28.3 C
Chennai
Tuesday, Jul 15, 2025
ஆரோக்கியம் குறிப்புகள்

மேகி உண்ணுவது உண்மையிலேயே உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானதா?

09 1433825347 16 nestle maggi

புது டெல்லிக்கு அனுப்பப்பட்ட மேகி மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட ஈயத்தின் அளவுகள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, 13 மாதிரிகளை சோதித்த போது, அவற்றில் பத்து மாதிரிகளில் ஈயத்தின் அளவு 2.5 பி.பி.எம்.-ஐ விட அதிகமாக இருந்துள்ளது.

மேலும், மேகியின் பாக்கெட்டில் குறிப்பிடாத போதும் கூட, சுவையை ஏற்படுத்தும் டேஸ்ட்மேக்கர் மாதிரிகளில் எம்.எஸ்.ஜி. உட்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது. தவறான பிராண்டிங் குற்றத்திற்காகவும், பாதுகாப்பற்ற பொருளை விற்பனை செய்த குற்றத்திற்காகவும், நெஸ்லே நிறுவத்திற்கு எதிராக டெல்லி அரசாங்கம் வழக்கை தொடுத்துள்ளது.

உங்கள் வாழ்க்கை முழுவதும் மேகி உட்கொண்டவரா நீங்கள்? அது ஆரோக்கியமானது தானா? தினமும் மேகி உட்கொள்ளும் என் குழந்தைக்கு என்ன ஆகும்? மேகியைப் பற்றி நம் வல்லுனர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்க்கலாமா?

ஈயம் நிறைந்துள்ள மேகியை உண்ணுவதால் என்ன ஆகும்?

ஈயம் என்ற தீமையான பொருள் நம் உடலுக்குள் நுழையும் போது, நீண்ட கால பக்க விளைவுகள் ஏற்படும். செரிமான செயல்முறைக்கு தொந்தரவு ஏற்படுவதும் இதில் அடக்கம். மூளை, சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை கூட இது வெகுவாக பாதிக்கும்.

மேகியில் எவ்வளவு ஈயம் உள்ளது?

உ.பி.-எஃப்.டி.ஏ நடத்திய ஆரம்ப கட்ட சோதனையின் படி, ஒரு பாக்கெட் மேகியில் கிட்டத்தட்ட 17 பி.பி.எம். அளவில் ஈயம் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஈயத்தின் அளவை விட (0.01 பி.பி.எம்) இது மிகவும் அதிகமாகும். டெல்லி அரசாங்கத்தின் அறிக்கையின் படி, அனுமதிக்கப்பட்ட ஈயத்தின் அளவு 2.5 பி.பி.எம் ஆகும்

மேகியில் உள்ள எம்.எஸ்.ஜி. பற்றி?

ஒரு பாக்கெட் மேகியில் உள்ள எம்.எஸ்.ஜி.யின் சரியான அளவு தெரியவில்லை என்றாலும் கூட, நரம்பு பிரச்சனைகள், தலைவலி மற்றும் ஈரலில் அழற்சி போன்ற பிரச்சனைகளை உருவாக்க கூடியது தான் எம்.எஸ்.ஜி. மேலும் மெட்டபாலிக் சிண்ட்ரோம், உடல் பருமன் மற்றும் பசியின்மை போன்ற இடர்பாடுகளையும் அதிகரிக்கும். எம்.எஸ்.ஜி.யை (மோனோசோடியம் க்ளுட்டமேட்) பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

உடலில் இருந்து ஈயத்தை வெளியேற்ற என்ன செய்ய வேண்டும்?

நம் உடலில் ஈயம் குவிந்து போனால், அளவுக்கு அதிகமான அதனை வெளியேற்றுவது இயலாது. இருப்பினும், கிரான்பெர்ரி எம்.ஐ.ஜி.எச்.டி. போன்ற வளமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அடங்கிய ஜூஸ்களை குடித்தால், உடலில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த தாக்கமும் சற்று குறையும். மேலும் பச்சை காய்கறிகளை நன்றாக உண்ணவும். அதனுடன் சேர்த்து அளவுக்கு அதிகமாக தண்ணீரை குடியுங்கள். இதுவும் கூட நச்சுத் தன்மையை குறைத்து, செரிமான அமைப்பை மேம்படுத்தும்.

குழந்தைகளுக்கு ஏதேனும் உடல்நல கோளாறுகள் ஏற்படும் இடர்பாடுகள் உள்ளதா?

ஈயம் நிறைந்துள்ள மேகியை குழந்தைகள் உண்ணுவதால் மூளை பிரச்சனைகள் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். பெரியவர்களை விட குழந்தைகளின் உடல் ஈயத்தை வேகமாக உறிஞ்சி கொள்வதாலேயே இந்த தாக்கம்.

மேகி உண்ணுவதால் புற்றுநோய் உண்டாகுமா?

ஈயம் மற்றும் எம்.எஸ்.ஜி.-யின் நீண்ட கால தாக்கங்களில் புற்றுநோயும் ஒன்றே. ஈயம் மற்றும் எம்.எஸ்.ஜி. அடங்கியுள்ள மேகியை தினமும் உட்கொண்டால் புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு அதிகமே. உங்கள் அன்றாட வாழ்க்கையில் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்கும் 8 விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

மேகியை தினமும் ஒரு வார காலத்திற்கு உட்கொண்டால் என்ன ஆகும்?

ஈயம் மற்றும் எம்.எஸ்.ஜி. அடங்கிய மேகியை சில நாட்களுக்கு மட்டும் உட்கொள்வதால் எந்த ஒரு அறிகுறியும் தெரியாது.

மேகியை ஒரு மாத காலம் உட்கொண்டால் என்னவாகும்?

உங்கள் உடலில் ஈயம் குவிந்து போவதால், உணவு செரிமானமாவதில் பிரச்சனை ஏற்படும். அதனால் வயிற்று வலி போன்ற பொதுவான அறிகுறிகளை நீங்கள் அனுபவிக்கலாம்.

மேகி – பொதுவாக பார்க்கையில் உண்ணுவதற்கு ஆரோக்கியமான உணவா?

சுத்திரிக்கப்பட்ட மாவு அல்லது மைதாவால் செய்யப்பட்டது மேகி. அதனால் அது சுலபமாக செரிமானம் ஆவதில்லை. மேலும் ஆரோக்கியமற்ற, சோடியம் அதிகமாக உள்ள பதப்படுத்தும் பொருட்கள் அதில் உள்ளது. இரத்த கொதிப்பு ஏற்படுவதற்கான முக்கியமான காரணமாக இது விளங்குகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மேகி என கூறப்படுவது உண்மையா?

வளமையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதிக புரதச்சத்து நிறைந்துள்ளது மேகி என விளம்பரப்படுத்தப்பட்டாலும் கூட மேகியில் ஊட்டச்சத்துக்களோ நார்ச்சத்தோ கிடையாது. சொல்லப்போனால், இதில் கார்போஹைட்ரேட் (சுத்தரிக்கப்பட்ட மாவு) அதிகம். அதனால் அதனை சீரான முறையில் உட்கொள்வது உடல்நலத்திற்கு நல்லதல்ல.

ஓட்ஸ் மேகி மற்றும் மேகி ஆட்டா நூடுல்ஸ் ஆரோக்கியமானதா?

மேகியில் ஓட்ஸ் மற்றும் ஆட்டா உள்ளது என கூறுகையில், இவற்றை கொண்டு மட்டுமே அது செய்யப்படுவதில்லை. அதனுடன் சேர்த்து மைதாவும் சேர்க்கப்படுகிறது. ஆனால் ஓட்ஸ் மற்றும் ஆட்டா நூடுல்ஸில் உள்ள மைதாவின் ஒட்டுமொத்த அளவு சாதாரண மேகி நூடுல்ஸில் இருப்பதை விட குறைவே.

மேகியில் அளவுக்கு அதிகமான ஈயம் இல்லையெனில் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சாப்பிடலாம்?

பெரியவர்கள் என்றால், மேகியை 15 நாட்களுக்கு ஒரு முறை என எப்போதாவது உண்ணலாம். ஆனால் அதில் உடல்நல பயன்கள் இல்லாததால், அதனை தினமும் உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.

நாட்களுக்கு ஒரு முறை உண்ணுவதற்கு எந்த வகை மேகி பரிந்துரைக்கப்படுகிறது?

மேகி என்பது சந்தேகமே இல்லாமல் பலருக்கு பிடித்தமான சுலபமான உணவுகளில் ஒன்றாகும். குறிப்பாக ஹாஸ்டலில் தங்குபவர்களுக்கு. இருப்பினும் ஓட்ஸ் மற்றும் ஆட்டா நூடுல்ஸ் வகைகளை எப்போதாவது ஒரு முறை உண்ண பரிந்துரைக்கப்படுகிறது; அதுவும் வேறு எந்த தேர்வும் இல்லாத போது மட்டுமே.

மேகி உண்ணுவதற்கு சரியான நேரம் எது?

மேகியில் மைதா போன்ற கார்போஹைட்ரேட்ஸ் நிறைந்திருப்பதால், அதனை காலை உணவாக உண்ணாதீர்கள். இல்லையென்றால் செரிமானமாக சிரமமாகிவிடும். மேலும், உங்கள் நாளை தொடங்க உடனடி ஆற்றல் திறனை அது அளிக்காது. அதனால் சாயங்காலம் அல்லது மதிய உணவிற்கு மேகியை உண்ணுங்கள்.

மேகியில் சேர்க்கப்பட்டுள்ள உலர்ந்த காய்கறிகள் உண்ணுவதற்கு பாதுகாப்பானதா?

உலர்ந்த காய்கறிகளில் பதப்பொருட்கள் உள்ளது. இது உங்கள் மெட்டபாலிச வீதத்தையும், செரிமான செயல்முறையையும் குறைக்கும். அதனால் அவைகளை உண்ணுவதை தவிர்ப்பது நல்லது.

குழந்தைக்கு மேகி கொடுப்பதற்கு சரியான வயது என்ன?

உங்கள் குழந்தைக்கு 5 வயது ஆகும் போது மட்டுமே மேகி கொடுக்க தொடங்க வேண்டும். அதுவும் எப்போதாவது (மாதம் ஒரு முறை) தானே தவிர தினசரி அடிப்படையில் அல்ல.

Related posts

குழந்தைகளின் படிக்கும் திறனை தூண்ட வேண்டுமா. இதையும் படிங்க

nathan

உங்களுக்கு பக்கத்துலயே வர முடியாத அளவு தூர்நாற்றமா? அப்ப இத படிங்க!

nathan

கிளைக்கோலிக் ஆசிட் கிரீம் பயன்பாடுகள் (Glycolic Acid Cream Uses in Tamil)

nathan

உஷாரா இருங்க…! இந்த 6 ராசிகளில் பிறந்த பெண்கள் ஆபத்தான அதிபுத்திசாலிகளாக இருப்பார்களாம்…

nathan

தூக்கமின்மையால் அவதியா? இந்த உணவுகளை சாப்பிடுங்க…

nathan

நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்கள் செய்ய வேண்டியவை..!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தெரிஞ்சிக்கங்க…நம் முன்னோர்கள் தொப்பை வராமல் இருக்க குடிச்சது இத தாங்க…

nathan

குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு சொல்லலாம் பை பை!

nathan

கட்டாயம் இதை படியுங்கள் குழந்தைகள், காய்கறி எனக்கு வேண்டவே வேண்டாம்!’ சொல்வதற்கான காரணம்…!-

nathan