26 C
Chennai
Wednesday, Dec 25, 2024
1 moringaoil 1
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு கெட்ட கொலஸ்ட்ரால் சட்டென்று குறையணுமா? அப்ப தினமும் செய்யுங்க…

முருங்கைக்காய் என்றவுடன் நினைவிற்கு வருவது சாம்பார். முருங்கைக்காய் கொண்டு தயாரிக்கும் சாம்பார் அந்த தெருவையே மணக்க வைக்கும். அந்த அளவிற்கு சுவை மிகுந்த முருங்கைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஒரு காயாகும். தென்னிந்தியாவில் மிகவும் அதிகமாக சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு காய் இந்த முருங்கை. பொதுவாக தாய்மார்கள் எப்போதும் கைவசம் முருங்கைக்காயை வைத்திருப்பார்கள். அவ்வப்போது சாம்பார், பொரியல் வறுவல் என்று எல்லாவற்றிலும் முருங்கைக்காயை சேர்த்து சமைப்பது வழக்கம்.

 

முருங்கை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயன்படக்கூடிய அளவிற்கு ஒரு மந்திர மரமாக இருப்பது இதன் சிறப்பம்சமாகும். இதன் இலைகள், காய், வேர் என்று எல்லாவற்றிலும் மிகுந்த சத்துகள் உள்ளன. மேலும் இவை அனைத்தையும் நாம் உட்கொள்ள முடியும்.

ஊட்டச்சத்துகள் நிறைந்த இந்த முருங்கையின் எண்ணெய்யும் பல்வேறு நன்மைகளைக் கொண்டது. இதனை சமையலில் பயன்படுத்தலாம் மற்றும் அத்தியாவசிய எண்ணெயாக பல்வேறு விதங்களிலும் பயன்படுத்தலாம். இந்த முருங்கை எண்ணெய் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பத்திவைப் படியுங்கள்.

முருங்கை எண்ணெய் என்றால் என்ன?

முருங்கை காயில் இருக்கும் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் முருங்கை எண்ணெயாகும். இந்த செடிக்கு பல்வேறு மருத்துவ தன்மைகள் உண்டு. குணப்படுத்தும் தன்மை மற்றும் ஆரோக்கியம் ஒருங்கே இணைந்தது இந்த செடி. மனித உடலின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் புரதம், நிறைவுற்ற கொழுப்பு, டோக்கோபெரால் மற்றும் ஸ்டெரால் போன்றவற்றைக் கொண்டது இந்த முருங்கை விதைகள். இந்த விதைகளில் அதிக எண்ணெய் கூறுகள் இருப்பதால் பல்வேறு நுட்பங்கள் பயன்படுத்தி இதன் எண்ணெய் எடுக்கப்படுகிறது மற்றும் பல்வேறு உடல்நலக் கோளாறுகளை குணப்படுத்த பயன்படுகிறது.

முருங்கை எண்ணெயின் பயன்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்:

பல்வேறு ஒப்பனை பொருட்களில் மேற்பூச்சாக பயன்படுத்தப்படும் இந்த முக்கிய மூலக்கூறு சருமத்திற்கு மிகவும் பாதுகாப்பானது. இந்த முருங்கை எண்ணெய்யின் நன்மைகள் மற்றும் சிறப்புகள் பிரபலமாக அறியப்பட்டவுடன் பல ஒப்பனைப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் இதனை தங்கள் தயாரிப்புகளில் முக்கிய மூலிகை மூலப்பொருளாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டன .

முருங்கை எண்ணெயின் பொதுவான பயன்கள்:

க்ளென்சர், டோனர் மற்றும் மாய்ஸ்ச்சரைசர்

முருங்கை எண்ணெயில் ஓலிக் அமிலம் உள்ளது. அதனால் இது ஒரு மிகச்சிறந்த க்ளென்சராகவும், ஈரப்பதத்தைத் தரும் மாய்ஸ்ச்சரைசராகவும் பயன்படுகிறது.

சமையல் எண்ணெய்

இந்த எண்ணெயில் ஒற்றைநிறைவுறா ஆரோக்கிய கொழுப்புகள் உள்ளன. அதனால் மற்ற சமையல் எண்ணெய்க்கு மாற்றாக இதனைப் பயன்படுத்தலாம். மேலும் பொருளாதார ரீதியாகவும் உகந்த இந்த எண்ணெய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது.

கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு

முருங்கை எண்ணெயில் ஸ்டெரால் உள்ளது. இது LDL என்று அறியப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அழற்சி எதிர்ப்பு

கட்டி, வலி போன்றவற்றுடன் தொடர்புடைய அழற்சி அல்லது வீக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த எண்ணெய் மிகுந்த நன்மை அளிக்கிறது. இதனை மேற்புறமாக தடவுவதால் அல்லது உட்கொள்வதால், இதில் உள்ள பாயோஆக்டிவ் கூறுகள் பாதிப்புகளை எளிமையாகவும் சிறப்பாகவும் போக்குகின்றன.

முருங்கை எண்ணெய்யை எவ்வாறு பயன்படுத்துவது?

தேவையான பொருட்கள்:

* முருங்கை எண்ணெய் – 8-10 துளிகள்

* பாதாம் எண்ணெய் – 1 கப்

* டீ-ட்ரீ அல்லது லாவெண்டர் எண்ணெய் – 8-10 துளிகள்

முருங்கை எண்ணெயை கூந்தலுக்கு எவ்வாறு பயன்படுத்துவது?
முருங்கை எண்ணெயை கூந்தலுக்கு எவ்வாறு பயன்படுத்துவது?
* ஒரு கிண்ணத்தில் மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

* பின்னர் இந்த கலவையை ஒரு கண்ணாடி ஜாரில் மாற்றிக் கொள்ளவும்.

* இந்த எண்ணெய்யை உங்கள் கூந்தலின் வேரில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும்.

* இரவில் உறங்கச் செல்வதற்கு முன் இப்படி செய்து இரவு முழுவதும் ஊறவிடவும்.

* அடுத்த நாள் காலை, மூலிகை ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசவும் மற்றும் கண்டிஷ்னர் பயன்படுத்தவும்.

* இந்த எண்ணெய்யை லேசாக சூடாக்கி பயன்படுத்துவதால் நன்மைகள் சற்று அதிகமாகக் கிடைக்கும்.

சருமத்திற்கு முருங்கை எண்ணெய் பயன்படுத்தும் முறையை இப்போது காணலாம்.1 moringaoil 1

பயன்படுத்தும் முறை :

* மேலே கூறிய மூலப்பொருட்களை ஒன்றாகக் கலந்து ஒரு கண்ணாடி ஜாரில் மாற்றிக் கொள்ளவும் .

* பாதாம் எண்ணெய்க்கு மாற்றாக ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்திக் கொள்ளலாம் .

* இந்த கலவையை ஒரு சிறு அளவு கைகளில் எடுத்து, முகத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்யலாம்.

* சூழல் வடிவத்தில் மசாஜ் செய்த பின்னர் , 10-15 நிமிடங்கள் அப்படியே விடவும். இதனால் இந்த எண்ணெய்யை உங்கள் சருமம் உறிஞ்சிவிடும் .

* 15 நிமிடம் கழித்து டிஷ்யூ பேப்பர் அல்லது வைப்ஸ் கொண்டு முகத்தில் இருக்கும் அதிகரித்த எண்ணெய்யைத் துடைக்கவும்.

* ஒரு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இப்படி செய்து வருவதால் விரைவில் நல்ல அற்புதமான பலன் கிடைக்கும்.

Related posts

சத்தான சுவையான கொள்ளு பொடி

nathan

அட்டகாசமான சுவை கொண்ட வெந்தயக் குழம்பு!!!

nathan

சுவையான வெஜிடபிள் கோதுமை ரவை சாலட்

nathan

தினமும் உணவில் நெய் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? தெரிஞ்சிக்கங்க…

nathan

வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள வெந்நீர்!…

nathan

இயற்கை தரும் கோடை பாதுகாப்பு வெள்ளரிக்காய்

nathan

உங்களுக்கு தெரியுமா உடலுக்கு அதிகளவு சக்தியை தரும் கொள்ளுவை பற்றி!

nathan

தொப்பையை குறைக்க உதவும் 15 உணவுகள் -தெரிந்துகொள்வோமா?

nathan

சுவையான பட்டாணி பச்சை பயிறு அடை

nathan