு

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… மார்பில் உள்ள முடியை வேக்சிங் செய்யும் முன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!

இப்போதெல்லாம் பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் கூட உடலில் வளரும் முடியை விரும்புவதில்லை. உடம்பில் உள்ள தேவையற்ற முடிகள் இல்லாமல் இருப்பதையே ஆண்களும் விரும்புகின்றனர். இந்த பேஷன் ட்ரெண்டினால் உடம்பில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க ஏராளமான முறைகளையும் அவர்கள் கையாளுகிறார்கள். குறிப்பாக ஆண்கள் மார்பில் இருக்கும் முடிகளை நீக்க வேக்சிங் முறையை செய்கிறார்கள். இது விலை குறைந்த முறை என்றாலும் வலி நிறைந்தது.

ஏனெனில் பெண்களின் முடியைப் போல ஆண்களுக்கு கிடையாது. அதன் தன்மையே வித்தியாசமானது. இதைத் தெரியாமல் நாம் வேக்சிங் செய்யும் போது பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் அழகு நிபுணர்கள். எனவே ஆண்கள் வேக்சிங் செய்வதற்கு முன் சில டிப்ஸ்களை பின்பற்றுவது நல்லது. அதைப் பற்றி தான் நாம் இக்கட்டுரையில் காணப் போகிறோம்.

சருமத்தை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்

நீங்கள் உங்கள் சருமத்திற்கு எந்தவித அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும் முதலில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஏனெனில் சில பொருட்கள் உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவே வேக்சிங் செய்வதற்கு முன் வேக்சிங் டெஸ்ட் செய்து கொள்வது சிறந்தது. முதலில் சிறிய சருமத்தில் வேக்ஸ் க்ரீம் தடவிக் கொண்டு ஒத்துக் கொள்கிறதா என்று பார்த்து விட்டு பின்னர் அதை பயன்படுத்துங்கள்.

சருமத்தை சுத்தம் செய்து கொள்ளுங்கள்

வேக்சிங் செய்வதற்கு முன் உங்கள் சருமத்தை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். இது உங்கள் சருமத்தின் மீதுள்ள அழுக்குகளை நீக்குவதோடு சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும். முடிந்தால் வேக்சிங் செய்வதற்கு முன் குளித்து கொள்ளுங்கள்.

ஆன்டி செப்டிக் ஜெல் மற்றும் பவுடர்

வேக்சிங் செய்வதற்கு முன் ஆன்டி செப்டிக் ஜெல் அல்லது பவுடரை பயன்படுத்துங்கள். இது சருமத்தில் அரிப்புக்கள் வருவதை தடுக்கும். இன்னொரு விஷயம் வேக்சிங் செய்வதற்கு முன் உங்கள் முடியின் நீளம் அதிகம் என்றால் முடிகளை கத்தரிக்கோல் கொண்டு நீளத்தை குறைத்துக் கொள்ளுங்கள். இது வேக்சிங் செய்யும் போது அதிக வலி ஏற்படுவதை தடுக்கும்.

வேக்சிங்கிற்கு சரியான முறை
நீங்கள் வீட்டிலேயே வேக்சிங் செய்ய நினைத்தால் சரியான முறையை பின்பற்றுங்கள். வேக்ஸ் க்ரீமை முடியின் வளர்ச்சிக்கு எதிர்த்திசையில் அப்ளே செய்யுங்கள். இப்பொழுது பிடித்து இழுக்கும் ஸ்டிரிப்பை சரியாக வைத்து எதிர்த திசையில் இழுக்கவும். இதன் மூலம் எளிதாக முடிகளை நீக்குவதோடு, வலியையும் குறைக்க முடியும்.4 male waxing 1

ஐஸ் கட்டிகள் மற்றும் மாய்ஸ்சரைசர்
நிறைய பேருக்கு சென்சிட்டிவ் சருமமாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வேக்ஸ் செய்த பிறகு அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதை தடுக்க வேக்சிங் செய்த பிறகு ஐஸ் கட்டி கொண்டு மசாஜ் செய்யுங்கள். அதே மாதிரி சூரிய ஒளியில் செல்வதற்கு முன் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள்.

தளர்வான ஆடைகளை அணியுங்கள்
வேக்சிங் செய்த பிறகு இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம். இது உங்கள் சருமத்தில் உராய்வை ஏற்படுத்தி அரிப்பை உண்டாக்கும். இதனால் அரிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே கொஞ்சம் தளர்வான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். அது உங்களுக்கு செளகரியமாக இருக்கும்.

Related posts

தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியை தரும் பாடம்

nathan

பெண்களே கேமராக்கள் உள்ளது எச்சரிக்கையாக இருங்கள்

nathan

கரோனாவிற்கு கண்கள் சிவப்பதும் அறிகுறியா..? கட்டாயம் இதை படியுங்கள்

nathan

தும்மல் பிரச்னையை போக்கும் மருத்துவம்

nathan

கீழ் இடுப்பு வலி ஏற்படும் போது கட்டாயம் செய்யக் கூடாத வேலைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்பம் தரித்து 6 மாதங்கள் வரை கரு கலையாமல் எப்படி தடுப்பது?

nathan

உங்கள் கால்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

உடலில் கொழுப்பின் உண்மையான வேலை என்னவென்று தெரியுமா?

nathan

இன்றைய பெண்களுக்கு வரும் அபாயகரமான நோய்கள்

nathan