உயரத்திற்கு ஏற்ப உடல் எடையுடன் நாம் இருப்பதே ஆரோக்கியம். அதற்கு மாறாக நாம் அதிக எடையுடன், தொப்பையை வைத்துகொண்டிருக்குறோம். இதற்கு காரணம் அதிகப்படியான கெட்ட கொழுப்பு உடலில் படிவதே. நாம் உண்ணும் உணவில் இருக்கும் அதிகப்படியான மாவுச்சத்துக்கள் அனைத்தும், உடல் உழைப்பின்றி இருக்கும் போது கொழுப்புச் சத்தாக மாறுகின்றது. உடம்பை குறைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருவோர் கொடம்புளியை தங்கள் டயட்டில் சேர்த்துகொண்டால் வெற்றி நிச்சஜம், மிக விரைவில் உடல் எடைகுறைந்து அழகான தோற்றத்தை பெறலாம்.
கொடம்புளியின் பூர்வீகம் இந்தியாதான். தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் விளைகின்றது. நமக்கு கிடைப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் உள்ளது. எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. தென் மாவட்டங்களில் தினமும் சமையலில் சேர்த்து கொள்கிறார்கள். கொடம்புளியில் உள்ள ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் என்ற வேதிப்பொருள் தான் உடலின் எடையைக் குறைக்க பெரும் வகையில் உதவுகிறது. உடலில் உள்ள கொழுப்பை எரிப்பதுடன், மாவுச் சத்தை கொழுப்புச் சத்தாக மாறாமல் ஹைட்ரஸி சிட்ரிக் அமிலம் தடுக்கிறது. கொடம்புளி பசியைக் கட்டுப்படுத்தி, மலச்சிக்களை தீர்த்து ஜீரண மண்டலத்தை பலப்படுத்துகிறது.
புளிக்குப் பதிலாக கொடம்புளியை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். 1௦ நாட்களில் உடல் எடை குறைக்க விரும்புவோர் உடற்பயிற்சியுடன் கொடம்புளி சூப்பை தொடர்ந்து 1௦நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வாருங்கள், கண்டிப்பாக உடனடி மாற்றம் தெரியும், அதிகப்படியான உடல் எடை குறையும். இந்த கொடம்புளி சூப் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
கொடம்புளி சூப் – கொடம்புளி 1௦௦ கிராமை ஒரு பெரிய டம்ளர் வெந்நீரில் இரவே உறவையுங்கள். 5௦௦ கிராம் கொள்ளையும் ஒருடம்ளர் வெந்நீரில் இரவே உறவையுங்கள். இரண்டையும் வடிகட்டி கொதிக்கவைத்து ஒரு டம்ளராக வற்றவைத்து எடுங்கள். வடிகட்டிய சூப்பில் சிறிது சுக்குதூள், மரமஞ்சள், மிளகுதூள் சேர்த்து நான்கு டீஸ்பூன் தேனை ஊற்றி கலக்கினால், கொடம்புளி சூப் தயார். இதை தொடர்ந்து குடித்து ஸ்லிம் ஆகவேண்டியது தான்.