சாதாரணமாக வெந்தயம் கசப்பாக இருந்தாலும் நார்ச்சத்து, புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்றவை ஏராளமாக அடங்கியுள்ளது .
அப்பேற்பட்ட வெந்தயத்தை இரவில் முழுவதும் நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு அந்நீரை குடித்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து நம் உடலின் சர்க்கரை அளவை சீராக்குவதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.மேலும் வெந்தயத்தில் பொட்டாசியம் இருப்பதால், ரத்தத்தையும், இருதய துடிப்பும் கட்டுக்குள் வைப்பதுடன், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை ரத்தில் குறைத்து விடுகிறது. நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுகள், ரத்தச்சோகை போன்ற பிரச்சனைகளை குணமாக்க வெந்தயத்தை முளைக்க வைத்து உண்ணலாம் .
மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகள் மற்றும் பெண்களுக்கு சாதாரணமாக ஏற்படும் இரும்புச்சத்து கோளாறு போன்ற பிரச்சனைகளை வெந்தயம் சரியாக்குகிறது . சிறிது வெந்தயத்தை மென்று தின்றதும், 2 சிறிய வெங்காயத்தை மோரில் நறுக்கி போட்டு அதை சாப்பிட்டு வர உடல் எடை கணிச்சமாக குறையும்.