சரும பராமரிப்பு

சருமம் பொலிவாக சாப்பிட வேண்டிய உணவுகள்!!! தெரிந்துக் கொள்ளலாம்…

வரும் வாரங்களில் இருந்து வெயில் நம்மை வெளுத்து வாங்க ஆரம்பித்துவிடும். வெயில் காலம் ஒன்று தான் நமக்கு இன்பம், துன்பம் என இரண்டையும் பகிர்ந்தளிக்கும் பண்பினைக் கொண்ட காலம். ஆம், இதில் தான் கோடை விடுமுறை தொடங்கி நம்மை மகிழ்ச்சியடைய செய்கிறது மற்றும் சரும பிரச்சனைகளை தந்து வேதனையடைய செய்கிறது. சாதாரணமாகவே சுற்றுப்புற மாசு, தட்ப வெட்பநிலை மாற்றம் என பல்வேறு விஷயங்களினால் நமது சருமம் நொந்து நூடுல்ஸ் ஆகிக் கொண்டிருக்கும் போது, இந்த கோடைக்காலம் சேர்ந்து நம்மை வாட்டியெடுக்கும். சரி, இதில் இருந்து எப்படி தப்பிப்பது? நீங்கள் என்ன மேக்-கப் செய்தாலும், குளிர்சாதனப் பெட்டியிலேயே குடியிருந்து வெளியில் சென்றாலும். இரண்டே நிமிடத்தில் மொத்தத்தையும் நாசமாக்கிவிடும் இந்த பொல்லாத வெயில்.

வேறு வழிகளில் தான் இதற்கு தீர்வுக் காண வேண்டும். இயற்கை வைத்தியம்! ஆம், நல்ல ஆரோக்கியமான, உடலுக்கு குளிர்ச்சியான பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்வதன் மூலமாகவே நாம் இந்த வெயிலின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க இயலும். வெயில் காலங்களில் நாம் நிறைய நீராகாரம் எடுத்துக் கொள்வது சிறந்தது. பழரசங்கள் அருந்துவதை விட பழங்களை நேரடியாக அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது. அதேப் போலக் கடின உணவுகளை வெயில் காலங்களில் தவிர்ப்பது நல்லது. இது அஜீரண கோளாறுகள் வராமல் இருக்க உதவும். சரி வாருங்கள், இனி சருமம் பொலிவடைய என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என தெரிந்துக் கொள்ளலாம்…

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் ஏ சத்து நிறையவே இருக்கிறது. இது கொலாஜன் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உங்களது சருமம் தளர்வடையாது மற்றும் நல்ல பொலிவடையும். நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலை வெறும் வயிற்றில் பருகுவது மிகவும் நல்லது.

ஆப்பிள்

ஆப்பிளில் குறைவற்ற வைட்டமின் சி சத்து இருக்கிறது. இது சருமத்தின் ஆழத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களைக் கொல்லும் திறன் வாய்ந்தது. தினம் ஒரு ஆப்பிளை உட்கொள்வதன் மூலம் உங்களது சருமம் பொலிவடையும். மற்றும் ஆப்பிள் ஜூஸை முகத்தில் தடவி 1௦ நிமிடம் கழித்து முகம் கழுவினால் சருமம் புத்துணர்ச்சிப் பெறும்.

பீட்ரூட்

உங்களது உடலில் எவ்வளவு அதிகம் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதோ அவ்வளவு அளவு சருமம் பொலிவுப் பெறும். பீட்ரூட்டில் உள்ள அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் உங்களது சருமம் பொலிவடைய நன்கு உதவுகிறது. மற்றும் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்கவும் வெகுவாகப் பயனளிக்கிறது பீட்ரூட்.

காரட்

காரட் நமது அன்றாட உணவுக் கட்டுப்பாட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவாகும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் நமது உடலில் வைட்டமின் ஏ சத்து அதிகரிக்க உதவுகிறது. இதனால் சருமம் நன்கு பொலிவடையும் மற்றும் கேரட் சருமம் சுருக்கமடையாமல் இருக்கவும் உதவுகிறது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

எலுமிச்சை

எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நற்குணம், உங்களது சருமத்தை கரும்புள்ளிகள், முகப்பரு மற்றும் வடுக்களில் இருந்து காப்பாற்ற உதவுகிறது.

பூசணிக்காய்

பூசணியில் உள்ள சின்க்கின் (zinc) தன்மை சருமத்தில் புதிய செல்களை உருவாக்கிட பெருமளவில் உதவுகிறது. இது முகத்தில் எண்ணெய் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவுகிறது.

பசலைக்கீரை

பசலைக்கீரையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் முகத்தில் இருக்கும் சுருக்கங்களை குறைக்கவும், முகத் தசைகளை வலுவடையச் செய்யவும் உதவுகிறது. மற்றும் இதன் நற்குணங்கள் சருமத்தில் இருக்கும் நச்சுகளை அழித்து சருமம் தெளிவடையவும், பொலிவடையவும் நன்கு பயனளிக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் மாலிக் அமிலத்தின் தன்மை இயற்கையாகவே சருமம் வெண்மையடைய உதவுகிறது. மற்றும் இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தை ஆரோக்கியமடைய வெகுவாக உதவுகிறது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி-யின் நற்குணங்கள், சருமத்தில் ஏற்படும் வடுக்கள் மற்றும் பருக்களை குறைக்க உதவுகிறது. சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து உண்பது மிக சிறந்ததாகும்.

தக்காளி

தக்காளியில் இருக்கும் லைகோஃபீன் எனும் உயர்ரக ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தை பருக்கள் வராமல் இருக்க உதவுகிறது. இதை உணவில் அல்லது உணவுக்கு முன் சூப்பாக உட்கொள்வது நல்லது. இயற்கையாகவே தக்காளியை உட்கொள்வதன் மூலம் சருமம் பிரகாசிக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button