29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
798ytuyujyuy
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

எவ்ளோ பெரிய தொப்பையையும் மாயமாக்க, கொள்ளை இப்படி பயன்படுத்துங்கள்.!

30 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப்பார்க்கும் அப்படியே 5 வருசம் கழிச்சி பாத்தால் அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும்.

இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி. இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு – களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள். உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால்,கொழுத்தவன் கொள்ளு சாப்பிடுவான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.

இந்தப் பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் இருக்கிறது .அதாவது, மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும்.மழை தவறினால் எள்ளு உற்பத்தி பாதிக்கப்படும். ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப்பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.மருத்துவ குணம்: கொள்ளுப் பருப்பை இரவில் ஊற வைத்து,அந்த நீரை காலையில் அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை வறுத்தும் சாப்பிடலாம்.
798ytuyujyuy
கொள்ளை கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும் ஆற்றல் உள்ளது. வயிற்றுப்போக்கு,வயிற்றுப்பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்த குருதிப்போக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

எலும்புக்கு உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பினை கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள். கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு – ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள். சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாம்.

கொள்ளை ஆட்டி பால் எடுத்து(தண்ணீர்க்குப் பதில்)அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம். நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும் மேலும் கொ‌ள்ளு ரச‌ம்,கொ‌ள்ளு துவைய‌ல், கொ‌ள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.

தேவையான பொருள்கள்:
கொள்ளு – 4 ஸ்பூன் ,
பூண்டு – 5 பல் ,
தக்காளி – 2 ,
மிளகு – 1 ஸ்பூன் ,
சீரகம் – 1 ஸ்பூன் ,
துவரம்பருப்பு – 1 ஸ்பூன் ,
பெருங்காயம் – 1ஃ2 ஸ்பூன் ,
கொத்தமல்லித்தழை – சிறிது ,
கறிவேப்பிலை – சிறிது ,
தாளிக்க நல்லெண்ணெய் – சிறிது ,
கடுகு – சிறிது , வரமிளகாய் – 2

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும் மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அரைத்தக் கலவையில் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

Related posts

கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு மீன் நல்லதா?

nathan

வீட்டில் செல்லப் பிராணிகளால் துர்நாற்றமா? அதைப் போக்க இதோ உங்களுக்கான டிப்ஸ்…

nathan

ஏராளமான நன்மைகள்! வெறும் வயிற்றில் தண்ணீருடன் இதனை கலந்து குடித்து பாருங்கள்!

nathan

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! குழந்தையின் உடல் பருமனை குறைக்க உதவும் எளிய வழிமுறைகள்!

nathan

இத படிங்க உடல் பருமன் உண்டாக காரணங்கள் என்ன ??

nathan

தெரிஞ்சிக்கங்க…வாய் துர்நாற்றத்தினால் அவதிப்படுகின்றீர்களா…? இதோ உங்களுக்கு இலகுவான வழிகள்…!

nathan

நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்களுக்கு மனஅழுத்தத்தை அதிகம் ஏற்படுத்துமாம்!

nathan

வைத்திய குறிப்புகள்…!! ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள

nathan

இந்த உணவுகள் பற்கள் மற்றும் துவாரங்களின் மஞ்சள் நிறத்தையும் ஏற்படுத்தும்!

nathan