24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
சரும பராமரிப்பு

பட்டுப்போன்ற மென்மையான சருமத்தைப் பெற உதவும் க்ரீன் டீ ஃபேஸ் பேக்குகள்!

04 1430723345 1 oilyskin
அனைவருக்குமே க்ரீன் டீயை தினமும் குடித்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும் என்று தெரியும். அதேப்போல் அதனைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், பல்வேறு சரும பிரச்சனைகளைப் போக்கலாம் என்பது தெரியுமா? அதிலும் சருமம் அதிக வறட்சியாகவோ, எண்ணெய் பசையுடனோ, சுருக்கங்களுடன் முதுமைத் தோற்றத்தை தரும் வகையில் இருந்தால், க்ரீன் டீ கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வாருங்கள். ஏனெனில் க்ரீன் டீயில் சரும செல்களைப் பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. சரி, இப்போது க்ரீன் டீயைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போமா!!!

எண்ணெய் பசை சருமத்திற்கு…

சருமத்தில் அதிக அளவில் எண்ணெய் பசை இருந்தால், அதனை நீக்க, 1 டீஸ்பூன் அரிசி மாவுடன், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்.

வறட்சியான சருமத்திற்கு…

உங்கள் முகத்தில் வறட்சி அதிகம் இருந்தால், 1 டீஸ்பூன் மில்க் க்ரீம், 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, அதில் 1-2 டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் வறட்சியினால் ஆங்காங்கு வெள்ளைத்திட்டுகள் காணப்படுவது தடுக்கப்படும்.

சென்சிடிவ் சருமத்திற்கு…

சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், 1 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 1-2 டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், முகத்தில் உள்ள பருக்கள், கருமை, கரும்புள்ளிகள் போன்றவை நீங்கி, முகம் பொலிவோடு மின்னும்.

பளபளப்பான சருமத்திற்கு…

உங்களுக்கு சுருக்கங்கள், கரும்புள்ளிகள் அதிகம் உள்ளதா? உங்கள் முகத்தின் பொலிவு பாதிக்கப்படுகிறதா? அப்படியெனில் 2 டீஸ்பூன் தேனுடன், 1-2 டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து கலந்து, அதனை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, முகம் பளபளப்புடன் காணப்படும்.

புத்துணர்ச்சியான சருமத்திற்கு…

நாள் முழுவதும் அயராமல் வேலை செய்து, முகம் வாடி உள்ளதா? அப்படியென்றால் 1 டீஸ்பூன் மசித்த வாழைப்பழ கூழுடன், 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1-2 டீஸ்பூன் க்ரீன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவில் செய்து வந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும்.

Related posts

வெயிலால் கருமை நீக்குவதில் எளிமை

nathan

உங்களை மணப்பெண் போல் ஜொலிக்க வைக்கும் சந்தனம்!!

nathan

வேக்சிங் செய்தால் வரும் சரும எரிச்சலை போக்க வழிகள்

nathan

சருமத்திற்கு சன் ஸ்க்ரீன் அவசியமா?

nathan

எல்லா வித சருமத்திற்கான பொருத்தமான டிப்ஸ்-உபயோகிச்சு பாருங்க

nathan

சரும வறட்சியை தடுக்கும் 7 வழிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா பாருங்கள் பாத வெடிப்பு வராமல் தடுப்பது எப்படி?

nathan

வரப்பிரசாத வசலினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்….

sangika

சருமத்தை அழகாக்கும் கற்றாழை ஜெல் மாஸ்க்

nathan