29.2 C
Chennai
Tuesday, May 21, 2024
30 1446203029 6 papaya
சரும பராமரிப்பு

இந்த பழங்களின் தோல்கள் சரும பொலிவை அதிகரிக்க உதவும்!

இன்றைய மாசடைந்த சுற்றுச்சூழலால் சருமத்தின் ஆரோக்கியம் குறைந்து, பல சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. பல இளம் பெண்கள் தங்களின் முகச்சருமம் பாதிப்பிற்குள்ளாகக் கூடாது என்று வெளியே செல்லும் போது முகமூடி கொள்ளைக்காரி போல் துணியை சுற்றிக் கொண்டு திரிகிறார்கள்.

அதுமட்டுமின்றி, அழகு நிலையங்களுக்குச் சென்று தங்களின் முகத்திற்கு பல்வேறு பராமரிப்புக்களை மேற்கொள்கிறார்கள். இப்படி எப்போது பார்த்தாலும் கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு சருமத்திற்குப் பராமரிப்பு கொடுத்தால், சரும செல்கள் விரைவில் அழிந்து, முகம் பொலிவிழந்து அசிங்கமாகிவிடும்.

எனவே நாம் பயன்படுத்தும் சில சமையலறைப் பொருட்கள் அல்லது நாம் சாப்பிடும் சில பழங்களின் தோல்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும ஆரோக்கியம் மேம்படுவதோடு, சருமமும் பொலிவோடு பிரச்சனையின்றி இருக்கும். சரி, இப்போது எந்த பழங்களின் தோல்களை எல்லாம் சருமத்திற்குப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு பழத்தின் தோலில் வளமான அளவில் வைட்டமின் சி மற்றும் ஏ நிறைந்துள்ளது. இவை சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையானவை. அதில் வைட்டமின் சி சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். வைட்டமின் ஏ சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை மறைய வைக்கும். மேலும் முகப்பருவில் இருந்தும் விடுவிக்கும்.

வாழைப்பழத் தோல்

வாழைப்பழத்தின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஏராளமாக நிறைந்துள்ளது. இது சரும செல்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் புறஊதாக் கதிர்களிடமிருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். எனவே இனிமேல் வாழைப்பழத்தின் தோலை தூக்கி எறியாதீர்கள்.

மாதுளை தோல்

மாதுளையின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. இது சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீங்கி, முதுமைத் தோற்றத்தைத் தடுத்து, சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும்.

எலுமிச்சை தோல்

எலுமிச்சையின் தோலில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை உள்ளதால், அது சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் வெளியேற்றும். மேலும் இதில் உள்ள சிட்ரிக் ஆசிட், சரும பொலிவை அதிகரிக்கும்.

ஆப்பிள் தோல்

ஆப்பிளின் தோலில் பாலிஃபீனால்கள் ஏராளமாக உள்ளதால், அது ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் சரும செல்களைப் புதுப்பிக்கும்.

பப்பாளி தோல்

பப்பாளியின் தோலில் ஆல்பா ஹைட்ராக்ஸி பொருள் உள்ளது. இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்க வல்லது. மேலும் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களையும் நீக்கவல்லது.

30 1446203029 6 papaya

Related posts

ப்யூட்டி டிப்ஸ் !

nathan

beauty tips.. உங்கள் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யும் பொருட்கள் இதுதான்..!!!!

nathan

குளிப்பதற்கு சோப்பும் ஷாம்புவும் மட்டும்தான் உபயோகிக்க வேண்டுமா?

nathan

காபியை அதிகமாக குடித்தால் முகப்பரு உண்டாகிறது பெண்களே……

nathan

முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்க….

sangika

சருமம் பற்றிய குறிப்புகள்..

nathan

மருதாணியை நீக்குவதற்கான இயற்கை வழிகள்!பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களின் அழகைப் பாதுகாக்கும் கிருணிப்பழம்

nathan

எந்த சருமத்தினர் எந்த வகை ‘சன் ஸ்கிரீன்’ பயன்படுத்தலாம்

nathan