கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்ப காலத்தில் பெண்கள் மறக்கக்கூடாதவை

de431f09 209d 4fb3 81fe e1feefa201b9 S secvpf

கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே…! கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும்.

இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது.

சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது.

கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். தைராய்டு, சுகர் போன்ற பிரச்சனைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

Related posts

பால் சுரப்பை நிறுத்துவது எப்படி?

nathan

வேலைக்குப் போகும் கர்ப்பிணிகள் கவனத்திற்கு. !

nathan

கருவுற்ற பெண்ணுக்கு சில பயனுள்ள ஆலோசனைகள்…!

nathan

கர்ப்பகால சர்க்கரை நோய் ஆபத்தானதா?

nathan

கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசலாமா?

nathan

கர்ப்பிணிகளே பிளாஸ்டிக் – டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிருங்கள்

nathan

கைக்குழந்தைகளின் இரவு உறக்கத்துக்கு ஆலோசனைகள்!…

sangika

குழந்தைக்கு மசாஜ் செய்வது எப்படி?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

கருவிலேயே உங்கள் குழந்தை புத்திசாலியா இருக்கணுமா? இதோ சில டிப்ஸ்!!

nathan