26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
9 kalpasi 1
ஆரோக்கிய உணவு

நெஞ்சு சளிக்கு ‘டாடா’ சொல்லணுமா? அப்ப இத பொடி பண்ணி தேன் கலந்து சாப்பிடுங்க…

உணவை மிகவும் சுவையானதாக்குவதில் மசாலாப் பொருட்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்கும் மசாலாப் பொருட்கள் இருக்கும். அதில் இலவங்கப் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, கல்பாசி போன்றவை குறிப்பிடத்தக்கவை. நாம் இதுவரை பட்டை, கிராம்பு போன்றவற்றின் நன்மைகளைப் பற்றி தான் பார்த்துள்ளோம். இப்போது நாம் கல்பாசியைப் பற்றி பார்ப்போம்.

நம்மில் பெரும்பாலானோருக்கு கல்பாசியைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது, உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்கிறது. கல்பாசி கருப்பு மற்றும் ப்ரௌன் நிறங்கள் கலந்த மென்மையான ஒரு பூ வடிவிலான பொருள். இது ஹிமாச்சல் பிரதேசத்தில் இருந்து அருணாச்சல பிரதேசம் வரை பல பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. இந்த கல்பாசி இந்தியாவின் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, மகாராஷ்டிராவின் கோடா மசாலாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இப்போது இந்த கல்பாசியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்துக் காண்போம்.

வலி மற்றும் அழற்சியைக் குறைக்கும்

கல்பாசியால் தயாரிக்கப்பட்ட அத்தியாவசிய எண்ணெய் பல்வேறு வலிகளான தசை வலி, மூட்டு வலி, சுளுக்கு போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதில் உள்ள ஆக்டிவ் கூறுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் போன்றவை வலி மற்றும் அழற்சியில் இருந்து விடுபட உதவுகிறது.

சிறுநீரக கற்களைக் கரைக்கும்

பாரம்பரியமாக கை வைத்தியம் செய்பவர்கள் சிறுநீரக கற்களைக் கரைப்பதற்கு கல்பாசியைப் பயன்படுத்துகின்றனர் என்பது தெரியுமா?. மேலும் இதில் உள்ள ஆன்டிலித்தியாடிக் பண்பு, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுப்பதோடு, சிறுநீரக கற்கள் உருவாக்குவதைத் தடுக்க உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்தும்

கல்பாசி செரிமான நொதிகளை தூண்டிவிட்டு, வயிறு சம்பந்தமான பிரச்சனைகளான வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், வாந்தி, வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம் போன்றவற்றைக் குறைக்க உதவும். மொத்தத்தில் கல்பாசி ஒட்டுமொத்த செரிமான செயல்பாட்டை எளிதாக்கும்.

இதய நோயின் அபாயம் குறையும்

கல்பாசி உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் இதயத்திற்கு கொடுக்கப்படும் வேலைப்பளு குறைந்து, இதய நோயின் அபாயம் குறையும்.

சரும ஆரோக்கியம் மேம்படும்

கல்பாசியில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது சரும பிரச்சனைகளை சரிசெய்யும். குறிப்பாக சருமத்தில் அரிப்பு, சருமத்தில் ஆங்காங்கு இருக்கும் கரும்புள்ளிகள் போன்றவை நீங்குவதற்கு கல்பாசியை நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.

காயங்கள் குணமாகும்

கல்பாசியில் உள்ள மருத்துவ பண்புகள், காயங்களை விரைவில் குணமாக்கும். எனவே உங்களுக்கு ஏதேனும் அடிப்பட்ட காயம் ஏற்பட்டிருந்தால், கல்பாசியை நீர் சேர்த்து அரைத்து நன்கு பேஸ்ட் செய்து தடவுங்கள். இதனால் சீக்கிரம் காயம் ஆறிவிடும்.

இருமல் மற்றும் ஆஸ்துமா

கல்பாசி பொடி இருமல் மற்றும் ஆஸ்துமாவிற்கு நல்ல சிகிச்சை அளிக்கும். அதற்கு கல்பாசி பொடியை தேன் மற்றும் நீர் சேர்த்து நன்கு கலந்து, சாப்பிட வேண்டும். இதனால் வறட்டு இருமல், நெஞ்சு சளி பிரச்சனை போன்றவை நீங்கும்.

பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள்

உணவில் உள்ள நுண்ணுயிரிகளின் தாக்கத்தில் இருந்து விடுபட கல்பாசி உதவும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் தான். இது உணவில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுக்கும். மேலும் சமைக்கும் போது உணவில் கல்பாசியை சேர்த்தால், உணவால் நீங்கள் நோய்வாய்ப்படுவதைத் தடுக்கலாம்.kalpasi

கல்பாசியின் பக்கவிளைவுகள்:

கல்பாசியில் எவ்வளவு தான் நன்மைகள் நிறைந்திருந்தாலும், அவற்றிலும் ஒருசில பக்கவிளைவுகள் உள்ளன. அதை ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அதில்,

* ஹைப்பர் சென்சிடிவ் பிரச்சனை உள்ளவர்களுக்கு கல்பாசியால் அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

* சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு கல்பாசியால் அரிப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

* தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் கல்பாசியை உட்கொள்ளும் முன், மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

Related posts

உடல் சூட்டை குறைக்கும் வெந்தயக்களி

nathan

சுவையான மருத்துவ பண்புகள் நிறைந்த வெங்காயம் மோர்!…

nathan

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ் : மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்…!

nathan

இளநீர் குடிப்பது நல்லதே! ஆனா இவங்க மட்டும் குடிக்க வேணாம்…

nathan

சுவர் டிப்ஸ் !மூட்டு வலியை போக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு சூப்!

nathan

உங்களுக்கு தெரியுமா வைட்டமின் பி 3 சத்துகள் உடலுக்கு ஏற்படுத்தும் நன்மைகள்!

nathan

இந்த பிரச்சனை இருக்குறவங்க தெரியாம கூட வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாதாம்…

nathan

கலப்பட உணவுகளை எவ்வாறு கண்டறிவது?

nathan

உங்களுக்கு தெரியுமா தேனை எந்தெந்த ஜூஸில் கலந்து குடிச்சா என்னென்ன நோய்கள் தீரும் தெரியுமா?

nathan