கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது கருப்பை வாய் அல்லது கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்யாகும்.
இந்த கர்ப்பப்பை புற்றுநோய் முற்றிய நிலைக்கு வரும் வரை அதனுடைய அறிகுறிகள் வெளியே தெரியாமலேயே இருக்குமாம்.
இந்த நோய் இருக்கையில் யோனியில் குருதிப் பெருக்கு ஏற்படுவதுடன், இடுப்புப் பகுதியில் வலி அதிகளவில் ஏற்படும்.
வயதானவர்களை மட்டுமேத் தாக்கி வந்த கர்ப்பப்பை வாய் புற்று நோய் தற்போது 25-30 வயதிற்குள் இருக்கும் இளம்பெண்களையும் தாக்கி வருகிறது.
கர்ப்பப்பை புற்றுநோய் யாருக்கு வரும்ன்னு பார்ப்போம்
- நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வரும்.
- சிறுவயதிலேயே திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கும் அந்த சமயத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் வைரஸ் கிருமி எளிதில் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது.
- அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு கர்ப்பப்பை திசுக்கள் வலுவிழந்து விடுவதால் அவர்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- பால்வினை நோய், எய்ட்ஸ் போன்றவை நோய் உள்ள பெண்களுக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வரும்.
முற்றிய நிலையில் தோன்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகள்
- பசியின்மை
- எடை குறைதல்
- சோர்வு நிலை
- இடுப்பு, முதுகு மற்றும் காலில் வலி
- ஒற்றைக் கால் வீக்கம்
- சிறுநீர் அல்லது மலம் கழிக்கும் போது ரத்தம் கசிதல்
- மாதவிடாய் வரும் போது அதிகமான ரத்தப்போக்கு, மாதவிடாய் முடிந்தும் இரத்தம் வெளியேறிக்கொண்டே இருத்தல்.