மாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகத்தில் தான் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள ஒவ்வொரு குழந்தையும் சில அதிமுக்கிய ஆற்றல்களை கற்றுக் கொள்ள வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். நீங்களும் அதற்கு ஆமோதிப்பீர்கள் என நம்புகிறோம். வெற்றிகரமான மனிதர்களாக இந்த சமுதாயத்தில் நடைபோட பள்ளிகளே உங்கள் குழந்தைகளுக்கு பலவற்றை கற்றுக்கொடுக்கின்றன.
இருப்பினும் தங்கள் ஆசிரியர்களிடம் இருந்து அவர்கள் பெறும் அறிவு சில நேரம் அவர்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை. சந்தோஷம் மற்றும் வினைத்திறம் கொண்ட மனிதனாக உங்கள் குழந்தை மாற, பெற்றோர்களாக, அவர்களுக்கு உதவுவது உங்களின் அடிப்படை பொறுப்பாகும்.
கணிக்க முடியாத இந்த உலகத்தை எதிர்கொள்ள, ஒவ்வொரு குழந்தையும் தெரிந்து கொள்ள வேண்டிய, 7 முக்கிய திறமைகளைப் பற்றி இப்போது பார்க்கலாமா?
நிலைப்புத் திறன்
இரக்கமற்ற இந்த உலகத்தில் எப்படி நிலைத்து வாழ்வது என்பதை கண்டிப்பாக ஒவ்வொரு குழந்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். தீயை உருவாக்குவது, தண்ணீர் மற்றும் உணவை கண்டுப்பிடிப்பது, தற்காத்து கொள்வது மற்றும் பல கருவிகளை பயன்படுத்துவது போன்ற அடிப்படையான விஷயங்களை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போதுள்ள பல குழந்தைகளுக்கு மூர்க்கமான சூழ்நிலையில் வாழ்வதென்றால் என்னவென்றே தெரியாது. அதற்கு காரணம் அதனோடு அவர்களுக்கு பரீட்சயம் ஏற்பட்டிருக்காது. ஆனால் அவர்களின் பெற்றோராக, இந்த முக்கியமான ஆற்றலை அவர்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படி செய்யும் போது எப்படிப்பட்ட கரடு முரடான சூழலிலும் அவர்களை பாதுகாக்க அவர்களுக்கு தெரியும். இவ்வகை சூழ்நிலையை அவர்கள் சந்திக்கே வேண்டி வரலாம் தானே; யாருக்கு தெரியும்?
எளிய உணவை தயாரிக்க பழகுதல்
குறைந்தது 9 அல்லது 10 வயதை அடைந்துள்ள குழந்தைகளுக்காக இந்த ஆற்றல். அதிக அளவிலான வேலை இல்லாத, எளிய உணவு ஒன்று அல்லது இரண்டை, எப்படி தயாரிக்க வேண்டும் என்று ஒவ்வொரு குழந்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். இதனை அவர்களுக்கு கற்றுக்கொடுப்பதால், உறுதியுடன் தனித்து நிற்கும் ஆற்றலை அவர்கள் பெறுவார்கள். இந்த பழக்கத்தால் அப்பப்போ உங்களுக்கு ஆச்சரியங்களையும் அவர்கள் அளிப்பார்கள். வேலை முடிந்து சோர்ந்து போய் நீங்கள் வீட்டிற்கு வரும் வேளையில், உங்கள் குழந்தை உங்களுக்காக சமைத்து வைத்து காத்திருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அதை விட ஆனந்தம் ஏதேனும் இருக்க முடியுமா என்ன? உங்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்ட இது ஒரு சரியான வழியாகும்.
கடிதம் எழுதுதல்
அனைத்துமே இணையதளம் மயமாக மாறி விட்ட இக்காலத்தில் இந்த ஆற்றல் அவசியம் தேவை தானா என்று நீங்கள் கேட்பீர்கள் என்று எங்களுக்கு தெரியும். இருப்பினும், இன்றும் கூட கடிதங்கள் பயன்படுத்தப்பட்டு தான் வருகிறது; அதில் பல மின்னஞ்சல் என்ற வடிவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவை கடிதங்கள் போல் தான் என்றாலும் கூட, முற்றிலுமாக கடிதத்தோடு ஒத்துப்போகாது. கடிதம் எழுதுவதற்கு, உங்கள் குழந்தை முறைசார் மொழியை தான் அதிகமாக பயன்படுத்த வேண்டும். மேலும் குறிப்பிட்ட சில அமைப்பின் மீதும் மரியாதை செலுத்த வேண்டும். குழந்தைகளை தங்களின் தாத்தா பாட்டி, சித்தி சித்தப்பா, மாமா அத்தை என பல உறவினர்களும் கடிதம் எழுத ஊக்குவித்து இந்த ஆற்றலை அவர்களிடம் வளர்த்திட வேண்டும். அப்படி செய்யும் போது கடிதம் பெற்ற உறவினர்களும் கண்டிப்பாக பதில் எழுதுவார்கள்.
எளிய வேலைகள்
ஒவ்வொரு குழந்தையும் பல வகையான வேலைகளை கற்றுக்கொள்ள வேண்டும்; அது சுத்தம் செய்வதாக இருக்கட்டும், துவைப்பதாக இருக்கட்டும் அல்லது பாத்திரங்கள் கழுவுவதாக இருக்கட்டும். உங்கள் வீட்டு வேலையில் உங்கள் குழந்தை உங்களுக்கு உதவட்டும். இவ்வகையான சின்ன சின்ன வேலைகளுக்கு அதிக அளவிலான உழைப்பு தேவையில்லை. அவர்களை ஊக்குவிக்க அவர்களின் வேலையை சின்ன விளையாட்டாக கூட மாற்றலாம். இப்படி செய்வதால், சுத்தத்தின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு புரிய வைக்கலாம். மேலும் வீட்டை சுத்தமாக வைக்க எவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.
சிக்கல்களை தீர்க்கும் ஆற்றல்கள்
சின்ன குழந்தையாக இருந்தாலும் சரி பெரிய குழந்தையாக இருந்தாலும் சரி, சிக்கல்களை தீர்க்கும் ஆற்றல்களை ஒவ்வொரு குழந்தைகளிடமும் வளர்ப்பது மிகவும் தேவையானது. புது விஷயங்களை ஆய்வு செய்ய, அதிக கேள்விகள் கேட்க, பல வகை தீர்வுகளை முயற்சிக்க அவர்களை ஊக்கப்படுத்துங்கள். அவர்களின் அனைத்து பிரச்சனைகளையும் நீங்களே தீர்ப்பதால் அவர்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள் என்றால், கண்டிப்பாக இல்லை. அவர்களை விடையை தேட விடுங்கள், சிறந்த தீர்வை கண்டுப்பிடிக்க விடுங்கள், சில நேரம் தோற்க்கவும் விடுங்கள். தங்களின் தவறுகளில் இருந்து அவர்கள் கற்றுக்கொள்ளும் படி செய்யுங்கள். மீண்டும் முயற்சிக்க பயம் கொள்ளாமல் இருக்கவும் ஊக்குவியுங்கள்.
அவர்கள் சந்தோஷத்தை உணர்தல்
தனித்து வாழ, வாழ்க்கையை ரசித்திட, சின்ன சின்ன விஷயங்களில் கூட சந்தோஷத்தை காண உங்கள் குழந்தைக்கு கற்றுக் கொடுங்கள். தங்கள் சந்தோஷத்தை உணர்ந்திட அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். தங்கள் சந்தோஷத்திற்கு அவர்கள் யாரையும் நம்பி இருக்க வேண்டியதில்லை என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். உங்கள் குழந்தையின் அந்தரங்கத்திற்கு மதிப்பளித்து அவர்களுக்கு சிறிது தனிமையை வழி வகுத்து கொடுங்கள். அதனால் இந்த வாழ்க்கையில் அவர்கள் யார் என்றும் தான் என்னவாக வேண்டும் என்பதை பற்றியும் கனவு கண்டு அதற்கான பாதையை நோக்கி நடக்க தொடங்குவார்கள். இதனால் வளர்ந்த மனிதர்களை போல் உணர்வு ரீதியான பாதுகாப்பை அவர்கள் உணர்வார்கள். இதனால் தவறான தேர்வுகள் பலவற்றை அவர்கள் தவித்து நச்சுத்தன்மை வாய்ந்த உறவுகளிடம் இருந்து விலகியே இருப்பார்கள். அதற்கு காரணம் தங்களை யாருமே விரும்ப மாட்டார்கள் என்று ஏற்படுகிற பயமே.
இரக்க உணர்வு
இந்த ஆற்றலை நேர மாற்றங்களுக்கு ஏற்ப நாம் பயன்படுத்த வேண்டும். உங்களிடம் அது இல்லையென்றால், இரக்க உணர்வை இப்போது கூட கொண்டு வரலாம். ஆனால் உங்கள் குழந்தைக்கு அந்த உணர்வை அவர்களின் சின்ன வயதிலிருந்தே அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். பிறரின் நலனில் அக்கறை கொள்வது, பொறுமையை கடைப்பிடித்து மரியாதையுடன் நடப்பது, பிறரை சந்தோஷப்படுத்தி அதில் இன்பம் காண்பது போன்ற நல்ல குணங்களை கற்றுக் கொடுங்கள். அவர்களுக்கு நீங்கள் ஒரு நல்ல உதாரணமாக திகழ்ந்து, இரக்க குணம் என்றால் என்ன என்று அவர்களுக்கு புரிய வையுங்கள். எப்போதும் அன்போடு நடந்து உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு உதவிடுங்கள்.
குறிப்பு
வாழ்க்கையின் பிற்பாட்டில் நடக்கும் அனைத்தையும் சந்திக்க, உங்கள் குழந்தை தயாராக இருக்க, நீங்கள் அவர்களுக்கு உதவிட வேண்டும். காரணம், வருங்காலத்தில் இந்த உலகம் எப்படி மாறப்போகிறது மற்றும் அதனால் அவர்கள் சந்திக்க போகும் சவால்களை தகர்க்க தேவையான ஆற்றல் என்ன என்பததை பற்றியெல்லாம் உங்களுக்கு தெரியாது. உங்கள் குழந்தைக்கு என்ன ஆற்றல்களை கற்றுக் கொடுத்துள்ளீர்கள்? அனைத்து குழந்தைகளும் கற்றுக் கொள்ள வேண்டிய வேறு ஏதேனும் ஆற்றலை பற்றி நீங்கள் அறிவீர்களா? அப்படியானால் அவைகளை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.